Published:Updated:

இந்தியாவை டார்கெட் செய்யும் சீனா..! - ஹெச்.டி.எஃப்.சி-யில் முதலீடு சரியா?

சீனா
பிரீமியம் ஸ்டோரி
சீனா

கொரோனாவால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்திருப்பதை சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது சீனா!

இந்தியாவை டார்கெட் செய்யும் சீனா..! - ஹெச்.டி.எஃப்.சி-யில் முதலீடு சரியா?

கொரோனாவால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்திருப்பதை சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது சீனா!

Published:Updated:
சீனா
பிரீமியம் ஸ்டோரி
சீனா
டந்த வாரம் மத்திய அரசு தனது அந்நிய முதலீட்டுக் கொள்கையில் முக்கியமானதொரு திருத்தத்தை அறிவித்தது.

`இந்தியாவுடன் நிலவியல்ரீதியான எல்லைகளைக் கொண்டிருக்கும் நாடுகள் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய, மத்திய அரசிடம் கண்டிப்பாக முன் அனுமதி பெற வேண்டும்’ என அந்நிய முதலீட்டுக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திடீர் மாற்றத்தைக் கொண்டுவர என்ன காரணம்?

இந்தியாவை டார்கெட் செய்யும் சீனா..! - ஹெச்.டி.எஃப்.சி-யில் முதலீடு சரியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகெங்கும் விரியும் சீனாவின் சிறகுகள்..!

சீன மத்திய வங்கிதான் (People Bank of China) உலகிலேயே மிக அதிகமான அந்நியச் செலாவணிக் கையிருப்பை (3.1 ட்ரில்லியன் டாலர்) கொண்ட மத்திய வங்கி. இந்தத் தொகை இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பைவிட (476 பில்லியன் டாலர்) பல மடங்கு அதிகம். அதுமட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (2.8 ட்ரில்லியன் டாலர்) அதிகம்.

கடந்த பல வருடங்களாகவே பன்னாட்டு வர்த்தகத்தில் தொடர்ந்து உபரியைக்கொண்டிருக்கும் சீனாவுக்கு டாலர் உள்வரத்து மிக அதிகம். சில வருடங்களுக்கு முன்புவரை தனது டாலர் இருப்பை அமெரிக்கக் கடன் பத்திரங்களில்தான் சீன மத்திய வங்கி அதிகமாக முதலீடு செய்துவந்தது.

அமெரிக்க-சீன உறவில் விரிசல், முதலீட்டுப் பரவலாக்க முடிவு மற்றும் அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்தும் நோக்கம் ஆகியவை சீனாவின் அந்நிய முதலீட்டுக் கொள்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.

கொரோனாவால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்திருப்பதை சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது சீனா!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள பல ஏழை நாடுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் டாலர் கடன்களை சீனா வாரி வழங்கியிருக்கிறது. பல நாடுகளிலும் தனது நேரடித் தொழில் முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளது. பங்குச் சந்தைகளிலும் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறது. கொரோனா பாதிப்பால் தற்போது பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி அடைந்திருப்பதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திவரும் சீனா, உலகெங்கிலுமுள்ள பல நிறுவனப் பங்குகளிலும் பெருமளவில் முதலீடு செய்துவருகிறது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்தியாவில் சீனாவின் முதலீடுகள்..!

இந்தியாவிலும்கூட சீனா ஏராளமான நேரடி முதலீடுகளைச் செய்திருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் ‘யூனிகார்ன்’ எனப்படும் அதிவேகமாக வளர்ந்துவரும் நவீன தொழில்நுட்ப நிறுவனங்களில் சீனாவின் முதலீடுகள் எக்கச்சக்கம். இந்தியாவின் முன்னணி நிதித் தொழில்நுட்ப நிறுவனமான `பேடிஎம்’-ல் சீனாவின் `அலிபாபா’ நிறுவனம் 40% முதலீடு செய்திருக்கிறது. பிக் பேஸ்கட், ஃபிளிப்கார்ட், ஸ்விக்கி, ஜொமேட்டோ, ஸ்நாப்டீல் போன்ற மின்னணு வர்த்தக நிறுவனங்களிலும் சீனா முதலீடு செய்திருக்கிறது.

`ஜியோமி’ போன்ற சீன மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் வலுவாகக் கால்பதித்துள்ளன. இந்தியர்களின் மனதில் பெருமளவு இடம்பிடித்திருக்கும் `டிக்டாக்’கூட சீன நிறுவனத்துக்குச் சொந்தமானதுதான். இந்தியக் கடன் சந்தையிலும் சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் கவனம் செலுத்திவருகிறது.

விமர்சனங்கள் எழுந்தது ஏன்?

இந்த நிலையில், முந்தைய வாரத்தில் இந்தியாவின் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி-யில் சீனாவின் மத்திய வங்கி தனது முதலீட்டை ஒரு சதவிகிதத்துக்கும் மேலாக அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்து பங்குச் சந்தையில் பல அதிர்வலைகளை உருவாக்கின.

இந்தியாவின் வீட்டுக் கடன் வழங்கும் மிகப்பெரிய வங்கிசாரா நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி., ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளுக்கு வழங்கிய கடந்த நிதியாண்டு இறுதிக்கான பங்குதாரர் அறிக்கை கவனிக்கத்தக்கது. அதில் ஒரு சதவிகிதத்துக்கும் மேலாக முதலீடு செய்திருக்கும் பங்குதாரர் பட்டியலில் சீன மத்திய வங்கியும் இடம்பெற்றிருந்தது. முந்தைய காலாண்டு இறுதியில் சீன வங்கியின் முதலீடு 0.8%-ஆக இருந்தது. இது ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்ததால், பொதுவெளியில் அதிக கவனம் பெறவில்லை.

சிங்கப்பூர் அரசு போன்ற வெளிநாட்டு அரசு நிதியங்கள் இந்தியாவில் முதலீடு செய்வது புதிதல்ல என்றாலும், அரசியல் மற்றும் பொருளாதாரரீதியான பல விவகாரங்களில் இந்தியாவின் போட்டி நாடாக விளங்கும் சீனாவின் நேரடி முதலீடுகள் குறித்த நடவடிக்கைகள் எளிதில் விட்டுவிடக்கூடியவை அல்ல. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பிரதான முதலீட்டாளரான ஹெச்.டி.எஃப்.சி-யில், தனது முதலீட்டை திடீரென சீனா அதிகரிக்க வேண்டியதன் காரணம் குறித்துப் பொருளாதார நிபுணர்களிடையே பெருத்த விவாதம் கிளம்பியதுடன், அரசியல் வானிலும் புயல் வீசியது.

மத்திய அரசின் முடிவு!

இந்தியாவில் இதுவரை நேரடி அந்நிய முதலீடு தடை செய்யப்பட்ட சில முக்கிய துறைகளைத் தவிர்த்து, மீதமுள்ள நிறுவனங்களில் வெளிநாட்டினர் எளிதாக முதலீடு செய்ய முடியும். பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டினருக்கு மட்டும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் உண்டு. தற்போது வந்திருக்கும் புதிய உத்தரவின்படி, இந்தியாவுடன் நில எல்லைகள்கொண்ட நாடுகளைச் சார்ந்தவர்கள் மத்திய அரசின் முன்அனுமதி இல்லாமல் முதலீடு செய்ய முடியாது. பாகிஸ்தானுக்கான கூடுதல் கட்டுப்பாடுகள் தொடரும்.

சீனா
சீனா

எதிர்வினைகள்!

இந்திய அரசின் முடிவுக்கு சீனாவின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. அந்நிய முதலீடுகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருக்கும் இந்தியாவின் முடிவு பாரபட்சமானது என்றும், பன்னாட்டு வணிக அமைப்பின் (World Trade Organisation) நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் சீனத் தரப்பிலிருந்து கடுமையான ஆட்சேபங்கள் எழுப்பப்பட்டுள்ளன. `ஒரு நாட்டின் தேசப் பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில், குறிப்பிட்ட நாட்டிலிருந்து வரும் நேரடி அந்நிய முதலீட்டைக் கட்டுப்படுத்துவதில் தவறில்லை’ போன்ற வலுவான கருத்துகளும் இந்தியாவின் சார்பாக எழுந்துள்ளன. ஆஸ்திரேலியாவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள முன் உதாரணங்களும் உண்டு. கொரோனா நெருக்கடியைச் சாதகமாக்கிக்கொண்டு அமெரிக்க நிறுவனங்களை சீனா கைப்பற்ற முயல்வதாக அமெரிக்காவிலும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

பங்குச் சந்தை பெருமளவு வீழ்ந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, இந்தியாவின் அதி முக்கிய நிறுவனங்களின் மீதான நிர்வாகக் கட்டுப்பாட்டை பின்வாசல் வழியே முறைகேடாகக் கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையிலான இந்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் மிகவும் அவசியமானவை.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே.