Published:Updated:

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்... பாதுகாப்பான முதலீடா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்... பாதுகாப்பான முதலீடா..?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கு.வள்ளி, மதுரை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஆஞ்ஜியோபிளாஸ்ட் செய்தார்கள்; ரத்தக் குழாயில் மீண்டும் அடைப்பு வராமல் இருக்க இரண்டு சன்ட் வைத்தார்கள். இப்போது ரத்தக் குழாயில் அடைப்பு எப்படி இருக்கிறது என ஆஞ்சியோகிராம் பார்க்க வேண்டும் என இதய நோய் சிகிச்சை நிபுணர் சொல் கிறார். இப்படி ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்து, பாதிப்பு எதுவும் இல்லை எனத் தெரிந்தால், மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் அந்தச் செலவுக்கு இழப்பீடு கிடைக்குமா?

வெங்கடேசன் பிரம்மநாயகம், மருத்துவக் காப்பீட்டு ஆலோசகர்.

“மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை, மருத்துவரின் அறிவுரைப்படி, டெஸ்ட் எடுத்து, அதில் ஏதேனும் பாதிப்பு எனக் கண்டுபிடிக்கப் பட்டால் அதற்கு மருத்துவமனையில் குறைந்தது 24 மணிநேரம் அல்லது அதற்கு குறைவாக பாலிசியின் நிபந்தைகளின்படி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தால், க்ளெய்ம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், மருத்துவரின் அறிவுரைப்படி, நீங்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அல்லது புறநோயாளியாக டெஸ்ட் எடுக்கப்பட்டு, அதில் பாதிப்பு எதுவும் இல்லை எனத் தெரிய வந்தால், பொதுவான மருத்துவக் காப்பீட்டின் விதிகளின்படி, க்ளெய்ம் எதுவும் கிடைக்காது.

ஆனால், நீங்கள் எடுத்திருக்கும் மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் புறநோயாளிக்கான (OPD Treatment) சிகிச்சை செலவுகளை க்ளெய்ம் செய்யக்கூடிய வசதி இருந்தால், மருத்துவரின் அறிவுரைப்படி டெஸ்ட் எடுத்து, அதில் பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் பாலிசி யின் விதிமுறைக்கு உட்பட்டு க்ளெய்ம் செய்து கொள்ளலாம்.”

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்... பாதுகாப்பான முதலீடா..?

ஜி.ஐயப்பன், இ-மெயில் மூலம்.

1993-ம் ஆண்டில் மனை ஒன்றை வாங்கினேன். இதை 2020-ம் ஆண்டில் ரூ.29 லட்சத்துக்கு விற்றேன். ரூ.20 லட்சம் மூலதன ஆதாயம் என கோவிட் காலத்தில் ஆடிட்டர் ஒருவர் சொன்னதை வைத்து 54EC மூலதன பாண்டில் ரூ.20 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால், வேறு ஒரு ஆடிட்டர் மூலம் வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு மூலதன ஆதாயம் ரூ.7.5 லட்சம்தான் வந்தது. நான் கூடுதலாக முதலீடு செய்த ரூ.12.50 லட்சத்தை எப்படி ரீஃபண்ட் பெறுவது?

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர்.

“மூலதன பாண்டில் அதிகமாக முதலீடு செய்திருக்கும் தொகையை முன்கூட்டியே எடுக்கும் வசதி இருக்கும்பட்சத்தில் கூடுதலாகக் கட்டிய தொகையை எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலான பாண்டுகளில் முன்கூட்டியே பணத்தை எடுக்கும் வசதி இருக்கிறது. ஆனால், அப்படி எடுக்கும்பட்சத்தில் வட்டி கிடைக்காது. எடுக்கும் தொகைக்குக் கிடைத்திருக்கும் வரிச் சலுகை திரும்பப் பெறப்படும். எந்த அளவுக்கு முதலீடு செய்ய வேண்டுமோ, அந்த அளவு தொகையை மட்டும் விட்டுவிட்டு மீதியை எடுத்துக்கொள்ளலாம்.”

மதன் குமார், கரூர்.

நான் மாதம்தோறும் ரூ.10,000 வீதம் ஆறு ஃபண்டு களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட், கனரா ராபிகோ ஸ்மால்கேப் ஃபண்ட், டாடா ஈக்விட்டி பி/இ ஃபண்ட், ஏ.பி.எஸ்.எல் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் ஆகியவைதான் அந்த ஆறு ஃபண்டுகள். என்னால் 15 வருடங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடியும். என்னுடைய முதலீட்டுக் கலவை சரியானதா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“மாதம் ரூ.60,000 முதலீடு செய்வதன் மூலம் 15 வருடங் களில் உங்களது முதலீட்டுத் தொகை சுமார் ரூ.3 கோடிக்கு மேல் வளர்ந்திருக்கும். இது வருடத்துக்கு 12% வளர்ச்சி விகிதம் இருக்கும் என்ற அனுமானத்தில். இந்த வளர்ச்சி வருடத்துக்கு 10% இருந்தால்கூட 15 வருடங்களில் இந்த முதலீட்டின் மதிப்பு ரூ 2.5 கோடி இருக்கும்.

உங்களது தொகுப்பில் எல்லா ஃபண்டுகளுமே பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளாக உள்ளன. நீண்ட கால முதலீடு என்பதால், இதில் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், பங்குச் சந்தையின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஈடு கொடுத்து, தொடர்ந்து முதலீடு செய்துவருவது முக்கியம் ஆகும்.

நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஃபண்டுகளில் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டாக பராக் பரிக் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டினைத் தேர்வு செய்வது நல்லது. அதே போல் டாடா ஃபண்டுக்கு பதி லாக எடெல்வைஸ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது.”

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்... பாதுகாப்பான முதலீடா..?

கே.சுப்ரமணியன், இ-மெயில் மூலம்

என் வயது 35. இதர வருமானமாக வரி விதிக்கப்படும் வட்டித் தொகைக்கு எப்படி வரி கட்ட வேண்டும், அதை வருமான வரிக் கணக்கில் காட்ட வேண்டுமா?

ஆர்.ஜெகதீஷ், ஆடிட்டர், தேனி

“வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலமான வட்டிக்கு நிதி ஆண்டில் ரூ.10,000 வரைக்கும் வருமான வரி இல்லை. இதற்கு மேற்படும் வட்டி வருமானம் அது வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் வந்ததாக இருந்தால், நீங்கள் எந்த வருமான வரி வரம்பில் வருகிறீர்களோ, அதற்கேற்ப (பழைய வரி முறையில் 5%, 20%, 30%) கட்ட வேண்டும். இந்த விவரத்தை வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது காட்ட வேண்டும்.

இப்போதெல்லாம் உங்களுக்கு உரிய ஐ.டி.ஆர் வரிப் படிவத்தில் நீங்கள் எவ்வளவு வட்டி வருமானத் துக்கு வரி கட்ட வேண்டும் என்ற விவரம் முன்கூட்டியே வருமான வரித் துறையால் நிரப்பட்டு விடுகிறது. இதனால், நீங்கள் வரி கட்டாமல் இருக்க முடியாது என்பதுடன், அதை வரிக் கணக்கில் காட்டாமலும் இருக்க முடியாது.”

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்... பாதுகாப்பான முதலீடா..?

ஆர்.சுந்தர், இ-மெயில் மூலம்.

நான் வட்டி வருமானத்துக்காக கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் (NBFCs) ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். வங்கிகளில் இருப்பதுபோல், இந்த டெபாசிட்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரைக்கும் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு இருக்கிறதா? கம்பெனி மற்றும் நிதி நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டு களில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன..?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங் களில் முதலீடு செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு கிடையாது. ஆகவே, நீங்கள் எந்த கார்ப்பரேட் நிறுவனத்தில், எந்த வங்கிசாரா நிதி நிறுவனத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த நிறுவனம் மிக அதிகமான தரக்குறியீட்டைப் (Credit Rating) பெற்றிருக்கிறதா என்பதைப் பாருங்கள். அப்படிப் பெற்றிருந்தால், உங்களது முதலீடு ஓரளவு பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லலாம். அதிக வருமானம் என்பதை மட்டும் மனதில்கொண்டு செயல்படாமல், நிறுவனத்துக்கான தரக்குறியீடு எப்படி இருக்கிறது என்று அவசியம் பார்த்து, முடிவெடுப்பதுதான் உங்கள் பணத்துக்கான பாதுகாப்பைத் தரும்.”

விவேகானந்தன், மதுரை.

நான் 800 சதுர அடியில் வீடு கட்டத் திட்டமிட்டுள்ளேன். இதில் எந்த இடத்தில் எல்லாம் எம் சாண்ட் பயன்படுத்தலாம்?

ஜி.கணேஷ், கட்டடவியல் வல்லுநர், ஆர்.ஜி. அசோசியேட்ஸ், கோயம்புத்தூர்.

“கட்டுமானத்தைப் பொறுத்தவரை, எம் சாண்ட் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம். ஆனால் தரமான எம் சாண்ட் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம் என்பதை மட்டும் மறக்காதீர்கள்.”