மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஃபிக்ஸட் டெபாசிட் to மியூச்சுவல் ஃபண்ட்... இளைஞர்கள் மாற என்ன காரணம்?

டார்கெட் குரோர்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
டார்கெட் குரோர்பதி

டார்கெட் குரோர்பதி @ 40 - 5

இளம் முதலீட்டாளர் கள் இன்று ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் பிற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த மாற்றத்துக்குப் பின்னால் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங் கள் உள்ளன. முதலீட்டாளர் களிடையே அதிகரித்த ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதி கல்வியறிவு அதிகரிப்பு ஆகிய வற்றை முக்கியமான காரணங்களாகக் குறிப்பிடலாம்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

நிதித் திட்ட விழிப்புணர்வு...

பல தலைமுறைகளாக நம்மவர்களின் பிரபலமான மற்றும் பாரம்பர்யமான முதலீட்டு விருப்பமாக ஃபிக்ஸட் டெபாசிட் இருந்தது. முதலீட்டாளர்கள் இடையே நிதித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கவே, ஃபிக்ஸட் டெபாசிட்டிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களுக்கு படிப்படியாக மாறி வருகிறார்கள்.

ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மீதான வருமானம் முன் கூட்டியே நிர்ணயம் செய்யப் பட்டதாக இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஒப்பிடும் போது, எஃப்.டி-கள் பல அம்சங்களில் பின்தங்குகிறது. அது குறித்து பார்ப்போம்.

எஃப்.டி மூலமான வருமானம், விலைவாசி உயர்வு என்ற பண வீக்கத் துக்குப் பிறகு, மிகவும் குறைந்துவிடுகிறது. உதாரண மாக, ஒருவருக்கு எஃப்.டி முதலீடு மூலம் ஆண்டுக்கு 7% வருமானம் கிடைக்கிறது என்றால் பணவீக்கம் 5% என்றால், உண்மையான வருமானம் 2%-ஆக இருக்கும்.பணவீக்கம் 7% என்றால், நிகர வருமானம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஃபிக்ஸட் டெபாசிட் to மியூச்சுவல் ஃபண்ட்... இளைஞர்கள் மாற என்ன காரணம்?

வருமான வரி...

மேலும், எஃப்.டி மூலமான வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது. ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் (பழைய முறைப்படி 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி விதிக்கப் படும். ஒருவர் 30 சதவிகித வரி வரம்பில் இருந்தால், 7 சதவிகித எஃப்.டி-க்கு வரிக்குப் பிந்தைய வருமானம் 4.9 ஆக இருக்கும். மேலும், பணவீக்க விகிதத்தைக் கழித்தால் வருமானம் எதுவும் இருக்காது. சில நேரங்களில் நெகட்டிவ் வருமானம்தான்.

வங்கிகளின் எஃப்.டி-கள், தபால் அலுவலகத் திட்டங் கள், பாரம்பர்ய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர் களுக்கு ஏற்றதாக இருக்கிறது. ஒருவர் எந்த ஒரு முதலீடு என்றாலும் வருமான வரிக்குப் பிந்தைய வருமானத் தைப் பார்த்துதான் அந்தத் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

வங்கி எஃப்.டி-கள் மற்றும் தபால் அலுவலகத் திட்டங்களுடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை ஒப்பிடும்போது, அதிக நெகிழ்வான, எளிதில் பணமாக்கக்கூடியதாக மற்றும் குறைவான வருமான வரி கட்டக்கூடியவையாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன.

பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம்...

எஃப்.டி-களைப் போல் இல்லாமல், மியூச்சுவல் ஃபண்டுகள் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் கொடுக்கின்றன. எஃப்.டி மூலம் கிடைக்கும் வருமானம் என்று சொல்வதைவிட இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் உடன் ஒப்பிடும்போது ஃபிக்ஸட் டெபாசிட் மிகவும் பாதுகாப்பு என்றாலும் வங்கி திவாலாகும்போது மூலதனம் மற்றும் வட்டியை இழக்கும் ரிஸ்க் இருக்கிறது. டெபாசிட் இன்ஷூரன்ஸ் இருக்கும்பட்சத்தில் ரூ.5 லட்சத்துக்கு (அசல் மற்றும் வட்டி) மட்டுமே உத்தரவாதம் இருக்கிறது.

டெபாசிட் போட்டிருக்கும் வங்கி, டெபாசிட் இன்ஷூரன்ஸ் திட்டத்துக்கு பிரீமியம் கட்டவில்லை என்றால், அந்தத் தொகைக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. வங்கிகள் ரிசர்வ் வங்கியால் நெறிமுறைப் படுத்தப்படுகின்றன. அது முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்க பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. ஆனால், சில வங்கிகளில் விதிமுறைகள் மீறல் நடப்பதையும் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. அந்த நேரங்களில் உடனடித் தேவைக்கு பணம் எடுக்க முடியாத நிலை உருவாகி விடுகிறது. எனவே, இன்றைய நிலையில் அனைத்து முதலீடுகளும் ரிஸ்க்குக்கு உட்பட்டதாக இருக்கிறது.

ஃபிக்ஸட் டெபாசிட் to மியூச்சுவல் ஃபண்ட்... இளைஞர்கள் மாற என்ன காரணம்?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரிஸ்கானது என்றாலும், அதில் பரவலாக்கம் (Diversify) மூலம் ரிஸ்க் குறைக்கப்படுகிறது. அதாவது, கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் என்கிறபோது பல்வேறு கடன் பத்திரங்களில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது மூலம் ரிஸ்க் குறைக்கப்படுகிறது. பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் பணம் பிரித்து முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் கணிசமாகக் குறைக்கப்படுகிறது.

ஃபிக்ஸட் டெபாசிட் போல் ஃபண்ட் முதலீடுகளில் வருமானத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதேநேரத்தில் மூன்றாண்டுக்கு மேற்பட்ட நிலையில் கடன் ஃபண்டுகள் மூலமான வருமானம் ஃபிக்ஸட் டெபாசிட் வருமானத்தை விட அதிகமாக இருக்கும். அந்த வகையில் மூன்றாண்டுக்கு உட்பட்ட குறுகிய காலத் தேவைகளுக்கு கடன் ஃபண்டுகளை விட ஃபிக்ஸட் டெபாசிட்கள் சிறந்தவையாக இருக்கும்.

மேலும், இந்தக் கால வரம்பில் (மூன்றாண்டுக்குக் குறைவாக) ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் பத்திரங்களுக்கு ஒரே வருமான வரிதான். அதாவது, ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டி வரும். ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு முதலீட்டுக் காலம் எவ்வளவாக இருந்தாலும், அடிப்படை வருமான வரி வரம்புக்கு ஏற்பதான் வரி கட்ட வேண்டும். இதுவே கடன் ஃபண்ட் என்கிறபோது மூன்றாண்டுக்குப் பிறகு பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும். பணவீக்க விகிதம் மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் பல நேரங்களில் வருமான வரி கட்ட வேண்டி வராது. அந்த வகையில் வரி அனுகூலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கடன் ஃபண்டுகள் லாபகரமாக இருக்கும்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் வருமான வரி அனுகூலம் இருக்கிறது. ஓராண்டுக்கு மேற்பட்ட குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும், 15% வரி கட்டினால் போதும். இதுவே ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் வரைக்கும் வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 10% வரி கட்டினால் போதும். ஈக்விட்டி ஃபண்டுகள் அதிக ரிஸ்க் கொண்டவை என்பதால் அவற்றின் குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதுவும் முதலீட்டாளர் ரிஸ்க் எடுக்கக் கூடியவராக இருப்பது அவசிய மாகும்.

முதலீட்டுக் காலத்துக்கு ஏற்ற ஃபண்டுகள்...

மியூச்சுவல் ஃபண்ட் என்கிற போது குறுகிய காலத் தேவைக்கு கடன் ஃபண்டுகளையும் நடுத்தரக் காலத் தேவைக்கு ஹைபிரிட் ஃபண்டுகளையும் நீண்ட காலத் தேவைக்கு ஈக்விட்டி ஃபண்டுகளையும் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதுதான் லாபகரமாக இருக்கும். நிதி ஆலோசகர் ஒருவரின் ஆலோசனைபடி முதலீடு செய்வதுதான் சரியாக இருக்கும்.

(குரோர்பதி ஆவோம்)