சம்பளத்தை சேமிக்கிறீர்கள், ஓகே... ஆனால், அதை முதலீடாக்க வேண்டாமா? - வழிகாட்டும் கட்டணமில்லா வெபினார்

வருமானத்தை சேமிப்பதுடன் நிற்காமல் அதை முதலீடாக மாற்றுவதற்கான பயனுள்ள ஆலோசனைகளை வழங்க அவள் விகடன் முயற்சி எடுத்துள்ளது.
'வேலைக்குப் போய் சம்பாதிச்சு போடுறதோட சரி' என்ற மனப்பாங்கில்தான் பெரும்பான பெண்கள் இருந்துகொண்டிருக்கிறோம். நிதி நிர்வாகம், சேமிப்பு, முதலீடு போன்ற விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. சம்பாதிப்பதைவிட அதை சரியாக நிர்வாகம் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.

வருமானத்தை சேமிப்பதுடன் நிற்காமல் அதை முதலீடாக மாற்றுவதற்கான பயனுள்ள ஆலோசனைகளை வழங்க அவள் விகடன் ஒரு முயற்சியை எடுத்துள்ளது.
பெண்கள் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் நாணயம் விகடன் இணைந்து 'உங்கள் சேமிப்பை சிறந்த முதலீடாக மாற்றுங்கள்!' என்ற பெண்களுக்கான நிதி ஆலோசனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
மார்ச் 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஆன்லைனில் நிகழ்வு நடைபெறும்.

நிதிச் சேவையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்குவார்.
சர்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானரான இவர் இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவில் வாழும் என்.ஆர்.ஐகளுக்கு தனிப்பட்ட முறையில் முதலீட்டு ஆலோசனை வழங்கி வருகிறார். சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.
நிகழ்ச்சியில் சேமிப்பை முதலீடாக மாற்ற சிறந்த வழிகள், சேமிப்பில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தும் பெரிய வித்தியாசங்கள், நிதி நிர்வாகத்தை திறன்படச் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகளை வழங்குவார். வாசகர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கும் நேரடியாக பதில் அளிப்பார்.

கட்டணமில்லா வெபினாரில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.