Published:Updated:

நாளைதான் கடைசி நாள்; PF நாமினி முதல் டீமேட் கணக்கு KYC வரை; மறக்காம அப்டேட் செஞ்சிடுங்க!

 பென்ஷன்
News
பென்ஷன்

பங்கு முதலீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான டீமேட் கணக்கு மற்றும் பங்கு வர்த்தகக் கணக்குக்கு கே.ஒய்.சி சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை, செபி அமைப்பு 2021 செப்டம்பர் 30-ம் தேதியிலிருந்து டிசம்பர் 31-ம் தேதி ஆக நீட்டித்துள்ளது.

இன்னும் இரண்டு நாள்களில் 2021-ம் ஆண்டு முடியப்போகும் நிலையில் பென்ஷன், பிராவிடென்ட் ஃபண்ட், டீமேட் கணக்கு மற்றும் வர்த்தகக் கணக்கு உள்ளிட்டவற்றின் உரிய ஆவணங்களை 2021 டிசம்பர் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம். இந்த நிதித் திட்டங்களைப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலையும் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

பென்ஷன்
பென்ஷன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஓய்வூதியம் - ஆயுள் சான்றிதழ்கள்:

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழ்களை அரசின் கருவூல அலுவலகங்களுக்குச் சென்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழ்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பதற்கான சான்று ஆகும். பயனாளர்கள் ஓய்வூதியப் பணத்தைத் தடை இல்லாமால் பெற இந்தச் சான்றிதழ் வழிவகை செய்யும். இந்த ஆண்டு, கொரோனா பாதிப்பால் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் தேதி நவம்பர் 30-லிருந்து டிசம்பர் 31 ஆக நீட்டிக்கப்பட்டது.

வங்கி அல்லது தபால் நிலையத்துக்குச் செல்ல இயலாதவர்களுக்கு வங்கி அல்லது தபால் நிலைய அதிகாரி நேரில் வீட்டுக்கே வந்து சான்றிதழ்களைப் பெற்றுச் செல்லும் வசதியும் உள்ளது. வங்கி அல்லது தபால் நிலையத்துக்குச் செல்ல இயலாதவர்கள் ஜீவன் பிராமன் என்ற டிஜிட்டல் தளம் மற்றும் அலைபேசி செயலி மூலமும் தங்களது சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம்.

டீமேட் கணக்கு

பங்கு முதலீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான டீமேட் கணக்கு மற்றும் பங்கு வர்த்தகக் கணக்குக்கு கே.ஒய்.சி சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை, செபி அமைப்பு 2021 செப்டம்பர் 30-ம் தேதியிலிருந்து டிசம்பர் 31-ம் தேதி ஆக நீட்டித்துள்ளது. கே.ஒய்.சி படிவத்தில் பெயர், விலாசம், பான் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி, ஆண்டு வருமானம் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். இனி வரும் நாள்களில் புதிய கணக்கு தொடங்குபவருக்கு இந்தத் தகவல்கள் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பி.எஃப்
பி.எஃப்

இ.பி.எஃப்

பணியாளர் பிராவிடென்ட் ஃபண்ட் (இ.பி.எஃப்) அமைப்பு, அதன் பயனாளர்கள் அவர்களது நாமினியை டிசம்பர் 31-ம் தேதிக்குள் குறிப்பிட வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி குறிப்பிடாவிட்டால் திட்டத்தின் பயன்களை அவர்கள் தவறவிட கூடும் என இ.பி.எஃப் அறிவித்துள்ளது. மேலும், இ.பி.எஃப் கணக்கோடு ஆதார் எண்ணை இணைப்பதையும் கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண்ணை இ.பி.எஃப் கணக்கோடு இணைக்கவிட்டால் பின்னாளில் இ.பி.எஃப் பணம் எடுக்கும் போது சிக்கல் ஏற்படும்.

இ.பி.எஃப் அமைப்பு, ஆதார் தவிர வேறு எந்த ஆவணத்தையும் ஏற்காது. ஆதார் தகவல்கள் பணியாளர்களின் தகவல்களோடு ஒத்துப்போகாத நிலையில் பணியாளர் வைப்பு நிதி அமைப்பு பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைப் பணியாளரிடம் கேட்கும். இந்தச் சிக்கல்களிலிருந்து தப்பிக்க முன்பே அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
நாளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் இணைப்பது கட்டாயம். கெடுதேதியை அரசு நீடிக்குமா என்பது இப்போது தெரியாது.