Published:Updated:

மோசடியில் சிக்கிய ஃபண்ட் மேனேஜர்கள்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

முதலீட்டாளர்...
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டாளர்...

முறைகேடு

மோசடியில் சிக்கிய ஃபண்ட் மேனேஜர்கள்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

முறைகேடு

Published:Updated:
முதலீட்டாளர்...
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டாளர்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மிகப் பாதுகாப்பானது என்றாலும், அவ்வப் போது சில நெகட்டிவ்வான சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. சுமார் ரூ.2.5 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை நிர்வகிக்கும், நாட்டின் ஏழாவது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள இரண்டு ஃபண்ட் மேலாளர்கள் ‘ஃப்ரன்ட் ரன்னிங்’ (Front Running) முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட விரேஷ் ஜோஷி, தீபக் அகர்வால் ஆகிய இருவரும் ஃபண்ட் முடிவுகள் தொடர்பான தகவல்களை வெளியில் பகிர்ந்து அதன் மூலம் ஆதாயம் அடைந்துள்ளனர். அதிக பட்சமாக ரூ.1,000 கோடி வரையிலான மதிப்புக்கு இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்த முறைகேட்டில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ சந்தரேஷ் நிகம் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மோசடியில் சிக்கிய ஃபண்ட் மேனேஜர்கள்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஃபண்ட் மேனேஜர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். சந்தைக் கட்டுப்பாட்டு ஆணை யமான செபி இந்த முறைகேடு தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் அறிக்கைப்படி ஜோஷி என்பவர் ஆக்ஸிஸ் கன்ஷம்சன், ஆக்ஸிஸ் பேங்கிங், ஆக்ஸிஸ் நிஃப்டி, ஆக்ஸிஸ் டெக்னாலஜி (Axis Consumption, Axis Banking, Axis Nifty & Axis Technology) ஆகிய நான்கு ஃபண்டுகளின் மேலாளராகவும், அகர்வால் என்பவர் ஆக்ஸிஸ் ஆர்பிட்ராஜ் ஃபண்ட், ஆக்ஸிஸ் குவான்ட் ஃபண்ட், ஆக்ஸில் வேல்யூ ஃபண்ட் (Axis Arbitrage Fund, Axis Quant Fund & Axis Value Fund) ஆகிய மூன்று ஃபண்டுகளின் மேலாளராகவும் இருந்துள்ளனர்.

இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும், இந்த ஃபண்டுகளின் நிலை என்ன என்பது குறித்து நிதி ஆலோசகர் மை அஸெட் கன்சாலிடேஷன் (My asset Consolidation) நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் பார்த்தசாரதி யிடம் கேட்டோம்.

“ஃபண்ட் மேலாளர்கள் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட் குழு எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து முதலீடுகளை மேற்கொள்வார்கள். ஆனால், அந்த முடிவுகளைத் தங்க ளுடைய சொந்த லாபத்துக்குப் பயன் படுத்துவது ‘ஃப்ரன்ட் ரன்னிங்’ முறைகேடாகும். ரிசர்ச் குழு தேர்வு செய்த பங்குகளை இவர்கள் தங்கள் சொந்த அக்கவுன்டில் அல்லது அவர் களுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் புரோக்கர் வழியாக முதலில் வாங்கிவிட்டு, பிறகு அந்த ஃபண்ட் நிறுவனம் முதலீடு செய்தால், அந்தப் பங்கு விலை உயர்ந்து, அதிக லாபம் பார்ப்பார்கள்.

சுரேஷ் பார்த்தசாரதி
சுரேஷ் பார்த்தசாரதி

இந்தச் சிக்கலில் ஈடுபட்டிருக்கும் இரு ஃபண்ட் மேனேஜர்கள் சேர்ந்து மொத்தமாக ஏழு பண்டை நிர்வகிக் கிறார்கள். இதில் நான்கு இ.டி.எஃப் வகையைச் சார்ந்தவை. மீதமுள்ள மூன்று ஃபண்டுகள் ஓப்பன் எண்டட் வகையைச் சார்ந்தவை. இ.டி.எஃப் சார்ந்த ஃபண்டுகளில் ரூ.220 கோடியும், ஓப்பன் எண்டட் ஃபண்டுகளில் ரூ.8,331 கோடியும் உள்ளன. ஆர்பிட்ரேஜ் பண்ட் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருப் பதால், இதனால் முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டம் வர வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

அதே போல், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்கள் முதலீட்டைத் தொடர்ந்து வைத்துக்கொள்ளலாமா அல்லது விற்று விடலாமா என்கிற கேள்விக்கான பதில் என்னவெனில், இப்போது நடந்திருப்பது தனிமனித ஒழுக்கக்கேடு; இது ஒட்டு மொத்த ஆக்ஸிஸ் நிறுவனத்தின் பிரச்னை அல்ல. மேலும், முழுமையான விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே, முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே சரி. மேலும், இந்த சம்பவத் துக்குப் பிறகும், மேலே சொல்லப்பட்ட ஃபண்டுகள் பெரிய அளவில் வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை. இதிலிருந்து முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த நிகழ்வு பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்று புரிந்துகொள்ளலாம்.

இதுபோல ஒரு சம்பவம் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்டிலும் நடந்தது. ஆனால், பெரிய பிரச்னையைச் சந்திக்கவில்லை. என்றாலும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் மீது கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் நடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என்கிற வேண்டுகோளுடன் பேசி முடித்தார் சுரேஷ் பார்த்தசாரதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism