Published:Updated:

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வரிச் சலுகை உண்டா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வரிச் சலுகை உண்டா..?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கே.ஜி.சந்துரு, கோயம்புத்தூர்.

நான் ஒரு சேவை நிறுவனம் நடத்தி வருகிறேன். நான் சேவை செய்து கொடுத்த உற்பத்தி நிறுவனம் இதுவரை எனக்கு (ஒரு வருடத்துக்கு மேல் 14 இன்வாய்ஸ்) பில் தரவில்லை. அவர்களுக்கு நான் ஜி.எஸ்.டியும் கட்டியுள்ளேன். ஆனால், அவர்கள் அந்த ஜி.எஸ்.டி-யை க்ளெய்ம் செய்துவிட்டார்கள். அந்த நிறு வனம் மேற்கொண்டு தொழிலை விரிவாக்கம் செய்துகொண்டே செல்கிறது. இந்த மாதிரி 10 சேவை நிறுவனங்களுக்கு மேல் பணம் கொடுக்காமல் நிறுத்தி வைத்து, அதன் மூலம் மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டி வருகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் கொடுத்து எங்களை நசுக்கி வருகிறார்கள். இதனால் வங்கி களில் கடன் சுமை அதிகரித்து வட்டியும் அதிகரித்துள்ளது. இன்வாய்ஸ்க்குப் பணம் தர மறுக்கும் நிறுவனத்தின் மேல் புகார்/முறையீடு செய்வதற்கு வழிவகை உண்டா?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“இதற்கு நான்கு வழிகள் உள்ளன. முதலாவதாக, நீங்கள் சிறு குறு தொழில் செய்பவராக இருந்தால் சிறு, குறு தொழில்கள் சமாதானம் வலைதளத்தில் (https://samadhaan.msme.gov.in/) உங்களு டைய குறைகளை ஆதாரங் களுடன் பதிவு செய்யுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் அந்த உற்பத்தி நிறுவனத் துடன் பேசி, உங்களுக்கு வர வேண்டிய தொகையை வாங்கித் தர உதவி புரிவார்கள்.

இரண்டாவதாக, அந்த உற்பத்தி நிறுவனம் 180 நாள் களுக்கு மேலாக உங்களுக்குத் தர வேண்டிய பணத்தை ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்துத் தராமல் இருப்பதால், உள்ளீட்டு வரியை ( Input Tax Credit - ITC) அந்த நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள முடியாது. நீங்கள் சேவை தந்த அந்த உற்பத்தி நிறுவனம் எந்த ஜி.எஸ்.டி அலுவலகத்தின் அதிகார வரம்பின்கீழ் வருகிறதோ, அங்கு சென்று புகார் மனு ஒன்றை அளிப்பது அவசியம்.

மூன்றாவதாக, அந்த உற்பத்தி நிறுவனம் ஒரு லிமிடெட் கம்பெனியாக அல்லது எல்.எல்.பி-ஆக (LLP) இருக்கும்பட்சத்தில், உங்களுக்கும் மற்றும் வேறு பலருக்கும் தர வேண்டிய தொகை ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருக்கும்பட்சத் தில், ஐ.பி.சி (IBC) சட்டப்படி, அந்த உற்பத்தி நிறுவனத்துக்கு படிவம் 3-ன்படி கடிதம் எழுதலாம். அந்தக் கடிதத் துக்குரிய பதிலைத் தர 15 நாள் கால அவகாசம் தரப்படும். இந்தக் கால அவகாசத்துக்குப் பிறகும் அந்த நிறுவனம் பதில் தரவில்லை எனில், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) புகார் அளித்து அந்த உற்பத்தி நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கை எடுக்கலாம்.

நான்காவதாக, அந்த உற்பத்தி நிறுவனத்தின்மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பி சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்கலாம். இந்த நான்கு வழிகளுக்கு உங்களுக்குத் தோதான ஒன்றை நீங்கள் எடுக்கலாம்.”

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வரிச் சலுகை உண்டா..?

ஏ.மதிவாணன், சென்னை - 18.

என் வயது 50. என் ஓய்வுக்காலத்துக்கு இன்னும் முதலீட்டை ஆரம்பிக்கவில்லை. ஒரே பெண் பிள்ளையை அண்மையில் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். 60 வயதில் பணி ஓய்வு பெறுவேன். என்னால் குடும்பச் செலவுகள் போக மாதம் ரூ.40,000 முதலீடு செய்ய முடியும். இதை எந்த வகையான மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது, ஆண்டுக்கு சராசரியாக என்ன வருமானம் கிடைக்கும், என் 60-வது வயதில் என் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் எவ்வளவு பணம் சேர வாய்ப்பிருக்கிறது?

ஜி.சோலை, நிறுவனர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்.

“நீங்கள் 60 வயதில் பணி ஓய்வு பெறப் போவதால், இன்னும் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய முடியும். 4 அல்லது 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரவும். முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகள் என்பதால், ரிஸ்க் எடுத்து பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

உங்களின் மாத முதலீட்டுத் தொகையான ரூ.40,000-ஐ லார்ஜ்கேப் ஃபண்ட், ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரவும். பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் ஹைபிரிட் ஃபண்டுகளின் முதலீட்டுக் கலவையில் இடம்பெற்றிருக்கும் கடன் பத்திரங்கள் பங்குச் சந்தை இறக்கத்தில் கைகொடுக்கும். மேலும், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்படுவதால், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தில் சராசரியாக அதிக யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், நல்ல வருமானமும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஃபண்டுகளின் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 10 - 12% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 12% வருமானம் என வைத்துக்கொண்டால், மாதம்தோறும் செய்யும் ரூ.40,000 முதலீடு என்பது 10-ம் ஆண்டு இறுதியில் சுமார் ரூ.92 லட்சமாக அதிகரித்திருக்கும்.”

சுந்தர், திருநெல்வேலி.

நான் ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஸ்மால்கேப், மிட்கேப், ஃப்ளெக்ஸிகேப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில் தலா ரூ.2,000 எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் முதலீடு செய்துவருகிறேன். மேற்கண்ட முதலீடுகள் அனைத்தையும் 15 ஆண்டுகளுக்குமேல் தொடர திட்டமிட்டுள்ளதால், கூடுதல் ரிஸ்க் எடுத்துள்ளேன். இவ்வாறு ஒரே நிறுவனத்தின் திட்டங்களில் அனைத்து முதலீடுகளையும் செய்வது சரியா..?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“ஒரே ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் சில சௌகர்யங்கள் இருந்தாலும், லாப நோக்கிலும் ரிஸ்க் அணுகுமுறை நோக்கிலும் அப்படிச் செய்வது சரியான வழி அல்ல. பல சமயங்களில் ஒரு ஃபண்ட் நிறுவனத்தில் பல ஸ்கீம்கள் ஒரே நிர்வாகியால் கையாளப்படலாம். அப்படி இல்லை எனினும், பல ஸ்கீம்கள் ஒரே முதலீட்டு வழிமுறையின்படி நிர்வகிக்கப்படும் நிலை இருக்கலாம்.இதனால், உங்களுக்குப் போதுமான அளவில் பரவலாக்கம் (diversification) கிடைக்காமல் போகலாம். அதன் காரணமாக, உங்கள் முதலீட்டுத் தொகுப்பின் ரிஸ்க் அளவு அதிகரிக்கலாம். குறிப்பாக, ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் இந்த அபாயம் அதிகம். ஆகையால் ஒரு ஃபண்ட் நிறுவனத்தில் 25 - 30 சதவிகிதத்துக்குமேல் முதலீடு செய்வது சரியான அணுகுமுறை அல்ல.”

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வரிச் சலுகை உண்டா..?

சுரேந்தர், கன்னியாகுமரி.

நான் வருமான வரியைச் சேமிக்க விரும்புகிறேன். வங்கியில் உள்ள வரி சேமிப்புத் திட்டம் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?

டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்.

“வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களில் ஐந்தாண்டு ‘லாக்இன் பீரியட்’ கொண்ட திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் இந்தச் சிறப்புத் திட்டம் இருக் கிறது. தற்போதைய நிலையில் ஐந்தாண்டு வரி சேமிப்பு வங்கி எஃப்.டி-க்கு ஆண்டுக்கு வட்டி வருமானம் 6%-6.50% கிடைக்கிறது. இதில் குறைந்த பட்சம் 100 ரூபாய்கூட முதலீடு செய்ய முடியும். வட்டி வருமானத்துக்கு வரி இருக் கிறது. இதற்கான வட்டியை வங்கிகளே நிர்ணயம் செய்து கொள்கின்றன. மூத்த குடி மக்களுக்கு 0.5% கூடுதல் வட்டி வழங்கப்படும். இரு நபர்கள் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய லாம். முதன்மை உறுப்பினர் (Primary Holder) மட்டுமே வரிச் சலுகை பெற முடியும்.”