தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

செல்வமகள் சேமிப்புத் திட்டம்... முன்கூட்டியே பணத்தை எடுக்க முடியுமா?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

கேள்வி பதில்

செல்வகுமாரி, காரைக்குடி

என் வயது 25. ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன். என் அலுவலகத்தில் பணிபுரியும் சீனியர்களுக்கு ஈசாப் (ESOP) அடிப்படையில் பங்கு களைத் தந்திருக்கிறார்கள். அப்படி என்றால் என்ன, அந்தப் பங்குகள் யாருக்கெல்லாம் கிடைக்கும்? சற்று விரிவாக விளக்கிச் சொல்லவும்.

தி.ரா.அருள்ராஜன். பங்குச் சந்தை பயிற்சியாளர். www.ectra.in

“ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களுக்கு, அவர்களின் நீண்ட நாள் சேவையின் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் பங்குகளை, விலை இல்லாமலோ, சந்தை விலையைவிட குறைவான விலைக்கோ நிர்வாகமானது தங்களின் ஊழியர்களுக்குத் தருவதே ‘ஈசாப்’ ஆகும்.

பொதுவாக, ஐ.டி துறையில் பெரும்பாலான நிறுவனங்கள் அவர்கள் ஊழியர்களை கெளரவிக்கும் வகையிலும், அவர்களை நிறுவனத்தில் தக்கவைப்பதற்காகவும் ‘ஈசாப்’ முறையில் பங்குகளை வழங்குகிறது. ‘ஈசாப்’ முறையில் தரப்படும் பங்குகளுக்கு வழங்கப் பட்ட நாளில் இருந்து சில வருடங்களுக்கு விற்கத் தடை இருக்கும்.”

செல்வமகள் சேமிப்புத் திட்டம்...
முன்கூட்டியே பணத்தை எடுக்க முடியுமா?

கே.சாந்தி, காரைக்குடி.

என் வயது 30. எனக்கும் என் குடும்பத்துக்கும் ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்க உள்ளேன். இதை ஆண்டு பாலிசியாக எடுக்காமல் நீண்ட கால பாலிசியாக மூன்று ஆண்டுக்கு எடுத்தால், பிரீமியத்தில் கணிசமாக மிச்சமாகும் என்கிறார்களே, இது உண்மையா? பிரீமியத் தொகையுடன் விளக்கிச் சொல்லவும்.

வெங்கடேசன் பிரம்மநாயகம், மருத்துவக் காப்பீட்டு ஆலோசகர்.

“நீண்ட கால பாலிசியாக மூன்று ஆண்டுக்கு எடுத்தால், பிரீமியத்தில் கணிசமாக மிச்ச மாகும் என்பது மிகச் சரியே. மூன்று வழிகளில் உங்களால் சேமிக்க முடியும். இரண்டு வருடத் துக்கான பிரீமியத்தை ஒரே தவணையில் செலுத்துவதால், 7.50% சேமிக்கலாம். மூன்று வருடத்துக்கான பிரீமியத்தை ஒரே தவணையில் செலுத்துவதால் 10% சேமிக்கலாம். 30 வயதான உங்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கு ஆண்டு பிரீமியம் ரூ.10,000 ஆகும். இரண்டு ஆண்டுக்கு சேர்த்துக் கட்டினால் 20,000 ரூபாய்க்கு பதில் ரூ.18,500 பிரீமியம் கட்டினால் போதும். இதுவே மூன்று ஆண்டு எனில், ரூ.30.000-க்கு பதில் ரூ.27,000 பிரீமியம் கட்டினால் போதும்.

நீங்கள் வருமான வரி கட்டுபவராக இருந்தால், பிரீமியம் 3 வருடத்துக்கு மொத்தமாகக் கட்டியிருந்தாலும் அதை மூன்றாகப் பிரித்து அந்தந்த வருடத்துக்கு உண்டான பிரீமியத்தின் வருமான வரி சலுகையை வருமான வரி விதிகளின்படி பெறலாம்.”

நான் ஜெயக்கொடி, திருவான்மியூர்.

ஓர் பள்ளி ஆசிரியை. மாதச் சம்பளம் ரூ.70,000. வயது 40. எனக்கு ஓய்வூதியம் கிடையாது. என்.பி.எஸ் திட்டத்தில் மாதம் எவ்வளவு முதலீடு செய்தால், என் 60-வது வயதில் மாதம்தோறும் சுமார் ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்கும்?

எஸ்.சரவணன், சர்டிஃபைட் டிரஸ்ட் & எஸ்டேட் பிளானர், Purplepond.in

“என்.பி.எஸ் திட்டத்தில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடு (Equity), அரசுப் பத்திரம் (Government Bond), கார்ப்பரேட் பத்திரம் (Corporate Bond) மூன்று பிரிவுகளில் முதலீடு செய்யப்படும். இதில் எந்தப் பிரிவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.

ஒரு பிரிவில் மட்டுமோ, இரண்டு பிரிவுகள் சேர்த்தோ விகிதாசார அடிப்படையில் முதலீடு செய்ய முடியும். உதாரணமாக, அரசுப் பத்திரத் தில் மாதம்தோறும் ரூ.22,600 முதலீடு செய்து அதற்கு சுமார் 6% வட்டி கிடைத்தால், 20 வருடத் துக்குப் பிறகு, உங்கள் என்.பி.எஸ் கணக்கில் ரூ.1.03 கோடி இருக்கும். இதன் மூலம் மாதம் ரூ.50,000 உங்கள் இறுதிக் காலம் வரை கிடைக்கும். உங்கள் காலத்துக்குப் பிறகு ரூ.1 கோடியானது நீங்கள் குறிப்பிடும் நாமினிக்கு மொத்த மாகக் கிடைக்கும். பங்குச் சந்தை சார்ந்த முதலீடு மற்றும் அரசு பத்திரம் முறையே 50% : 50% முதலீடு செய்ய முடிவெடுத்து, மாதம்தோறும் ரூ.16,000 முதலீடு செய்தால், 20 வருடத்துக்குப் பிறகு ரூ.50,000 மாதம்தோறும் ஓய்வூதியமாக உங்களுக்குக் கிடைக்கும்.”

செல்வமகள் சேமிப்புத் திட்டம்...
முன்கூட்டியே பணத்தை எடுக்க முடியுமா?

மஞ்சுளா, பீளமேடு, கோவை.

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை அதன் முதிர்வுக் காலத்துக்கு முன்பே முடிக்க முடியுமா, அதற்கு ஏதாவது நிபந்தனை இருக்கிறதா?

தெய்வானை ராஜ்பாண்டியன், அரசு அங்கீகாரம் பெற்ற தபால் நிலைய முகவர்.

“செல்வமகள் திட்டத்தில் முதிர்வுக் காலத்துக்குமுன் பணத்தை எடுக்க முடியாது. ஆனால், கணக்கு ஆரம்பித்து 5 வருடங்கள் முடிவடைந்திருந் தால், பணத்தைத் திரும்ப எடுக்க வாய்ப்பு உண்டு. குழந்தையின் பேரில் கணக்குத் தொடங்கப் பட்ட நிலையில், அந்தக் குழந்தை இறக்க நேரிட்டால், முதிர்வுக் காலத்துக்கு முன்கூட்டியே பணத்தை எடுக்கலாம். பணத்தை கட்டுபவர் இறந்துவிட்டாலும், முதிர்வுக் காலத்துக்குமுன்பே பணத்தை எடுக்க முடியும். எல்லா வற்றுக்கும் தக்க சான்றுகளை அஞ்சலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.”

செல்வமகள் சேமிப்புத் திட்டம்...
முன்கூட்டியே பணத்தை எடுக்க முடியுமா?

ஏ.சிவாஜி, படப்பை.

என் மகளுக்கு வயது 3. அவளை முன்னணிக் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ படிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு எவ்வளவு செலவாகும்? அதற்கு எந்த மாதிரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நான் மாதம்தோறும் முதலீடு செய்ய வேண்டும்?

சி.குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், நாமக்கல்.

“தற்போதைய நிலையில், ஐ.ஐ.எம் போன்ற முன்னணி மேலாண்மைக் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.5 லட்சம் - 10 லட்சம் வரை ஆகிறது. சராசரியாக ரூ.7.5 லட்சம் என எடுத்துக்கொண்டாலும் இரண்டு ஆண்டு படிப்புக்கு ரூ.15 லட்சம் ஆகும். உங்கள் மகளை 20 வயதில் எம்.பி.ஏ படிக்க வைப்பதாக இருந்தால், ஆண்டுப் பணவீக்கம் 6% என்ற அடிப்படையில் (உண்மை யில் கல்விப் பணவீக்கம் இன்னும் அதிகம்!) ரூ.40 லட்சம் தேவைப்படும். இந்தத் தொகை கிடைக்க, ஆண்டுக்கு 12% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ள பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ.6,000 வீதம் 17 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். நீண்ட கால முதலீடு என்பதால், நன்கு செயல்படும் ஃபிளெக்ஸிகேப், மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.”

சுல்தான் காஜா, இ-மெயில் மூலம்.

மியூச்சுவல் ஃபண்டில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய முடியுமா, இதற்கு நிபந்தனைகள் இருக்கிறதா?

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

“வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு (NRI) மியூச் சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய எந்தவிதமான கட்டுப் பாடும் இல்லை. அதே வேளையில், அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் இந்திய மக்கள் ஏழு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் திட்டங்களில்தான் முதலீடு செய்ய முடியும்.

முதலீட்டாளர் கையொப்பமிட்ட பான் கார்டு நகல், மார்பளவு புகைப்படம் ஒன்று , முதலீட்டாளர் கையொப்ப மிட்ட விசா நகல், முதலீட்டாளர் கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகல் (முதல் மற்றும் இரண்டாம் பக்கம், முத்திரையிட்ட பக்கம்), முகவரிக்கான ஆதாரம் ஏதாவது ஒன்று ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். இதன் அடிப்படையில் கே.ஒய்.சி படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். இந்தியர்களுக்கு என்ன வருமான வரி விதிக் கப்படுகிறதோ, அதேதான் அயல்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும். ஆகையால், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம்.”