Published:Updated:

ஏன் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்?

 ஏ.கே.நாராயண், ஐ.வி.சுப்ரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.கே.நாராயண், ஐ.வி.சுப்ரமணியம்

முதலீடு

ஏன் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்?

முதலீடு

Published:Updated:
 ஏ.கே.நாராயண், ஐ.வி.சுப்ரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.கே.நாராயண், ஐ.வி.சுப்ரமணியம்

நாணயம் விகடன் மற்றும் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘சரியான முறையில் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்துவம்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தின.

முதலில் பேசிய குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாக இயக்குநர் ஐ.வி.சுப்ரமணியம், ‘‘இந்தியாவில் 1990-ம் ஆண்டில் ஒரு குடும்பத்தின் ஆண்டு சராசரி செலவு 24,000 ரூபாயாக இருந்தது. பணவீக்கம் ஆண்டு தோறும் சராசரியாக 10% உயர்ந்ததால், 2020-ல் குடும்பத்தின் செலவு 4,28,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த விலைவாசி உயர்வைச் சமாளிக்க முதலீடு செய்வது மிக அவசியமாகும்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தை சுமார் 15% வருமானம் கொடுத்திருக்கிறது. இதே காலகட்டத்தில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் 6%, தங்கம் 9.5% வருமானம் தந்திருக் கின்றன. அந்த வகையில், முதலீட்டைப் பிரித்துச் செய்வதன் மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதுடன், சராசரி பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் பெற முடியும்’’ என்றார்.

 ஏ.கே.நாராயண், ஐ.வி.சுப்ரமணியம்
ஏ.கே.நாராயண், ஐ.வி.சுப்ரமணியம்

அஸெட் அலொகேஷனின் முக்கியத்துவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண், ‘‘பொதுவாக, முதலீட்டாளர்கள் ஒரு திட்டத்தின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்றுதான் பார்க்கிறார்கள். அனைத்து முதலீட்டுப் பிரிவு களும் எப்போதும் ஒரே அளவில் வருமானம் தரும் எனச் சொல்ல முடியாது. நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரும் ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகமாகவும், அடுத்து கடன் ஃபண்டுகள், தங்கத்தில் கலந்து முதலீடு செய்வதன் மூலம் சராசரியாக நல்ல வருமானம் கிடைக்கும்” என்றார்.

தங்கத்தில் ஒருவர் எவ்வளவு முதலீடு செய்ய லாம் என்கிற கேள்விக்கு ஐ.வி.சுப்ரமணியம், ‘‘ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப இது மாறும். குறைந்தது 5% முதல் அதிகபட்சம் 20% வரை ஒருவர் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதை பிசிக்கல் மற்றும் டிஜிட்டல் முறையில் கலந்து முதலீடு செய்யலாம்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவைப் பார்க்க: http://bittly.in/HwU409kO6JY=

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism