தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

தித்திக்கும் தீபாவளி முதலீடு... கொண்டாட்டத் திருநாளில் கோலாகலமான 10 பங்குகள்!

தீபாவளி முதலீடு...
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளி முதலீடு...

கவர் ஸ்டோரி

தீபாவளி நன்னாளில் மக்கள் கொண்டாட் டமாக இருப்பதுடன், நம் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான நற்செயல் களையும் புதிதாகத் தொடங்குவது வழக்கம். இந்த நன்னாளில் முதலீட்டாளர்களுக்கு ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில் ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட், ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ், ஜெ.எம் ஃபைனான்ஷியல்ஸ், ஷேர்கான், ஐ.ஐ.எஃப்.எல், ஜி.இ.பி.எல் செக்யூரிட்டீஸ், எல்.கே.பி செக்யூரிட்டீஸ் எனப் பல புரோக்கிங் நிறுவனங்கள் பல பங்குகளைத் தேர்வு செய்து தந்துள்ளன. இந்தப் பங்குகளில் இருந்து முதலீட்டாளர்களுக்காக நாணயம் விகடன் சார்பாக 10 பங்குகளைத் தேர்வு செய்து தருமாறு பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அவர் தேர்வு செய்து தந்த பங்குகள் இதோ...

1. ஐ.டி.சி - எஃப்.எம்.சி.ஜி

தற்போதைய விலை: ரூ.346.35

இலக்கு விலை: ரூ.380

ஐ.டி.சி நிறுவனம் ‘ஐ.டி.சி நெக்ஸ்ட்’ என்ற தொலைநோக்கு உத்தித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி வலுவான பிராண்டு களை உருவாக்குவது, எதிர்கால சந்தைக்கான போர்ட்ஃபோலியோ, தெளிவான நோக்கமும் துடிப்பும் கொண்ட அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் மயத்தில் அதிக முதலீடு என இந்த நிறுவனம் எஃப்.எம்.சி.ஜி துறையில் அதிக கவனம் செலுத்த உள்ளது. 2022-24-ம் நிதி ஆண்டுகளில் 17% கூட்டு வளர்ச்சியை எட்டுவதற்கான இலக்கை வைத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் சிகரெட் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிகரெட்டுக்கு வரி உயர்த்தப்படாமல் இருப்பதால், நல்ல வருவாய் ஈட்டும் திறனுடன் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.50,000 கோடியை நிறுவனத்துக்குள் கொண்டுவந்துள்ளது. இதன் பெரும்பகுதியை சிகரெட் அல்லாத தயாரிப்பு களை அறிமுகப்படுத்தி நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தி வருகிறது இந்த நிறுவனம். இந்தப் பங்கு 2022-23-ம் நிதி ஆண்டின் இ.பி.எஸ் மதிப்பில் 22.6 மடங்குகளிலும், 2023-24-ம் நிதி ஆண்டின் இ.பி.எஸ் மதிப்பில் 19.6 மடங்குகளிலும் வர்த்தகமாகிறது. பெரிய கன்ஸ்யூமர் நிறுவனப் பங்குகளுடன் ஒப்பிடு கையில், தள்ளுபடி விலையில் வர்த்தகமாகிறது. தொடர்ச்சியான வருவாய் வளர்ச்சி, வலுவான டிவிடெண்ட், நீடித்த இ.எஸ்.ஜி ரேட்டிங் ஆகியவற்றுடன் ஹோட்டல் / ஐ.டி தொழில்களிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

தித்திக்கும் தீபாவளி முதலீடு...
கொண்டாட்டத் திருநாளில் கோலாகலமான 10 பங்குகள்!

2. ஆக்ஸிஸ் வங்கி - பேங்கிங்

தற்போதைய விலை: ரூ.829.85

இலக்கு விலை: ரூ.902

முன்னணித் தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்ஸிஸ் வங்கி, ரூ.11.5 லட்சம் கோடி நிதி நிலையுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வங்கியின் கடன் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் 13% கூட்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வரும் 2022-24-ம் ஆண்டு காலகட்டத்தில் இது 16.3% கூட்டு வளர்ச்சியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ஸிஸ் வங்கி தற்போது ரீடெய்ல் பிரிவில் அதிக கவனம் செலுத்திவருகிறது. வங்கியின் மொத்த அடமானக் கடன் களில் 60% ரீடெய்ல் பிரிவு பங்கு வகிக்கிறது. மேலும், நிகர வாராக் கடன்களுக்கு 134% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சொத்துகளின் தரம் மற்றும் வருவாய் இடைவெளிகளைச் சமாளிக்கும் விதத்தில் அமைந் துள்ளது.

சிறப்பான தொழில் வளர்ச்சி, செயல்பாடுகளின் திறன் அதிகரிப்பு, சிட்டி வங்கியின் பிசினஸைக் கைப்பற்றியதன் மூலம் கிடைக்கும் பலன்கள் ஆகியவை நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் பாசிட்டிவான தாக்கத்தை உண்டாக்கும்.

3. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி - பேங்கிங்

தற்போதைய விலை: ரூ.892.10

இலக்கு விலை: ரூ.960

வலுவான கடன் வளர்ச்சி, லாப வளர்ச்சி அதிகரிப்பு, கடன் செலவுகள் குறைப்பு மற்றும் செயல்பாட்டு லாப வளர்ச்சி அதிகரிப்பு போன்ற காரணி களால் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நிலையான நீடித்த வருவாய் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவான கடன் ஃப்ரான் சைஸ், அதிக மூலதன விகிதம், சிறப்பான சொத்துகளின் தரம், ஆரோக்கியமான நிதி ஒதுக்கீடு ஆகியவையும் வங்கியின் செயல் பாட்டுக்கு சாதகமாக உள்ளது. வங்கியின் உயர்தரமான டிஜிட்டல் உள்கட்டமைப்புகள், டைவர்சிஃபை செய்யப்பட்ட தயாரிப்புகள், வாடிக்கையாளர் சேவை ஃப்ரான்சைஸ்கள் கடன் வணிகத்தைக் கணிக்கப்பட்ட ரிஸ்க் நிலையுடன் வளர்த் தெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

வங்கியின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வாராக்கடன் அளவை 1 சதவிகிதத்திலிருந்து 0.8 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. வங்கி பலவீனமான கடன்களுக்கு போதுமான ஒதுக்கீடுகளையும், அதிக கவரேஜும் வைத்திருக் கிறது. இதனால் கடன் செலவுகள் குறைந்து லாப வளர்ச்சியை உறுதி செய்யும்.

4. பஜாஜ் ஃபைனான்ஸ்- என்.பி.எஃப்.சி

தற்போதைய விலை: ரூ.7,380.40

இலக்கு விலை: ரூ.7,700

பஜாஜ் ஃபைனான்ஸ் வலு வான பாசிட்டிவ் அம்சங்களுடன் நிதி ஆண்டைத் தொடங்கி இருக்கிறது. அதிகமான ஃப்ரான் சைஸ்களையும் 6.03 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ், தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பதுடன் வலுவான கிராஸ் விற்பனை திறனையும் கொண்டு உள்ளதால், சிறப்பான வளர்ச் சியை எட்டிவருகிறது.

இந்த நிறுவனம் கடன்களைச் சமாளிக்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மொத்த சொத்து நிர்வகிப்பில் 0.5% என்னும் அளவில் வைத்துள்ளது. இந்த நிறுவனம் 40% கூட்டு வளர்ச்சி எனும் அளவில் மிகச் சிறப்பான லாப வளர்ச்சியை வரும் 2022-24-ம் ஆண்டுகளில் பதிவு செய்யும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது.

பஜாஜ் ஃபைனான்ஸின் ஆம்னி சேனல் உத்தி மற்றும் டைவர்சிஃபை செய்யப்பட்ட தயாரிப்புகள் தொடர்ந்து நிறுவனத்தின் மொத்த சொத்து நிர்வகிப்பு அளவை அதிகப்படுத்தி வருகின்றன. கடன்கள் மீதான செலவுகளைக் குறைக்க இந்த நிறுவனம், மேற்கொண்டுவரும் ரிஸ்க் குறைப்பு நடவடிக்கைகள் நிறுவனத்தின் கூடுதல் லாப வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக இருக்கிறது.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

5. அசோக் லேலாண்ட் - வணிக வாகனங்கள்

தற்போதைய விலை: ரூ.146.85

இலக்கு விலை: ரூ.180

ஹிந்துஜா குழுமத்தின் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் நாட்டின் மூன்றாவது பெரிய வணிக வாகன உற்பத்தி நிறுவனமாக உள்ளது. ஆறு உற்பத்தி நிலையங்களுடன் இந்த நிறுவனம் 1,64,000 கன ரக வாகனங்களையும், 72,000 இலகுரக வாகனங்களையும் உற்பத்தி செய்யும் திறனுடன் உள்ளது. தொடர்ந்து கனரக வாகனப் பிரிவில் அதிக கவனம் செலுத்திவருவதுடன், பேருந்து உற்பத்தியிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கூடவே எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக ஸ்விட்ச் மொபிலிட்டி என்ற பெயரில் இங்கிலாந்தில் தலைமையகம் அமைத்து தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

‘இக்ரா’ ரேட்டிங் நிறுவன அறிக்கையின்படி, உட்கட்டப்புத் துறையில் அரசின் முதலீடு அதிகரிக்கும் என்பதாலும் கட்டுமானம் மற்றும் சுரங்கத்துறையின் வளர்ச்சியாலும் கனரக வாகனங்கள், ட்ரக்குகள் விற்பனை 2023-ம் நிதி ஆண்டில் 15 - 20% வளர்ச்சி அடையும் எனத் தெரிகிறது.நிறுவனத்தின் எபிட்டா வளர்ச்சி ஒவ்வொரு காலாண்டுக்கும் மேம்பட்டுவருகிறது. இரும்பு விலை குறைந்ததால், உள்ளீட்டு செலவு குறைந்து லாபத்தை அதிகப்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் நிறுவனத்தின் எபிட்டா லாப வளர்ச்சி 2022-ம் நிதி ஆண்டில் 4.6 சதவிகிதமாக இருந்தது, 2023-ம் நிதி ஆண்டில் 7.8 சதவிகிதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

6. கோஃபோர்ஜ் - கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர்

தற்போதைய விலை: ரூ.3,812.35

இலக்கு விலை: ரூ.4,500

முன்பு என்.ஐ.ஐ.டி என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனம், கோஃபோர்ஜ் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச டிஜிட்டல் சேவைகள் மற்றும் தீர்வுகள் வழங்கும் முன்னணி நிறுவனமாக உள்ளது. புராடக்ட் இன்ஜினீயரிங், டிஜிட்டல் சொல்யூஷன்ஸ், டேட்டா அனாலிடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், வாடிக்கையாளர் அனுபவம், பிசினஸ் புராசஸ் சொல்யூஷன், கிளவுட் போன்ற பிரிவுகளில் மதிப்புமிக்க நிறுவனமாக கோஃபோர்ஜ் உள்ளது. இந்த நிறுவனம் 21 நாடுகளில் 25 டெலிவரி மையங்களுடன் 22,500 தொழில்நுட்ப நிபுணர் களைக் கொண்டு இயங்கிவருகிறது. கோஃபோர்ஜ் நிறுவனம் பி.எஃப்.எஸ் அல்காரிதம், இன்ஷூரன்ஸ், டிராவல், போக்கு வரத்து மற்றும் ஹாஸ்பிட் டாலிட்டி எனப் பலதரப்பட்ட பிசினஸ்களைக் கொண்ட போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது. இவை அனைத்துமே கணிசமான வருவாய் பங்கீட்டை இந்த நிறுவனத்தில் கொண்டுள்ளன.

நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி ஏற்கெனவே கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டிவிட்டது. மேலும், விமான நிலையங்கள், கிளவுட் டிரான்ஸ்ஃபர்மேஷன் மற்றும் ஆட்டோமேஷன் போன்றவற்றிலும் வலுவான செயல்பாடு களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை எட்டுவதற்கான சாத்தியங்களுடன் உள்ளது.

7. ஆப்டஸ் வால்யயூ ஹவுஸிங் ஃபைனான்ஸ் - ஹவுஸிங் ஃபைனான்ஸ்

தற்போதைய விலை: ரூ.320.05

இலக்கு விலை: ரூ.370

இந்த நிறுவனம் ரீடெய்ல் ஹவுஸிங் ஃபைனான்ஸ் பிரிவில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறது. கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு, சுயதொழில்முனைவோர்களை அதிக அளவில் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்டு சேவை வழங்கிவருகிறது. தமிழத்தின் தென்மாவட்டங்கள், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இதன் செயல்பாடுகள் அதிகமாக உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா சேர்ந்து இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து நிர்வகிப்பில் 79% பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனம் கவனிக்கப்படாத சந்தைப் பிரிவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நடுத்தர காலத்தில் மொத்த சொத்து நிர்வகிப்பில் 26% கூட்டு வளர்ச்சியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8. எல் அண்ட் டி - கேப்பிடல் கூட்ஸ்

தற்போதைய விலை: ரூ.1,904.90

இலக்கு விலை: ரூ.2,300

இன்ஜினீயரிங் துறையின் முன்னணி நிறுவனமான எல் அண்ட் டி அரசின் உட்கட்டமைப்பு செலவுகளால் வரக் கூடிய பலன்களை அதிகமாகப் பெறும் நிறுவனமாக உள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திலும் இந்த நிறுவனம் அதிக பலனை அடையும்.

எல் அண்ட் டி நிறுவனம் வரும் ஆண்டுகளுக்கான ரூ.8.53 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் ஆர்டர்களைப் பெற்றுள்ளது. 2023-ம் நிதி ஆண்டில் 12% - 15% வளர்ச்சியை அடைவதற்கான இலக்கு வைத்துள்ளது. ஓ.பி.எம் புராஜெக்டுகள் மூலம் 9.5% வளர்ச்சியும், செயல்பாட்டு மூலதனம் விற்பனை அளவில் 20% - 22% எனும் அளவிலும் இருக்கத் திட்டமிட்டுள்ளது.

2021-26 வரையிலான கால கட்டத்தில் நிறுவனத்தின் ஆர்டர்கள் 14% அளவிலும், வருவாய் 15% அளவிலும், மூலதனத்தின் மீதான வருவாய் 18% அளவிலும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தித்திக்கும் தீபாவளி முதலீடு...
கொண்டாட்டத் திருநாளில் கோலாகலமான 10 பங்குகள்!

9. வெஸ்ட்லைஃப் டெவலப் மென்ட் - ரீடெய்ல்

தற்போதைய விலை: ரூ.762.50

இலக்கு விலை: ரூ.850

வெஸ்ட்லைஃப் டெவலப் மென்ட் நிறுவனம் அதன் 100% இணை நிறுவனமான ஹார்ட்கேசில் ரெஸ்டாரன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மெக் டொனால்ட் ரெஸ்டாரன்டு களை மேற்கு மற்றும் தெற்கு இந்திய பகுதிகளில் நடத்தி வருகிறது. மெக்டொனால்ட் ரெஸ்டாரன்ட் தனி ரெஸ்டா ரன்டுகள், டெலிவரி வகை, ட்ரைவ் த்ரூ வகை எனப் பல வகைகளில் செயல்படுகிறது. மேலும் மெக் கஃபே, மெக் பிரேக்ஃபாஸ்ட், மெக்டெலிவரி மற்றும் டெசர்ட் கியாஸ்க்குகள் எனப் பிரிவுகள் விரிவுபடுத்தப் படுகின்றன. வெஸ்ட்லைஃப் டெவலப் மென்ட் இந்தியா வில் 331 மெக்டொனல்ட் ரெஸ்டாரன்ட் ஸ்டோர்களை நடத்தி வருகிறது. துரித உணவு சேவை ரெஸ்டாரன்ட் பிரிவில் 22% ஆர்கனைஸ்ட் உணவு சேவை நிறுவனங்களைச் சந்தையில் கொண்டுள்ளது.

மெக்டொனல்ட் ரெஸ்டா ரன்டுகள் சிறு நகரங்களுக்கும் விரிவடைய இவை முக்கிய காரணமாகும். அடுத்த 3-4 வருடங்களில் இந்த நிறுவனம் ஆண்டுக்கு 40-50 ஸ்டோர்கள் என்ற அளவில் 200 புதிய ஸ்டோர்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது 70% - 80% ஸ்டோர்கள் மெட்ரோ நகரங்களிலும், டயர் 1 நகரங் களிலும் உள்ளன. நிறுவனத்தின் எபிட்டா வளர்ச்சி 14% - 15% எனும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. கேம்ஸ் - டெபாசிட்டரீஸ்

தற்போதைய விலை: ரூ.2,565.20

இலக்கு விலை: ரூ.3,010

கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ் மென்ட் சர்வீசஸ் நிறுவனம் 1988ல் நிறுவப்பட்ட பதிவு மற்றும் பரிமாற்ற சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களுக்கான தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் 70% பங்களிப்பை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இதன் முன்னணி கிளெய்ன்டுகள் இந்தியாவின் டாப் 5 சொத்து நிர்வகிப்பு நிறுவனங்களாக உள்ளன. தற்போது மியூச்சுவல் ஃபண்ட் சந்தை 16% எனும் அளவில் உள்ளது. ஆனால், சர்வதேச சராசரி 63 சதவிகித மாக உள்ளது. அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சிக்குப் பெரிய சாத்தியங்கள் உள்ளன. அதிகரித்துவரும் உள்நாட்டு முதலீடு தொடர்ந்து இத்துறையின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இந்த வளர்ச்சியில் முக்கியமான பயனாளராக கேம்ஸ் நிறுவனம் உள்ளது.

சந்தையில் முன்னணி இடத்தில் இருப்பதால், வளர்ச்சி யின் அதிகபட்ச பலனை கேம்ஸ் நிறுவனம் அடையும் என எதிர்பார்க்கலாம். இந்த நிறுவனம் வழங்கும் தொழில்நுட்பமும் தரமான சேவையும் கிளெய்ன்டுகளுக்கு வேறு ஆப்ஷன்களுக்கு ஸ்விட்ச் செய்ய யோசிக்க வைக்கும். எனவே, இதன் வருவாய் ஆண்டுக்கு 13% கூட்டு வளர்ச்சியிலும், வரிக்குப் பிந்தைய லாப வளர்ச்சி 14% எனும் அளவிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.