Published:Updated:

ஒன்றுக்கும் மேற்பட்ட பி.பி.எஃப் கணக்குகள் வைத்துள்ளீர்களா?

பி.பி.எஃப்

பிரீமியம் ஸ்டோரி

பொது சேமநல நிதியில் (பி.பி.எஃப்) ஒருவர் ஒரே ஒரு கணக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பி.பி.எஃப் கணக்குகளை வைத்திருந்தால், அந்தக் கணக்கு களை உடனடியாக ஒன்று சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாதம்தோறும் சம்பளம் பெறும் வேலையில் இல்லாத வர்கள், ஓய்வுக்காலத்துக்குச் சேமிக்க வேண்டும் என்பதற்காக பி.பி.எஃப் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. வங்கி டெபா சிட்டைவிடக் கூடுதலாக வட்டி (7.1%), ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ.500-ல் இருந்து சேமிப்பைத் தொடங்குவது, இதில் திரட்டப் படும் நிதிக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வரை வருமான வரித் தள்ளுபடி போன்ற பல காரணங் களால் பி.பி.எஃப் திட்டம் பிரபலமாக உள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட பி.பி.எஃப் கணக்குகள் வைத்துள்ளீர்களா?

பி.பி.எஃப் திட்டத்தை வங்கி அல்லது தபால் நிலையங்களில் சுலபமாக ஆரம்பிக்க முடியும் என்பதால், ஒரு சிலர் தனது பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வெவ்வேறு இடங்களில் தொடங்கி சேமித்து வருகின்றனர். இதை முறைப்படுத்த மத்திய அரசு இப்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இரு பி.பி.எஃப் கணக்குகளை இணைக்கும்போது, மூடப்படும் கணக்கில் சேர்ந்துள்ள வட்டி முழுவதும் மற்றொரு கணக்குக்கு மாற்றப்படும். கணக்கை மூடும்போது அந்தக் கணக்கில் கடன் ஏதும் இருந்தால், அதை முழுவதுமாகக் கட்டி முடித்த பிறகே கணக்கை மாற்ற முடியும். இரு கணக்கு களில் சேர்த்து ரூ.1.5 லட்சத்துக்கும் மேல் சேமித்திருந்தால் அதிகமாக சேமித்த தொகை வட்டி இல்லாமல் முதலீட்டா ளரிடம் திரும்ப வழங்கப்படும். வீட்டில் உள்ள மைனர் சிறுவர் அல்லது சிறுமியர் பெயரில் கணக்குகள் இருந்தால், அந்தக் கணக்குகள் தனிக் கணக்குகளாக ஏற்றுக்கொள்ளப்படும்.

உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பி.பி.எஃப் கணக்குகள் இருந்தால், உடனடியாக இணைத்துவிடுவது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு