Published:Updated:

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... எந்த மாநிலம் எப்படி..?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... எந்த மாநிலம் எப்படி..?

மியூச்சுவல் ஃபண்ட்

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

ஆகாஷ்

நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்கிற ஆசை நியாயமானதுதான். அதை அடைய நம் மக்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் முதலீடு தங்கமும், வீடு, மனை வாங்குவதும் தான். குறுகிய காலத்தில் மிக அதிகமான லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள் ஐ.எஃப்.எஸ் போன்ற மோசடித் திட்டங்களில் பணத்தைக் கட்டி, முதலீட்டுக்கே மோசம் போய், அத்தனை பணத்தையும் இழக்கின்றனர்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும்போது பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைப் பலரும் பெறுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மியூச்சுவல் ஃபண்டில் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்திருந்தால், அதன்மூலம் கிடைக்கும் லாபம் எந்தளவுக்கு இருக்கும் என்பது நன்கு தெரியும்.

தமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றிய விழிப்புணர்வு முன்பைவிட இப்போது அதிகரித்திருக்கிறது என்றாலும், அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் இன்னும் அதிக மான மக்கள் இனிமேல்தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நோக்கி வர வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... எந்த மாநிலம் எப்படி..?

இந்திய அளவில் மியூச்சுவல் ஃபண்டில் செய்யப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால், மகாராஷ்டிரா மாநில மக்கள்தான் அதிக அளவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாக மொத்த தொகையில் 42.43% அந்த மாநிலத்தில் இருந்து மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முக்கியமாக இருக்கும் தொழில் நிறுவனங்களின் தலைமை அலுவலகம் மும்பை யில் இருப்பதால், அந்த நிறுவனங்களில் பணம் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும். இது கணிசமான தொகையாக இருந்தாலும், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் மியூச்சுவல் ஃபண்டில் அதிக அளவில் முதலீடு செய்வதை மறுக்க முடியாது என்கிறார்கள் மியூச்சுவல் ஃபண்ட் துறையைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவுக்கு அடுத்து, டெல்லியில் இருந்து 8.60% முதலீடு மியூச்சுவல் ஃபண்டுக்கு வந்திருக்கிறது. ஆனால், டெல்லி பல நிறுவனங்களின் தலைமை அலுவலகம் இருக்கவே செய்கின்றன. டெல்லிக்கு அடுத்தபடியாக, கர்நாடகா வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடான மொத்த தொகையில் 6.93% கர்நாடகாவில் இருந்து வந்திருக்கிறது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவிலும் பெரும் தொழில் நிறுவனங்களின் அலுவலகங்கள் இருப்பதன் காரணமாகவும் அங்கிருந்து அதிக தொகை முதலீடாகி இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

கர்நாடகாவுக்கு அடுத்து, குஜராத்தில் இருந்து 6.87% முதலீடு மியூச்சுவல் ஃபண்டில் இருக்கிறது. குஜராத் மாநில மக்கள் எப்போதுமே தொழில் செய்வதி2ல் கவனமாக இருப்பவர்கள் என்பதால், அவர்களும் இந்த முதலீட்டை அதிகம் நாடுபவர் களாகவே இருக்கிறார்கள்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகி இருக்கும் மொத்த தொகையில் மேற்கு வங்காள மாநிலத்தின் பங்கு 5.16 சதவிகிதமாக இருப்பது ஆச்சர்யத்தையே அளிக்கிறது. அந்த மாநிலத்தில் பியர்லெஸ், சாரதா சிட் ஃபண்ட் போன்ற நிறுவனங்கள் நடத்திய மோசடித் திட்டங்களால் அந்த மாநில மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டனர். அதனால், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உட்பட்டு நடக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பெருமளவில் தேர்வு செய்யத் தொடங்கி இருக்கின்றனர். மேற்கு வங்கத்துக்குப் பிறகு உ.பி. வருகிறது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடான மொத்தத் தொகையில் இந்த மாநிலத்தின் பங்கு 4.29% ஆகும்.

உ.பி-க்குப் பிறகுதான் நம் தமிழகம் வருகிறது. அதாவது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகி இருக்கும் மொத்த மக்கள் தொகையில் 4.25% தமிழகத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. தமிழகத்தைவிட உத்தரப்பிரதேசம் மிகப் பெரிய மாநிலம் என்றாலும், தமிழகத்தைவிட சிறிய அளவே அதிகமான முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக, ஹரியானா மாநிலத்தில் இருந்து 4.15% அளவுக்கு முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தைவிட கேரளா (1.07%), ஆந்திரா (1.20%), தெலங் கானா (1.68%), மத்தியப்பிரதேசம் (1.38%), பஞ்சாப் (1.12%), ராஜஸ் தான் (1.75%) ஆகிய மாநிலங்கள் குறைவான அளவில் மியூச் சுவல் ஃபண்டில் பங்களிப்பை வைத்திருப்பதை நாம் பார்த் தாலும், தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்கள் இன்னும் அதிக அளவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நோக்கி வந்தால் மட்டுமே எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தேவையான பணத்தைச் சேர்க்க முடியும் என்பது நிச்சயம்!

தமிழகத்தில் சென்னை முதலிடம்..!

தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில் இருந்துதான் மியூச்சுவல் ஃபண்டில் அதிகம் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.1,24,691 கோடி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, கோவையில் இருந்து ரூ.15,463 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை இருந்து ரூ.6,136 கோடியும், திருச்சியில் இருந்து ரூ.4,136 கோடியும், புதுச்சேரியில் இருந்து ரூ.3,915 கோடியும், சேலத்தில் இருந்து ரூ.3,431 கோடியும், காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.3,246 கோடியும், ஓசூரில் இருந்து ரூ.2,589 கோடியும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக, திருப்பூரில் இருந்து ரூ.1,672 கோடியும், வேலூரில் இருந்து ரூ.1,621 கோடியும் ஈரோட்டில் இருந்து ரூ.1,368 கோடியும், நெல்லையில் இருந்து ரூ.1,215 கோடியும், கும்பகோணத்தில் இருந்து ரூ.1,043 கோடியும் முதலீடாகி இருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக, தூத்துக்குடியில் ரூ.730 கோடியும், நாமக்கல்லில் ரூ.680 கோடியும், நாகர்கோவிலில் ரூ.611 கோடியும் கரூரில் 530 கோடியும் முதலீடாகி இருக்கிறது. பிற நகரங்களில் ரூ.500 கோடிக்கும் கீழேதான் முதலீடாகி இருக்கிறது. ஆக மொத்தத்தில், தமிழகத்தில் இருந்து ரூ.1,74,578 கோடி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகி இருக்கிறது!