Published:Updated:

ஆம்ஃபி சேர்மனாக மீண்டும் தேர்வான ‘பிர்லா’ பாலா..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 ஏ.பாலசுப்பிரமணியன்,  ராதிகா குப்தா
ஏ.பாலசுப்பிரமணியன், ராதிகா குப்தா

மியூச்சுவல் ஃபண்ட்

பிரீமியம் ஸ்டோரி

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி-யின் (AMFI) சேர்மனாக ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அவர் இந்தப் பதவியில் மூன்று ஆண்டுகள் வகிப்பார். ‘பிர்லா’ பாலா எனச் செல்லமாக அழைக்கப்படும் இவர், இந்தப் பதவியை இதற்கு முன் 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வகித்தார். இதற்கு முன் ஆம்ஃபி சேர்மனாக கோட்டக் மியூச்சுவல் ஃபண்டின் நிலேஷ் ஷா இருந்தார்.

ஏ.பாலசுப்பிரமணியன்,  ராதிகா குப்தா
ஏ.பாலசுப்பிரமணியன், ராதிகா குப்தா

ஆம்ஃபி துணைத் தலைவராக எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ராதிகா குப்தா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆம்ஃபி ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் (ARN) கமிட்டியின் தலைவராக ஐ.டி.எஃப்.சி ஏ.எம்.சி முதன்மைச் செயல் அதிகாரி விஷால் கபூர் தொடர்கிறார்.

‘பிர்லா’ பாலா, ஆம்ஃபி நிதிக் கல்விப் பிரிவின் (AMFI Financial Literacy Committee) தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நிலேஷ் ஷா ஆம்ஃபி மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக (Valuation Committee) தேர்வாகி உள்ளார்.

ராதிகா குப்தா, ஆஃம்பி இ.டி.எஃப் குழுவின் (ETF Committee) தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ஏ.எம்.சி-யின் தலைவர் சஞ்சய் சப்ரே செயல்பாடுகள் மற்றும் இணக்கக் குழுவின் (Operations & Compliance Committee) தலைவராகத் தொடர்கிறார்.

ஆஃம்பி சேர்மனாகத் தேர்வாகியிருக்கும் ‘பிர்லா’ பாலா, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை இந்தியாவில் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் கொண்டு செல்வார்; படித்த இளைஞர்களைப் பெருவாரியாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு அழைத்து வர இவர் நடவடிக்கை எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஆம்ஃபி துணைத் தலைவராகத் தேர்வாகி இருக்கும் ராதிகா குப்தா, பேசிவ் ஃபண்ட் பிரிவில் புதிய திட்டங்களைக் கொண்டுவந்து, அதன் வளர்ச்சிக்கு வழிவகுப்பார் எனவும் எதிர்பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு