Published:Updated:

குறையும் விலை... இப்போது தங்கம் வாங்குவீர்களா? வாசகர்களின் அடடே பதில்கள்...

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம்

I N T E R A C T I O N

தங்கம் விலை ஒரு பவுனுக்குக் கடந்த பத்து நாள்களில் ரூ.1,360 குறைந்திருக்கிறது. இப்போது தங்கம் வாங்குவீர் களா அல்லது அதைவிட வேறு எதிலாவது பணத்தை முதலீடு செய்வீர்களா? தங்கத்தை மிகச் சிறந்த லாபம் தரும் முதலீடு என்று இன்னும் நினைக்கிறீர்களா? உங்கள் கமென்ட்ஸ் என்ன?”என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். இதற்கு வாசகர்கள் அளித்த கமென்ட்ஸ் இனி...

“அன்றாடம் அணியும் நகைகள், திருமணத்துக்குத் தேவைப்படும் தங்க நகைகளை இப்போது விலை குறைந்துள்ளதால் வாங்கலாம். உங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தில் 5 - 10% வரை முதலீடு செய்யலாம். மிச்சப் பணத்தை நீண்டகால நோக்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். தங்கமும் உங்கள் முதலீட்டில் ஓர் அங்கமாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் ஹரிஷ் நாராயண். அருமையான யோசனை சார்!

குறையும் விலை... இப்போது தங்கம் வாங்குவீர்களா? வாசகர்களின் அடடே பதில்கள்...

“தங்கம் விற்கவில்லை என்று விலையைக் குறைப்பார்கள். கூட்டம் அலை மோதியது என்று பின்பு விலை ஏற்றுவார்கள். இதுதான் தங்க வியாபாரிகளின் தந்திரம். கடந்த ஒரு வருடமாகத் தங்கம் விலையைக் கவனியுங்கள்” எனச் சொல்லிருக்காரு சோலை அஜ்மீர். பயங்கரமான ஃபாலோஅப்பா இருக்கே!

“தங்கத்தின் விலை அடுத்த மாதம் முதல் வாரத்துக்குப் பிறகு, ஏற்றம் காணும்! (இந்த வருடம் முடிவில் நல்ல விலை ஏற்றம் காணப்படும்). தங்கம் ஒரு முதலீட்டுப் பொருள். பேப்பர் கோல்டு மூலம் முதலீடு செய்வது சிறந்த வழி”னு சொல்லி யிருக்காரு பார்த்திபன். நீங்க சொல்றது நடந்தா சரி...

“இப்போதைய விலையில் தங்கம் வாங்கலாம். தங்கம் தவிர, அஸெட் அலொகேஷனைப் பின்பற்றி மற்ற முதலீடும் செய்யலாம். தங்கம் மிகச் சிறந்த லாபம் தரும் என்று சொல்ல முடியாது. அவரவர் வயது, ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட், வைப்பு நிதி எனப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்”னு ஒரு நிதி ஆலோசகர் கணக்கா ஐடியா தந்திருக்காரு கிருஷ்ணகுமார். நோட் பண்ணிட்டோம் ஜி!

“பணத்தை சுவிஸ் பேங்க்ல போட லாம்னு இருக்கேன்”னு சொல்லிருக் காரு கார்த்தி. ஆத்தீ! கிளம்பிட் டாங்கய்யா... கிளம்பிட்டாங்க!

“தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால் டிஜிட்டல் இ-கோல்டு முறையில் முதலீடு செய்யலாம். ஏனெனில், சமீப காலமாக டாலரின் மதிப்பு ஏற்றத்தில் உள்ளதாலும் தங்கத்தைவிட ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்”னு சொல்லிருக்காரு தர் சாரதி. ஓகேண்ணா...

எதிர்காலத் தேவைக்குத் தங்கத்தில் முதலீடு செய்யலாம்”னு சொல்லியிருக் காரு பிரபாகரன். பண்ணுங்க தல...

“வாழ்வாதாரத்துக்கே வழி இல்லாத காலத்துல தங்கத்துல எங்கிட்டு முதலீடு பண்றதுன்னு” கேட்டு மெர்சல் ஆயிருக்காரு ராம்கி னிவாசன். அதுவும் சரிதான்!

“பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்வதைக் காட்டிலும் நிலத்தில் செய்வது நல்லது”னு சொல்லிருக்காரு முஹம்மது அஜீம் இக்பால். அடேங்கப்பா...

“அப்பாடா... எவ்ளோ குறைஞ்சி ருக்கு... ஏறுறதுக்குள்ள 100 பவுன் வாங்கிப் போட்டுரணும்”னு நக்கல், நையாண்டின்னு கலந்து கமென்ட் அடிச்சிருக்காரு முரளிதரன். ரைட்டு!

“பெட்ரோல் மற்றும் டீசல்ல பணத்தை முதலீடு பண்ணலாம்னு இருக்கேன்” என்று கமென்ட் பண்ணிருக்காரு பிரபு ராமநாதன். டைமிங் கமென்ட் அப்பு..!