Published:Updated:

மற்ற முதலீடுகளைவிட மியூச்சுவல் ஃபண்ட் எப்படி சிறந்தது?

சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

சேமிப்பும் முதலீடும் - 15

மற்ற முதலீடுகளைவிட மியூச்சுவல் ஃபண்ட் எப்படி சிறந்தது?

சேமிப்பும் முதலீடும் - 15

Published:Updated:
சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், கம்பெனி டெபாசிட், ஆர்.டி, கடன் பத்திரங்கள் உள்ளிட்ட இதர முதலீடுகளுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பல வகைகளில் சிறந்ததாக இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

தொழில்முறை நிதி மேலாண்மை, முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளுதல், முதலீடு செய்வது சுலபம், சிறிய முதலீட்டுத் தொகை, குறைவான முதலீட்டுச் செலவு, வரி அணுகூலங்கள் மற்றும் வரிச் சலுகை எனப் பல நன்மைகளை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் ஒருவர் பெற முடியும்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

1. தொழில்முறை நிதி மேலாண்மை

இந்தத் துறையில் நிரூபிக்கப்பட்ட, நிபுணத் துவம் கொண்ட நிதி மேலாளர்கள் (Fund Managers) மூலம் கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகள் தேர்வு செய்யப்பட்டு முதலீடு செய்யப்படுகிறது. இதனால், கூடிய வரையில் தரமான பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், ஒவ்வொரு திட்டத்தையும் நிர்வகிக்க தனியே ஒரு நிதி மேலாளர் இருப்பார். அவருக்குக் கீழே பகுப்பாய்வு குழு இருக்கும். இவர்கள் அனைவரும், கடன் சந்தை மற்றும் பங்குச் சந்தையைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருவார்கள். இவர்களுக்கு சந்தை ஏறினாலோ, இறங்கினாலோ என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும். அந்த வகையில் அவர்கள் நல்ல வருமானத்தை முதலீட்டாளர் களுக்குத் தந்து வருகிறார்கள்.

2. முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளுதல்

முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்கும் ஒரு வகை முதலீட்டு உத்தி, முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளுதல் (Diversification). அதாவது, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டாளர் களின் சிறிய அளவிலான பணத்தைப் பல்வேறு கடன் பத்திரங்கள் மற்றும் பல நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எடுத்துக் கொண்டால், அதன் முதலீட்டுத் தன்மைக்கு ஏற்ப சுமார் 20 - 25 கடன் பத்திரங்கள் அல்லது 25 - 50 பங்குகளில் முதலீட்டைப் பிரித்து செய்யப்பட்டிருக்கும். இதில் ஒன்றிரண்டு சரியாகச் செயல்படவில்லை என்றாலும் பெரிதாக வருமான இழப்பு இருக்காது.

3. முதலீடு செய்வது சுலபம்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது எளிது. பான், ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு இருந்தால் போதும். பங்கு தரகு நிறுவனங்கள், கேஃபின்டெக், கேம்ஸ் போன்ற ஆர்.டி.ஏகள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களின் கிளை அலுவலகங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு உதவும் நிறுவனங்களின் இணையதளங்கள், வங்கிகள், மியூச்சுவல் விநியோகஸ்தர்கள் ஆகியோரின் மூலமும் முதலீட்டை மேற்கொள்ள முடியும். மேலும், ஆன்லைன் மூலமும் முதலீட்டை ஆரம்பித்து விட முடியும்.

4. சிறிய முதலீட்டுத் தொகை

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யச் சிறிய தொகை போதும். இப்போது ரூ.100, ரூ.500, ரூ.1,000 இருந்தாலே முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். இந்தக் குறைந்தபட்சத் தொகை நிறுவனத்துக்கு நிறுவனம், திட்டத்துக்கு திட்டம் மாறுபடும். எப்படி இருந்தாலும் மாதம் ரூ.1,000 முதலீடு செய்யும் வசதி பெரும்பாலான திட்டங்களில் இருக்கின்றன.

மற்ற முதலீடுகளைவிட மியூச்சுவல் ஃபண்ட் எப்படி சிறந்தது?

5. குறைவான முதலீட்டுச் செலவு

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பங்குகளை வாங்கும் மற்றும் விற்கும். இதனால், பரிவர்த்தனை செலவு ஒப்பீட்டளவில், தனிநபர் ஒருவர் பங்குகளை வாங்க, விற்க செய்யும் செலவைவிட குறைவாக இருக்கிறது. மேலும், பலத்த போட்டி காரணமாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செலவு விகிதத்தைக் குறைவாக வைக்கவே விரும்புகின்றன. பொதுவாக, கடன் ஃபண்டுகளில் சுமார் 1%, பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் செலவு விகிதம் 1 - 2 சதவிகிதமாக உள்ளது.

6. வருமான வரி அனுகூலங்கள்

கடன் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள் வெவ்வேறாக வரி விதிப்புகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.கடன் ஃபண்டுகள் என்கிறபோது, ஒருவர் எந்த வருமான வரம்பில் வந்தாலும் மூன்றாண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால முதலீட்டுக்கு பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு, 20% வரி கட்டினால் போதும். அதுவே ஈக்விட்டி ஃபண்ட் என்கிறபோது ஓராண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு ஆதாயத்தில் நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரி இல்லை. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 10% வரி கட்டினால் போதும். ஈக்விட்டி ஃபண்டுகளில் ஓராண்டுக்கு உட்பட்ட குறுகிய கால முதலீட்டுக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் 15% வரி கட்டினால் போதும். வங்கி எப்ஃ.டி போல அல்லாமல், மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் எப்போது யூனிட்டுகளை விற்று பணமாக்குகிறமோ, அந்த ஆண்டில் வரி கட்டினால் போதும்.

7. வரிச் சலுகை

பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டம் என்கிற இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும். இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 ஆகும்.

இருக்கிற வருமான வரி சேமிப்புத் திட்டங்களிலே இதுதான் குறைவான லாக்இன் பீரியட் (மூன்று ஆண்டுகள்) கொண்டதாகும். இந்த வரி சேமிப்பு ஃபண்ட் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட சுமார் 5% கூடுதல் வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

7. எளிதில் பணமாக்குதல்

மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்டுகளை பங்குச் சந்தை (டீமேட் மூலம் முதலீடு செய்திருந்தால்) அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் விற்று பணமாக்க முடியும். ஃபண்டின் முதலீட்டுத் தன்மை யைப் பொறுத்து உடனடியாக, 1, 2, 3 வணிக தினங்களுக்குள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்து சேர்ந்துவிடும். மேலும், பணத் தேவைக்கேற்ப யூனிட்டுகளை விற்றுக்கொள்ளும் வசதி இருக்கிறது.

8. அதிக வருமானம்

மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரையில் அது கடன் ஃபண்டாக இருந்தாலும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டாக இருந்தாலும் மற்ற முதலீடுகளை விட அதிக வருமானத்தை குறிப்பாக, பணவீக்க விகிதத்தை விட அதிகமாக எதிர்பார்க்கலாம். காரணம், அதில் இருக்கும் வரி அனுகூலம் மற்றும் நிதி மேலாளர் களின் சிறப்பான வருமானம் ஆகும். மிக நீண்ட காலத்தில் நியாயமான ரிஸ்க்கில் செல்வம் சேர்க்க ஈக்விட்டி ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு உதவி வருகின்றன.

9. ஒழுங்குமுறை

நாட்டிலிருக்கும் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களும் செபி அமைப்பு மூலம் நெறிப்படுத்தப்படுகின்றன. செபியின் பல்வேறு விதிமுறை களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதை மீறி இந்த ஒழுங்குமுறை முதலீட்டாளர் களின் நலன்களைப் பாதுகாக்கிறது.

10. வெளிப்படைத் தன்மை

மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரை, வெளிப்படைத் தன்மை (Transparency) மிக அதிகம். அந்த ஃபண்டில் முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டப்பட்ட பணம், எந்தெந்த கடன் பத்திரங் கள், பங்குகள் என்பதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகின்றன. இது செபியின் விதிமுறைப்படி கட்டாயமாகும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட் டில் அந்தக் குறிப்பிட்ட ஃபண்டின் ரிஸ்க் வெளிப்படையாகத் தெரியும். இதற்காக செபி ரிஸ்க்கோ மீட்டர் (Riskometer) என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மியூச்சுவல் ஃபண்டில் எந்த அளவுக்கு மூலதன இழப்பு ஏற் படும் ரிஸ்க் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக செபி அமைப்பு இந்த ரிஸ்க்கோ மீட்டரை வடிவமைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஒரு ஃபண்டில் எந்த அளவுக்கு ரிஸ்க் இருக்கிறது என்பதை உடனடி யாகத் தெரிந்துகொள்ள முடியும்.

11. ஒவ்வொரு நிதி இலக்குக்கும் ஏற்ற திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும் நோக்கங்களின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக, முதலீட்டாளர்களை ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், மிதமான ரிஸ்க் எடுக்கும் முதலீட் டாளர்கள், அதிக ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் எனப் பிரிக்கலாம். இந்த முதலீட்டாளர்களின் தேவைகளை மனதில் வைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிறுவனங்கள் வடிவமைத்து வைத்திருக்கின்றன.

12. தொடர் முதலீடு மற்றும் மொத்த முதலீடு

மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒருவர் சீரான முதலீட்டு முறை என்கிற எஸ்.ஐ.பி மற்றும் மொத்தமாக முதலீடு செய்யும் லம்சம் என்கிற வகைகளில் முதலீடு செய்யலாம். ஒருவர் இந்த இரு முறைகளிலும்கூட இணைந்து முதலீடு செய்ய முடியும். மொத்த முதலீடாகக் குறிப்பிட்டத் தொகையைச் செய்துவிட்டு, அதன் பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் (வாரம், மாதம், காலாண்டு) தொடர்ந்து எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பித்துவிட்டு, இடையில் மொத்த முதலீட்டை மேற்கொள்ள முடியும். இதர முதலீடுகளான தொடர் சேமிப்புத் திட்டம் (ஆர்.டி), ஃபிக்ஸட் டெபாசிட் ஆகியவற்றில் இப்படி முதலீடு செய்ய முடியாது.

(முதலீடு செய்வோம்)

புதிய மியூச்சுவல் ஃபண்ட் லாபமா?

நம்மவர்களுக்கு எப்போதும் புதிதாக அறிமுகமாகும் பொருள்கள் மீதுதான் அதிக ஆர்வம். அந்த ஆர்வத்தை மியூச்சுவல் ஃபண்டிலும் பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்டில் புதிதாகத் திட்டத்தை அறிமுகம் செய்வதை நியூ ஃபண்ட் ஆஃபர் (New Fund Offer – NFO) என்பார்கள். இப்படி புதிதாக திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது யூனிட்டுகளை அதன் முகமதிப்பு 10 ரூபாயிலேயே வாங்கலாம். இதனால், அதிக யூனிட்டுகள் கிடைக்கும். இது வளர்ந்து ரூ.11, ரூ.12 என உயர்ந்துகொண்டே இருக்கும். வளர்ந்த நிலையில் வாங்கும்போது குறைந்த யூனிட்டுகளே கிடைக்கும். பலர் அதிக யூனிட்டுகள் கிடைக்கும் என்பதற்காக என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்கிறார்கள்.

இதற்கு பதில் நன்றாகச் செயல்படும் திட்டங்களில் முதலீடு செய்வது அதிக லாபகரமாக இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், புதிய கருத்து (Theme) அடிப்படையில் ஃபண்ட் வெளிவரும் போது, அதில் என்.எஃப்.ஓவில் முதலீடு செய்யலாம்!