பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வங்கி சேமிப்புக் கணக்கு Vs லிக்விட் ஃபண்ட்... அவசரகாலச் செலவுகளுக்கு எது பெஸ்ட்?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

பானுமதி, மதுரை.

ஆயுள் காப்பீட்டு பாலிசியில் முன்கூட்டியே பிரீமியம் கட்டமுடியுமா, இதனால் பாலிசி தாரர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in

“ஆயுள் காப்பீட்டில் பாலிசியின் முடியும் காலம் வரை ஒவ்வோர் ஆண்டும் பிரீமியம் செலுத்துவது வழக்கமான விஷயமாகும். இதுவே, பாலிசியின் பிரீமியத்தை 5, 10 ஆண்டுகள் அல்லது ஒரே முறையும் செலுத்தலாம். பிரீமியத்தை எப்படிக் கட்டினாலும் பாலிசியின் காப்பீடு தாங்கள் எடுத்துள்ள காலத்துக்குத் தொடரும். ஒற்றை பிரீமியம் அல்லது குறுகிய காலம் பிரீமியம் செலுத்துவதன் மூலம் பிரீமியம் செலவில் சிறிது சேமிக்க வழி வகுக்கும்.’’

வங்கி சேமிப்புக் கணக்கு Vs லிக்விட் ஃபண்ட்... அவசரகாலச் செலவுகளுக்கு எது பெஸ்ட்?

எல்.கோகுலன், மன்னார்குடி.

வங்கி சேமிப்புக் கணக்கில் பணத்தைப் போடுவதற்குப் பதில் லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமானது என என் நண்பர் சொல்கிறார். அவரை நம்பி களமிறங்கலாமா, லிக்விட் ஃபண்ட் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

ஜி.சோலை, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், கோயம்புத்தூர்.

“உங்கள் நண்பர் சொல்வது உண்மைதான். குறுகிய கால முதலீட்டுத் தீர்வாக மியூச் சுவல் ஃபண்ட் கடன் திட்டங் களில் மிகவும் ரிஸ்க் குறை வான ஃபண்டான லிக்விட் ஃபண்ட் இருக்கிறது. இதை வங்கி சேமிப்புக் கணக்குக்கு மாற்று எனச் சொல்லலாம். சொல்லப்போனால், அதை விட சிறிது கூடுதல் வருமானம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

சேமிப்பு கணக்குகள் மூலம் 2.7% முதல் 4% வட்டி கிடைக்கும் நிலையில், ஆர்.பி.ஐ ரெப்போ விகிதம் உயர்வுக்குப் பிறகு, லிக்விட் ஃபண்ட் 5% வருமானம் தரும் நிலைக்கு மாறியிருக்கிறது.

இந்த ஃபண்டில் முதலீட் டாளர்களிமிருந்து திரட்டப் படும் நிதி 90 நாள்களுக்குள் முதிர்வு அடையும் குறுகிய காலக் கடன் ஆவணங்களான கருவூல ரசீதுகள் மற்றும் பணச் சந்தை ஆவணங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்டில் பணமாக்கும் லிக்விட்டி மிக அதிகமாக இருக்கிறது.

இதில் முதலீடு செய்த பணத்தை 7 நாள்களுக்கு எடுக்கும்பட்சத்தில் சிறிய வெளியேறும் கட்டணம் இருக்கிறது. இந்த ஃபண்டில் இன்று 11 மணிக்கு யூனிட்டு களை விற்றால், அடுத்த வணிக நாளில் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்து விடும்.

இந்த ஃபண்டில் குறுகிய காலத் தேவைகளுக்கு மற்றும் அவசரகால செலவு களுக்கு பணத்தைப் போட்டு வைத்துக்கொள்ளலாம்.”

தி.பிரபு, கடையம்.

ஐந்தாண்டு இலக்குடன் இப்போது ஐ.டி.சி பங்குகளில் முதலீடு செய்யலாமா?

எல்.அர்ஜூன், செபி பதிவு பங்குச் சந்தை ஆலோசகர், https://flyingcalls.com

“வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள் களை (Fast moving consumer goods) விற்பனை செய்து வரும் நிறுவனமான ஐ.டி.சி-யின் (ITC) பங்கு விலை ரூ.290 - 310 வரையில் நிலைகொண்டுள்ளது. நடப்பு 2022-23-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நல்ல முன்னேற்ற நிதிநிலையைக் கொண்டுள்ளது. குறிப்பாக, வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) 33% அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நிதிநிலை மேம்பட்டுள்ளது. ஹோட்டல் வருவாய் 334%, சிகரெட் வருவாய் 28%, விவசாய வருவாய் 82% அதிகரித்துள்ளது.

கொரோனா காலத்துக்கு முன்பு இருந்த நிலையை இப்போது எட்டியுள்ளோம் என நிறுவனம் தெரிவித்து உள்ளது. அது மட்டுமல்லாமல், ஹோட்டல் வருவாய் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வந்துள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.சி நிறுவனப் பங்கின் டிவிடெண்ட் யீல்டு 3.70 என்கிற அளவில் உள்ளது. ஆகவே, நீண்ட கால நோக்கில் தற்போதைய விலையில் ரூ.290 - 310 வாங்கலாம். மேலும், சந்தையில் சரிவு வந்தால், அதை சாதகமாகப் பயன்படுத்தி மேலும் வாங்கலாம்.”

சிவகுமார், இ-மெயில் மூலம்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எனக்கு 48 வயது. ஓய்வுக்காலத்துக்காக முதலீட்டை இன்னும் ஆரம்பிக்க வில்லை. என்னால் இப்போது மாதம்தோறும் ரூ.12,000 முதலீடு செய்ய முடியும். என் ஓய்வுக்கால முதலீட்டுக்கு எப்படித் திட்டமிடுவது?

கே.பூபதி மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், திருச்சி.

“ஓய்வூதியத் திட்டமிடல் மிகவும் முக்கியமானது மற்றும் அதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முதலீட்டை ஆரம்பித்து ஆண்டுக்கு 10% முதலீட்டுத் தொகை அதிகரிப்புடன் முதலீட்டைத் தொடங்கவும். இப்படிச் செய்வதன் மூலம், அடுத்த 12 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக (CAGR) 12% வருமானம் கிடைத்தால், சுமார் ரூ.50 லட்சம் தொகுப்பு நிதியை உருவாக்க முடியும்.”

வங்கி சேமிப்புக் கணக்கு Vs லிக்விட் ஃபண்ட்... அவசரகாலச் செலவுகளுக்கு எது பெஸ்ட்?

ல.தரணிதரண், இ-மெயில் மூலம்.

என் தந்தை ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். நான்கு பேர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கு அவரது ஓய்வூதியத்தைத் தவிர தற்போதைக்கு வேறெந்த வருமானமும் இல்லை. முதல் வீடு வாங்கவிருக்கும் எங்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசின் உதவித் திட்டங்கள் என்ன?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

‘‘உங்கள் தந்தை ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் என்பதால், அவருடைய வயது 60-க்கு மேல் இருக்கும் எனவும், உங்கள் தந்தை பெறும் ஓய்வூதியம் தவிர, வேறு எந்த வருமானமும் இல்லை என்று நீங்கள் சொல்வதால், வீட்டுக் கடன் பெற்றுதான் வீடு வாங்க இருக்கிறீர்கள் எனவும் யூகித்துக்கொள்கிறேன். 60 வயதுக்குமேல் பென்ஷன் வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு சில வங்கிகளும் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும் மட்டும்தான் வீட்டுக் கடன் தருகிறார்கள். அவ்வாறு நீங்கள் கடன் வாங்கும்பட்சத்தில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் நீங்கள் வாங்கும் வீட்டுக்கு வட்டிச் சலுகை இருக்கிறதா, இந்தத் திட்டம் 31 மார்ச் 2022-க்கு மேல் நீட்டிக்கப்பட் டுள்ளதா என்று சம்பந்தப் பட்ட வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்திடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.”

கமலேஷ், கும்பகோணம்.

எனக்கு வயது 35. என் மனைவிக்கு வயது 30. இருவரும் வேலை பார்க்கிறோம். வருமான வரி யும் கட்டுகிறோம். இரு பிள்ளைகள் (வயது 4 மற்றும் 2) இருக்கிறார்கள். எங்கள் அனைவருக்கும் தனித்தனி மருத்துவக் காப்பீடு எடுக்கலாமா அல்லது குடும்ப பாலிசி என்கிற ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கலாமா?

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், www.vidurawealth.com

“நீங்களும் ஒரு குழந்தையும் சேர்ந்து ஒரு பாலிசி, அதே போல் உங்கள் மனைவியும் ஒரு குழந்தையும் சேர்ந்து ஒரு பாலிசி எடுப்பது நல்லது. ஏன் எனில், உங்களைவிட உங்கள் மனைவி 5 வயது இளையவராக இருப்பதால், அந்த பாலிசியில் பிரீமியம் தொகையும் குறையும் மேலும், ஏதாவது ஒரு பாலிசி யில் க்ளெய்ம் செய்ய நேர்ந்தால் அது அடுத்த பாலிசிக்கான பலனை பாதிக்காது. இருவரும் தனித்தனியாக வரிச் சலுகை பெற உதவியாக இருக்கும்.”