Published:Updated:

ஃபண்ட் முதலீட்டாளர்களின் விவரங்களை ஆம்ஃபி சரிபார்க்கச் சொல்வது ஏன்?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

ஃபண்ட் முதலீட்டாளர்களின் விவரங்களை ஆம்ஃபி சரிபார்க்கச் சொல்வது ஏன்?

மியூச்சுவல் ஃபண்ட்

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களின் கூட்டமைப்பான ஆம்ஃபி (AMFI), முதலீட்டாளர்களின் நலன் காக்கும் மற்றொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கணக்கு எண் எனப்படும் ஃபோலியோ (Folio) எண்ணில் தரப்பட்டிருக்கும் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் ஐ.டி, வங்கிக் கணக்கு ஆகிய வற்றின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சேவை அளிக்கும் ஆர்.டி.ஏ (RTA) ஆகியவற்றை ஆம்ஃபி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ் நிறுவனர், www.gururamfinancialservices.com

மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை விற்று பணமாக்கும்போது, இரு காரணி அங்கீகாரத் தைச் (two-factor-authentication) செயல்படுத்த இது உதவும். இரு காரணி அங்கீகாரம் என்பது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ஐ.டி-க்கு ஒருமுறை கடவுச் சொல்லை (OTP) அனுப்பி, முதலீட் டாளர்தான் யூனிட்டுகளை விற்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கணக்கில் ஆன்லைன் மூலம் யூஸர் ஐ.டி, பாஸ்வேர்டு ஆகியவற்றைத் தந்து, உள்நுழைவது முதல் காரணி அங்கீகாரம் ஆகும். டீமேட் கணக்கில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ களுக்கு இந்தப் புதிய விதிமுறை இல்லை.

புதிய விதிமுறைகள் சொல்வதென்ன?

1. மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்கள், முதலீட்டாளர் மற்றும் அவரின் குடும்ப உறுப் பினர்களுக்குரியதாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர் என்பவர் துணைவர் (கணவன்/மனைவி), சார்ந்திருக்கும் சிறுவர்கள்/ பெற்றோர், மைனர் எனில், காப்பாளர் ஆகியோரைக் குறிக்கும். இவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு அந்த போன்நம்பர் சொந்தமாக இருக்கக் கூடாது.

2. இந்தச் சரிபார்ப்பு செயல்முறையை ஆர்.டி.ஏ-க்கள் மேற்கொள்ள வேண்டும். ஃபோலியோவுடன் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் (MFDs), ஆர்.டி.ஏ, பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மற்றும் அவர்கள் ஊழியர்களின் ஃபோன் எண், மின்னஞ்சல் ஐ.டி இணைக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். ஏதாவது முரண்பாடு இருந்தால், முதலீட்டாளரை ஆர்.டி.ஏ தொடர்புகொண்டு, சரியான முகவரி, போன் நம்பர், மெயில் ஐடி யை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஃபண்ட் முதலீட்டாளர்களின் விவரங்களை ஆம்ஃபி சரிபார்க்கச் சொல்வது ஏன்?

3. முதலீட்டாளரின் பான் (PAN) எண் அடிப் படையில் வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களுக்கு பல தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் ஐ.டி-கள் பயன் படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆர்.டி.ஏ சரிபார்க்கும். ஆர்.டி.ஏ-க்கள் முதலீட்டாளர் களின் மின்னஞ்சல் ஐ.டி மற்றும் மொபைல் எண்ணுக்கு உறுதிப்படுத்துதல் செய்தியை அனுப்பும். முதலீட்டாளர்கள் இணைப்பை க்ளிக் செய்வதன் மூலம் அதை அங்கீகரிக்க வேண்டும்.

4. மொபைல் எண்கள் 1 மற்றும் 5-க்கு இடையில் தொடங்குபவைத் தவறானவை. இதே போல், ‘000000000’ அல்லது ‘9999999999’ போன்ற போன் எண்கள் தவறானதாக இருக் கும். அதே நேரத்தில், ஆர்.டி.ஏ-கள் வெளிநாட்டு மொபைல் எண்களை சரிபார்க்க வேறுபட்ட செயல்முறையை உருவாக்க வேண்டும். செல்லுபடியாகாத மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐ.டி காரணமாக, ஆர்.டி.ஏ அனுப்பும் லிங்க்கை முதலீட்டாளர் அங்கீகரிக்கவில்லை எனில், ஆர்.டி.ஏ-க்கள் அத்தகைய முதலீட்டாளரை மின்னணு வழிமுறைகள் அல்லது கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும்.

5. @ விடுபட்ட மின்னஞ்சல் ஐ.டிகள், abc, xyz போன்ற முதலெழுத்துக்களைக் (initials) கொண்டவை, செல்லாத டொமைன்கள் மற்றும் தவறானவை ஆகும்.

6. மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐ.டி இரண்டும் சரிபார்க்கப்பட வேண்டும். அவற்றில் ஒன்று அங்கீகரிக்கப்படவில்லை எனில் மின்னஞ்சல் ஐ.டி-க்கு எதிராக ஃபோலியோவில் சரிபார்க்கப்படாதற்கு அடையாளமாக கொடி (flag) சிம்பல் இருக்கும்.

7. முதலீட்டாளர்கள் தங்களின் ஆர்.டி.ஏ-க் களை அணுகி தங்களில் போன் நம்பர், மெயில் ஐ.டி, முகவரி ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த விஷயத்தில் முதலீட்டாளர் களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ் தர்கள் உதவி செய்யலாம்.

8. அனைத்து சரிபார்ப்புகளும் செப்டம்பர் 30, 2022-க்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆர்.டி.ஏ-க்கள் அவற்றின் வேலையை ஆரம்பிக்கும் முன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்களின் ஃபோலியோ எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் நம்பர், மெயில் ஐ.டி-யை விரைந்து சரிபார்த்துக்கொள்வது மூலம் பணம் எடுப்பதை எளிதாக்கிக்கொள்ள முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism