Published:Updated:

சைடு பிசினஸில் சம்பாதிக்க சில அடிப்படைக் குறிப்புகள்!

தேவையில்லாதவை என்று பட்டியலிட்டால்... பெரிய அளவிலான பணமோ, நேரமோ உங்களுக்குத் தேவைப்படாது. மேலும், சைடு பிசினஸ் நடத்துவதற்கு எம்.பி.ஏ டிகிரி எல்லாம் தேவையில்லை

business
business

சம்பாதிக்கிற வருமானம் போதவில்லை என்கிற மனக்குறை பலருக்கும் உண்டு. வேலைக்குப் போகக் கொஞ்சம் நேரம் இருக்கிறது; பணம் பண்ணுகிற பிசினஸ் ஐடியாவும் இருக்கிறது என்கிறவர்களுக்கு சைடு பிசினஸ் இன்னும் அதிக வருமானத்தை நிச்சயம் ஏற்படுத்தித் தரும். நேரம் உண்டு, தைரியமும் உண்டு, ஆனால், பிசினஸுக்கான ஐடியாதான் இல்லை என்கிறீர்களா? விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2nJYQOK

'அரசாங்கப் பணியாளர், நண்பர் ஒருவரின் திருமணத்தை போட்டோ எடுக்கப்போக, அனைவரும் அந்தப் போட்டோக்கள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி தங்கள் வீட்டு விசேஷங்களுக்கும் தொடர்ந்து கூப்பிட, மாதம் 3,500 டாலர் வரை போட்டோகிராபியிலிருந்து வருமானம் வர ஆரம்பித்ததாம். இதுபோல, பலரும் பல விஷயங்களை எதேச்சையாகச் செய்யப்போக, அதுவே நல்லதொரு உபரி வருமானத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.'

பல சைடு பிசினஸ்களுக்கு, பணியாளர்கள், அசிஸ்டென்டுகள், பிசினஸ் பார்ட்னர்கள் என்றெல்லாம் தேவைப்படாது.

- இப்படி பல்வேறு உதாரணங்களை உள்ளடக்கிய புத்தகம் 'சைடு ஹஸுல்'. கிரிஸ் குயில்பேயு என்பவர் எழுதிய இந்தப் புத்தகம், நாம் பார்க்கும் முழுநேர வேலையை விட்டு விடாமலேயே சைடு பிசினஸ் ஒன்றை உருவாக்கிக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச்சொல்கிறது.

"சைடு பிசினஸை ஆரம்பிக்க முதலில் லாபகரமான ஐடியாக்களை உருவாக்க வேண்டும். பின்னர் அப்படி உருவாக்கப்பட்ட ஐடியாக்களிலிருந்து அந்தச் சமயத்தில் வெற்றி பெறக்கூடிய ஐடியாக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், சைடு பிசினஸ் என்பது உங்களுடைய ஆக்‌ஷனிலிருந்து உருவாவது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் ஐடியாக்கள் சூப்பரானவையாக இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சைடு பிசினஸில் சம்பாதிக்க சில அடிப்படைக் குறிப்புகள்!

தேவையில்லாதவை என்று பட்டியலிட்டால்... பெரிய அளவிலான பணமோ, நேரமோ உங்களுக்குத் தேவைப்படாது. மேலும், சைடு பிசினஸ் நடத்துவதற்கு எம்.பி.ஏ டிகிரி எல்லாம் தேவையில்லை. பல சைடு பிசினஸ்களுக்கு, பணியாளர்கள், அசிஸ்டென்டுகள், பிசினஸ் பார்ட்னர்கள் என்றெல்லாம் தேவைப்படாது. அதேபோல், ஒரு பிசினஸை ஆரம்பிக்கத் தேவையான முன்னனுபவமெல்லாம் தேவையில்லை. சிலசமயம், உங்களிடம் இருக்கும் அதிகமான பணம், நேரம், படிப்பு எல்லாம் உங்கள் சைடு பிசினஸின் வெற்றிக்கு ஓர் இடைஞ்சலாகக்கூட இருந்துவிடும் வாய்ப்புள்ளது" என்று எச்சரிக்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகம் சைடு பிசினஸை உருவாக்கிக் கொள்வதற்கான 27 நாள் (ஐந்து வாரங்களாகப் பிரிக்கப்பட்ட) திட்டத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. அதை முழுமையாக அறிய > கூடுதல் வருமானம்... சைடு பிசினஸ் செய்து சம்பாதிக்கத் தயாரா? https://www.vikatan.com/news/general-news/to-increase-your-income-additional-business-may-help-you

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |

Footer Ads