பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணைய மான செபி, 2021 அக்டோபர் 1 முதல் புதிய டீமேட் கணக்குத் தொடங்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தமது நாமினி விவரங்களைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வசதிகளை அனைத்து புரோக்கிங் நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களுக்கு செய்துதர வேண்டும் என்றும் செபி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய நாமினியை நியமிக்க, மாற்றி அமைக்க வசதிகளை புரோக்கிங் நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.

நாமினி விவரங்களை ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர் தெரிவிக்கலாம். சுய கையொப்ப மிட்ட விண்ணப்பங்களை நேரடியாகத் தாக்கல் செய்து நாமினி விவரங்களைத் தெரியப்படுத்தலாம்.
முதலீட்டாளர் கைரேகை மூலம் டீமேட் ஆரம்பித்திருந்தால், நாமினிக்கு ஒரு சாட்சி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் மார்ச் 31, 2022 தேதிக்குள் நாமினி விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும் என்று செபி கேட்டுக்கொண்டுள்ளது.
நாமினி விவரங்கள் ஒருவரின் மரணத்துக்குப் பிறகு, டீமேட் கணக்கில் உள்ள பங்குகள் யாருக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தெரியப்படுத்த உதவும். எனவேதான், செபி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.