Published:Updated:

GOLD ETF: ஒரே ஆண்டில் 27% அதிகரித்த தங்க இ.டி.எஃப் முதலீடு; என்ன காரணம்?

இ.டி.எஃப்

கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீட்டாளர்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் தங்கத்தில் முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கிராம் தங்கத்தை ஒரு யூனிட் என்கிற அடிப்படையில் முதலீட்டாளர்கள் வாங்கலாம். இந்தத் தங்கத்தின் மதிப்பு வர்த்தக நிலையை பொறுத்து ஏறலாம், இறங்கலாம்.

மக்கள் நேரடியாக தங்க நகைகள், தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகளை வாங்குவதை அதிகரித்திருந்தாலும், அதே நேரத்தில் டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்வதையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பாக, கோல்டு இ.டி.எஃப் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதை அதிகப்படுத்தியிருக்கிறார்கள் என்கிறது ஆம்ஃபி-ன் (AMFI) சமீபத்திய புள்ளிவிவரம்.

அதாவது, கடந்த 2021-ம் ஆண்டின் டிசம்பரில் கோல்டு இ.டி.எஃப் முதலீடுகளின் மதிப்பு 27% வரை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த திட்டங்கள் நிர்வகித்து வந்த மொத்த சொத்து மதிப்பு ரூ.14,480 கோடி. ஆனால், டிசம்பர் மாத முடிவில் இது ரூ.18,405 கோடியாக அதிகரித்துள்ளது.

இ.டி.எஃப்
இ.டி.எஃப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதே போல, டிசம்பர் மாத முடிவில் இந்த கோல்டு இ.டி.எஃப் திட்டங்களின் முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கையும் 9.7 லட்சத்திலிருந்து 32.1 லட்சமாக அதிகரித்துள்ளது.

கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீட்டாளர்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் தங்கத்தில் முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கிராம் தங்கத்தை ஒரு யூனிட் என்கிற அடிப்படையில் முதலீட்டாளர்கள் வாங்கலாம். இந்தத் தங்கத்தின் மதிப்பு வர்த்தக நிலையை பொறுத்து ஏறலாம், இறங்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில நிறுவனங்கள் அரை கிராம், வேறு சில நிறுவனங்கள் ஒரு கிராமை நூறில் ஒரு பங்கு என்பது போல் சுமார் ரூ.45 இருந்தால் கூட கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யும் வசதியை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகிறது.

பொதுவாக, உலக அளவில் மோசமான விஷயங்கள் நடக்கும் போது தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்தது. இதற்கு சமீபத்திய உதாரணம், கொரானா பாதிப்பு வேகமாக உயர்ந்த காலத்தில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5,400 வரை வேகமாக அதிகரித்ததை குறிப்பிடலாம்.

இ.டி.எஃப் திட்டம்.
இ.டி.எஃப் திட்டம்.

மேலும், பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கும் காலத்தில் தங்கம் விலை ஏற்றம் காணும். நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக லாபம் பெற தங்கத்தில் முதலீடு செய்ய நிதி ஆலோசகர்கள் சொல்கிறார்கள். ஒருவரின் முதலீட்டுக் கலவையில் தங்கத்தின் பங்கு சுமார் 10-15 சதவிகிதம் இருக்கலாம்.

தங்கத்தின் விலை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும்; அப்போது நல்ல லாபம் கிடைக்கும் என்கிற எண்ணத்தில் பலரும் கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism