Published:Updated:

அவசரகால நிதி... லிக்விட் ஃபண்ட், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்... எந்த முதலீடு சரி..?

அவசரகால நிதி
பிரீமியம் ஸ்டோரி
அவசரகால நிதி

E M E R G E N C Y F U N D

அவசரகால நிதி... லிக்விட் ஃபண்ட், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்... எந்த முதலீடு சரி..?

E M E R G E N C Y F U N D

Published:Updated:
அவசரகால நிதி
பிரீமியம் ஸ்டோரி
அவசரகால நிதி

அவசரகால நிதி (Emergency funds) என்பதை நம் வாழ்வின் உயிர் காப்பான் (Lifesaver) என்றே சொல்லலாம். இந்த அவசர கால நிதி என்று வருகிறபோது, பாதுகாப்பு, எளிதில் பணமாக்கும் தன்மை மற்றும் வருமானம் (Safety, Liquidity and Return) ஆகிய மூன்று காரணிகளும் முக்கியம். இந்த மூன்று காரணிகளைக் கவனித்து முதலீடு செய்யும்போது லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் (கார்ப்பரேட் எஃப்.டி)... இவற்றில் எது பெஸ்ட் என்ற குழப்பம் ஏற்படுகிறது. இந்தக் குழப்பத்துக்கான சரியான விளக்கம் இதோ...

த.ராஜன் 
இணை நிறுவனர், 
Holisticinvest
ment.in
த.ராஜன் இணை நிறுவனர், Holisticinvest ment.in

பொதுவாக, லிக்விட் ஃபண்ட் என்கிறபோது ஒரு ஃபண்டில் திரட்டப்படும் நிதியானது பல நிறுவனங்களின் மிகக் குறுகியகால ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மற்றும் கடன் பத்திரங்களில் பிரித்து செய்யப் படுவதால், ரிஸ்க் குறைகிறது. ஆனால், ஒரு நிறுவனத்தின் கம்பெனி டெபாசிட் என்கிறபட்சத்தில், ரிஸ்க் அதிகமாக இருக்கிறது. அவை பாதுகாப்பற்றதாகவும் அதிக ரிஸ்க்கைக் கொண்டதாகவும் இருக்கிறது.

சிலர், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் நல்ல வருமானம் வருபவையாக இருக்கின்றன என்கிறார்கள். அண்மைக் காலத்தில் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைந்து வருகிறது. இதில் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டும் விதிவிலக்கல்ல. மேலும், வட்டி வருமானத்துக்கு டி.டி.எஸ் பிடித்துக் கொண்டுதான் தருவார்கள். வருமான வரி வரம்புக்குள் வரவில்லை எனில், பிடிக்கப்பட்ட டி.டிஎஸ்-ஐ வரிக் கணக்கு தாக்கல் செய்து ரீஃபண்டாக வாங்க வேண்டும். இதற்கு நேரம், பணம் செலவாகும்.

அதைவிட முக்கியமான விஷயம், கம்பெனி டெபாசிட்டிலிருந்து நம் தேவைக்கு விரைந்து பணம் எடுக்க முடியாது. அதன் முதிர்வுக் காலம் வரைக்கும் காத்திருக்க வேண்டும். இடையில் எடுத்தால், வட்டி வருமானம் குறைவதுடன், அபராதமும் இருக்கும்.

ஆனால், லிக்விட் ஃபண்டில் இந்த முதிர்வுக் காலம் வரைக்கும் காத்திருக்கும் பிரச்னை இல்லை. எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு பணம் எடுத்துக்கொள்ள முடியும். அதுவும் எவ்வளவு தேவையோ, அந்தளவுக்கு பகுதி பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். உதாரணமாக, லிக்விட் ஃபண்ட் ஒன்றில் ரூ.2 லட்சம் இருக்கிறது. அதில் ரூ.75,000-தான் இப்போது தேவை எனில், அந்தத் தொகையை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். குறைந்தது 24 மணி நேரம் முதல் அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் பணம் நம் கணக்குக்கு வந்துவிடும் என்பது கூடுதல் சிறப்பு.

அவசரகால நிதி... லிக்விட் ஃபண்ட், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்... எந்த முதலீடு சரி..?

நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ஓரிரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், லிக்விட் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஹெச்.டி.எஃப்.சி போன்ற முன்னணி வங்கிகளுடன் இணைந்து ஏ.டி.எம் கார்டுகூட அளித்திருக்கின்றன. இதைக் கொண்டு மொத்தத் தொகையில் பாதியை எப்போது வேண்டுமானலும் ஏ.டி.எம் மூலம் எடுத்துக்கொள்ளலாம். மீதித் தொகையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் எழுதித் தந்து ரெடீம் செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் கணக்கு இருக்கும் பட்சத்தில், சில லிக்விட் ஃபண்டி லிருந்து வங்கிக் கணக்குக்கு மொத்த தொகையையும் சுமார் 30 நிமிடத்துக்குள் மாற்றும் வசதி இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கணக்கு எண்ணான ஃபோலியோ இருந்தால், தொடர்பு டைய மியூச்சுவல் ஃபண்டின் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் கணக்கை முதலீட்டாளரே ஏற்படுத்திக்கொள்ள முடியும். சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மொபைல் செயலி (App) மூலம் நொடியில் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யும் வசதி மற்றும் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப் படுத்தியிருக்கிறது.

அவசரகால நிதியைப் பொறுத்த வரை லிக்விடிட்டி என்கிற எளிதில் பணமாக்கும் தன்மைதான் (அதிக வருமானத்தைவிட) மிக முக்கியம். அந்த வகையில் கம்பெனி டெபா சிட்டுகளைவிட லிக்விட் ஃபண்ட் ஏற்புடையதாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism