நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வாப்கோ இந்தியா லிமிடெட்! அறிவோம் பங்கு நிறுவனம்..!

வாப்கோ இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
வாப்கோ இந்தியா

K N O W Y O U R C O M P A N Y - (NSE SYMBOL: WABCOINDIA, BSE CODE: 533023)

கமர்ஷியல் வாகனங்களுக்கான கட்டுப்பாட்டுக் கருவி களை உற்பத்தி செய்யும் நிறுவனமான வாப்கோ இந்தியா லிமிடெட் நிறுவனத்தைக் குறித்துதான் இந்த வாரம் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

நிறுவனத்தின் செயல்பாடுகள்...

உலகளவில் 1,04,000-க்கும் மேலான பணியாளர்களுடன், 241 இடங்களில் (31 நாடுகளில் உற்பத்தி வசதிகளுடன்), 10,000-க்கும் மேற்பட்ட சர்வீஸ் பார்ட்னர்களுடன் செயல்பட்டு வரும் குழுமம், இசட்.எஃப் (ZF). இந்தக் குழுமத்தின் ஓர் அங்கமான வாப்கோ இந்தியா லிமிடெட் நிறுவனம் கமர்ஷியல் வாகனங் களுக்கான கட்டுப்பாட்டுக் கருவிகள், டெக்னாலஜி மற்றும் சொல்யூஷன் களை வழங்கி வருகிற ஒரு முன்னணி நிறுவனமாகும்.

பயணிகள் பாதுகாப்பு, டிரைவர் களுக்கான உதவிகளைச் செய்யும் சிஸ்டம்கள், சேசிஸ் உதிரிபாகங்கள், எலெக்ட்ரிக் டிரைவ்கள், ஸ்டீயரிங் சிஸ்டம்கள், டேம்பிங் சிஸ்டம்கள், சேஃப்டி எலெக்ட்ரானிக்ஸ், ஆக்சில் டிரைவ்கள், எலெக்ட்ரிக் ஆக்சில் டிரைவ்கள், பிரேக்கிங் சிஸ்டம்கள், டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்கள், எலெக்ட்ரானிக் சிஸ்டம்கள் போன்ற வற்றை வடிவமைத்து உற்பத்தி செய்வதில் சீரிய திறமையுடன் இயங்கி வருகிறது.

நிறுவனத்தின் தயாரிப்புகள்...

வாப்கோ நிறுவனம் கமர்ஷியல் வாகனங்களுக்கான கனெக்டிவிட்டி சொல்யூஷன்கள், டிஜிட்டல் ப்ளீட் சொல்யூஷன்கள், வாகன ஓட்டுநருக்கு உதவி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஏ.டி.ஏஸ் மற்றும் ஏ.டி பாதுகாப்பு சிஸ்டம்கள், டேம்பிங் சிஸ்டம்கள், ஸ்டீயரிங் சிஸ்டம்கள் மற்றும் கட்டுப்பாட்டுச் சாதனங்கள், பிரேக் மற்றும் வாகனம் கவிழாமல் இருக்க உதவும் சாதனங்கள், இன்ஜினின் இயங்குசக்தியை அதிகரிக்கும் மாட்யூல்கள் மற்றும் காம்போனென்ட் ஆக்சில் சிஸ்டம்கள், வீல் எண்ட் சொல்யூஷன்கள், ஏரோடைனமிக் சொல்யூஷன்கள், பயணியர் பாதுகாப்புக்கான சொல்யூஷன்கள், சஸ்பென்ஷன் கன்ட்ரோல் சொல்யூ ஷன்கள், ஏர் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்கள், டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்கள் மற்றும் டிரான்ஸ் மிஷனைத் தானியங்கும் ரீதியாக இயக்கும் சொல்யூஷன்கள், எலெக்ட்ரிக் டிரைவ்கள் போன்ற வற்றை உற்பத்தி செய்து பல்வேறு முன்னணி வாகன உற்பத்தியாளர் களுக்கு சப்ளை செய்துவருகிறது.

கார்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் வாப்கோ நிறுவனத்தை கமர்ஷியல் வாகன டெக்னாலஜி மற்றும் கமர்ஷியல் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் டெக்னாலஜி போன்ற துறையில் இயங்கி வந்த இசட்.எஃப் குழுமம் கையகப்படுத்தியதன் மூலம் ஓர் ஒருங்கிணைந்த சொல்யூஷன்களை தரும் முயற்சியில் கால்பதித்தது. வாப்கோ நிறுவனம் 61 இடங்களில் தன் கமர்ஷியல் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பைக் கொண்டு இயங்கி வருகிறது.

வாப்கோ இந்தியா
வாப்கோ இந்தியா

நிறுவனத்தின் சிறப்புகள்...

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நிறுவனம் 50 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பர்யத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தன்னுடைய உற்பத்தி வேல்யூ செயினில் ஆகக்குறைந்த பொருள் செலவு, உற்பத்தி செலவில் இயங்கும் திறனை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது.

போட்டியாளர்களால் ஈடு கொடுக்க முடியாத அளவுக்குத் தரம் மற்றும் தொழில்நுட்பம் என்ற இரண்டிலும் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் பண்ட்நகர், பூனே, ஜாம்ஷெட்பூர் மற்றும் சென்னையில் உற்பத்தி மையத்தைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்...

டிரக் உற்பத்தியாளர்களில் அசோக் லேலாண்ட், டாடா மற்றும் டைம்லர், டிரெயிலர் உற்பத்தியாளர்களில் டாடா, ஏஏ டிரெலர்ஸ், ப்ளாக் டயமண்ட், ஆஃப் ஹைவே வாகன உற்பத்தியாளர்களில் கேட்டர் பில்லர், பி.இ.எம்.எல், கார் உற்பத்தியாளர் களில் ஆடி மற்றும் பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

புள்ளி விவரம்
புள்ளி விவரம்

நிறுவனம் செய்த புதுமைகள்...

இந்தியாவில் கமர்ஷியல் வாகன உற்பத்தியாளர்கள் இடையே புதுமை களை அறிமுகப்படுத்துவதற்கான நம்பிக்கை நட்சத்திரமாக இந்த நிறுவனம் திகழ்கிறது. இந்திய கமர்ஷியல் வாகனங்கள் உற்பத்தியில் ஏ.பி.எஸ், ஏ.எம்.டி, இ.எஸ்.சி, இ.சி.ஏ.எஸ், இன்டெலிஜென்ட் டிரெய்லர் புரோ கிராம் போன்ற தொழில்நுட்பங்களை முதன்முதலாக அறிமுகப்படுத்திய முன்னோடி நிறுவனம் இதுவாகும்.

இதுபோன்ற பல்வேறு நவீன மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் டிரெய்லர் வாகனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் செயல்திறனை இந்த நிறுவனம் கணிசமான அளவு அதிகரிக்கச் செய்தது.

மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்த உதிரிபாகங்களை சப்ளை செய்து அகில இந்திய ரீதியாக சர்வீஸ் சென்டர்களை நிறுவி வாடிக்கையாளர்களுக்கு சேவை களை வழங்குவதும் இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பான செயல்பாடாகும்.

2015-ம் ஆண்டில் கமர்ஷியல் வாகனங்களுக்கான ஏ.பி.எஸ்ஸை சோதனை செய்வதற்காக நூற்றுக் கணக்கான வாகனங்களை தன்னுடைய டெஸ்ட் டிராக்கில் டெஸ்ட் செய்தது இந்த நிறுவனம். 2017-ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இ,எஸ்.சி (எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது.

2018-ம் ஆண்டில் இண்டெலி ஜென்ட் டிரெய்லர் புரோக்ராமை அறிமுகம் செய்த இந்த நிறுவனம் அதே ஆண்டில் டாடா மோட் டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அட்வான்ஸ்டு டிரை வர் அசிஸ்டென்ஸ் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது.

2006-ம் ஆண்டில் ஒரு ஒரிஜினல் எக்யூப் மென்ட் உற்பத்தியாளராக இருந்த இந்த நிறுவனம் இன்றைக்கு ஒரு தீர்வை வழங்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்பது தனிச்சிறப்பான விஷயமாகும்.

டிரெய்லர்களுக்கான ஏர்பிரேக்குகளில் ஆரம்பித்து ஏ.பி.எஸ், ஏர்சஸ்பென்ஷன், இ.பி.எஸ், ஏர்டிஸ்க் பிரேக்ஸ் போன்ற அனைத்துவகை தயாரிப்புகளையும் அறிமுகப் படுத்தியுள்ள பெருமையைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

தேய்மானத்தின் காரணமாக மாற்றப்படும் உதிரிபாகங்கள் சந்தையில் (ஆஃப்டர் மார்க்கெட்) தன்னுடைய பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு உத்திகளை நடைமுறைப்படுத்தி வருகிறது இந்த நிறுவனம்.

டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்கான இ-காமர்ஸ் இணையதளம், இ-பார்ட்ஸ் எனும் உதிரி பாகங்களுக்கான கையேடு, தயாரிப்புகளை டிஜிட்டலாக அறிமுகம் செய்து விநியோ கஸ்தர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் கொண்டு சேர்ப்பது, மெக்கானிக்குகளுடன் இணைந்து செயல்படுவது எனப் பல்வேறு முயற்சிகளையும் இந்த நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது.

மேலும், விநியோகஸ்தர்களை அதிகரிப் பதிலும் கவனம் செலுத்திவருகிற இந்த நிறுவனம் தற்போதிருக்கும் விநியோகஸ்தர்கள் & ரீடெயிலர்களின் கட்டமைப்பை உறுதியாக்கு வதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

புள்ளி விவரம்
புள்ளி விவரம்

ரிஸ்க்குகள் என்னென்ன?

இந்த நிறுவனம் வாகனங்களைக் கட்டுப்பாடு செய்யும் உதிரிபாகங்களின் சொல்யூஷன் வழங்கும் உற்பத்தித்துறையில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும். வாகன விற்பனை என்பது பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வளரக்கூடிய ஒன்றாகும்.

எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளா தார வளர்ச்சி தேக்க நிலையைச் சந்தித்தாலோ, எதிர்பாராத அளவு இல்லாதுபோனாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டையும் பாதிக்கவே செய்யும்.

மேலும், புதிய தொழில் நுட்பங்கள், போட்டி, மூலப்பொருள்கள் விலை உயர்வு, அந்நியச் செலா வணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்கு களே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்கு களைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்கு பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்த ஒரு பங்கை வாங்குவதற்கு முன்னாலும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஓர் ஆலோசகரைக் கலந்து ஆலோசித்து அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

பிட்ஸ்

லக அளவில் காப்பர் உற்பத்தி குறைந்ததைத் தொடர்ந்து அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டைவிட 35% அதிகம் பணம் செலவழித்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இந்தியாவுக்கு உருவாகி உள்ளது!