Election bannerElection banner
Published:Updated:

Bitcoin: ₹10,000 கோடி முதலீடு செய்த எலான் மஸ்க்... உச்சம் தொட்ட மதிப்பு... என்ன நடக்கிறது?

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

பிட்காயின் பற்றி உலகமெங்கிலும் பேச வைத்திருக்கிறார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்.

இப்போதெல்லாம் அடிக்கடி பேசக்கூடிய ஒரு விஷயமாக மாறிவிட்டது 'பிட்காயின்'. கடந்த டிசம்பர் 17-ம் தேதி பிட்காயின் விலை முதன்முறையாக 20,000 டாலரைக் கடந்து, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அன்று ஒரே நாளில் மட்டும் 10.5% ஏற்றம் கண்டு, 23,655 டாலருக்கு பிட்காயின் வர்த்தகமானது. உலக நாடுகளின் கவனம் முழுவதும் பிட்காயின் பக்கம் திரும்பியது அன்றுதான்.

'பிட்காயின்'? #Bitcoin
'பிட்காயின்'? #Bitcoin

மறுபடியும் பிட்காயின் பற்றி, உலகமெங்கிலும் பேச வைத்திருக்கிறார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க். கிரிப்டோ கரன்சியான பிட்காயினில் சுமார் 10,000 கோடி ரூபாயை (1.5 பில்லியன் டாலர்) முதலீடு செய்திருப்பதாகவும், இனி தங்கள் நிறுவனங்களில் பொருள்கள், சேவைகளை பிட்காயின் மூலம் செலுத்திப் பெறலாம் என எரெலான் மஸ்க் அறிவித்துள்ளார். இவருடைய அறிவிப்பின் மூலம் பிட்காயினின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

ஏற்றத்தில் பிட்காயின் மதிப்பு... 18% ஜி.எஸ்.டி விதிப்பு சரியா..? - உஷார் இளைஞர்களே உஷார்!

இந்த அறிவிப்பு வெளியான பிப்ரவரி 8-ம் தேதியான நேற்று மட்டுமே பிட்காயின் மதிப்பு 16% அதிகரித்து, வரலாற்றில் முதன்முறையாக 44,000 டாலரை கடந்து வர்த்தகமாகி வருகிறது. எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால், அமெரிக்க பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலையும் 1.3% வரை அதிகரித்து வர்த்தகமாகின.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, உலக நாடுகளின் பொருளாதாரமும், பங்குச் சந்தை முதலீடுகளும் பலத்த அடி வாங்கியிருந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் பிட்காயின் முதலீடு 220% வளர்ச்சி கண்டிருக்கிறது. இதனால் மற்ற முதலீட்டாளர்களைப்போல இந்திய முதலீட்டாளர்களின் கவனமும், இப்போது பிட்காயின் முதலீட்டின் பக்கம் திருப்பியிருக்கிறது.

பிட்காயின்
பிட்காயின்

பல்வேறு நாடுகளில் இந்த விர்ச்சுவல் கரன்சியைத் தடை செய்துள்ள நிலையிலும், இதன் வளர்ச்சி ஏற்றம் கண்டு வருவதால், தற்போது பல நாடுகளும் பிட்காயினை அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவும் பிட்காயினை செயல்பட அனுமதி தர மறுத்து, அதற்குத் தடை விதித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை நீக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு