Published:Updated:

பங்குச் சந்தைக்குப் புதியவர்கள் பின்பற்ற வேண்டிய முதலீட்டு உத்தி என்ன..?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

கேள்வி பதில்

பங்குச் சந்தைக்குப் புதியவர்கள் பின்பற்ற வேண்டிய முதலீட்டு உத்தி என்ன..?

கேள்வி பதில்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

எஸ்.சண்முகவேல், திருநெல்வேலி.

பங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, எந்த கம்பெனி பங்கில் முதலீடு செய்வது என்பதை எப்படித் தீர்மானிப்பது, அடுத்து, எந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி பங்குகளை வாங்குவது/ விற்பது?

தி.ரா.அருள்ராஜன். பங்குச் சந்தை பயிற்சியாளர், www.ectra.in

“பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான பங்குகளை உங்களின் ரிஸ்க் எடுக்கும் அளவின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். நீங்கள் பங்குச் சந்தைக்குப் புதியவராக இருந்தாலும், குறைவாக ரிஸ்க் எடுப்பவராக இருந்தாலும், நிஃப்டி 50-யில் இருக்கும் பெரிய நிறுவனங் களில் மட்டுமே முதலீடு செய்யவும். கூடுதல் ரிஸ்க் எடுப்பவராக இருந்தால், கொஞ்சம் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களையும் உங்கள் ஃபோர்ட்போலியோவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பங்கு நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கு, அதன் லாப நஷ்டக் கணக்கு, இருப்பு நிலை மற்றும் பணப்புழக்க நிலவரத்தையும் அறிந்து முடிவெடுக்க வேண்டும். நீங்களாகவும் இதைப் பல வலைதளங்களில் தேடிக் கண்டுபிடித்துத் தெரிந்துகொள்ளலாம். இல்லையெனில், இதற்கு முறையாகப் பயிற்சி கொடுப்பவரிடம் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். இதற்கான பயிற்சி வகுப்புகளை நாணயம் விகடன் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகள் எப்போது நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள நாணயம் விகடன் ஃபேஸ் புக்கைத் (https://www.facebook.com/NaanayamVikatan/) தொடர்ந்து பின்பற்றவும்.’’

பங்குச் சந்தைக்குப் புதியவர்கள்
பின்பற்ற வேண்டிய முதலீட்டு உத்தி என்ன..?

கே.ராஜா, கோயம்புத்தூர்

தற்போதைய சூழ்நிலையில் எந்த மியூச்சுவல் ஃபண்ட் ஒருமுறை மொத்த முதலீடு செய்வதற்கு உகந்தது? அப்படி முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன..?

எம்.கண்ணன், ஆலோசகர், radhaconsultancy.blogspot.com

“தற்போதைய நிலை என்பது பல வகையான முதலீட்டுக் காரணிகளில் ஒன்றாகக் கொள்ளலாம். பொதுவாக, உங்களின் நிதி நிலைமை மற்றும் தேவைகளைக் குறித்து முதலீடு செய்யும் திட்டம் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது வட்டி விகிதம் மற்றும் பணவீக்கம் உயர்ந்துகொண்டே வருவதால், பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடனே காணப்படும். இதனால், கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் போன்றவற்றில் நீங்கள் முதலீடு செய்வது சரியான முடிவாக இருக்கும்!’’

எஸ்.ரவீந்திரன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

என் வயது 58. நான் வரிச் சேமிப்புக்கான டயர் 1 தேசிய பென்ஷன் திட்டத்தில் (NPS) லட்சக்கணக்கில் மொத்தமாக முதலீடு செய்தால், எனக்கு 60 வயதில் பென்ஷன் கிடைக்குமா?

எஸ்.சரவணன், சர்டிஃபைட் டிரஸ்ட் & எஸ்டேட் பிளானர், Purplepond.in

“என்.பி.எஸ் திட்டத்தில் லட்சக்கணக்கில் மொத்தமாக முதலீடு செய்து 60 வயதில் பென்ஷன் பெற முடியும். ஆனால், ஒரு நிதி ஆண்டில் வருமான வரிப் பிரிவு 80CCD(1B)-யின்கீழ் 50,000-க்கு மட்டுமே வரிச் சலுகை பெற முடியும். உங்களுக்கு 2 வருடத்தில் ஓய்வூதியம் தேவைப் படும் பட்சத்தில் நீங்கள் நேரடியாக ஏதாவது ஒரு அங்கீகாரம் பெற்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்து பயன் பெறலாம்.”

வி.கணேஷ், இ-மெயில் மூலம்

லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட் யாருக்கு ஏற்றது? இதில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன..?

சி.குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், நாமக்கல்.

“லார்ஜ் மற்றும் மிட்கேப் வகை ஃபண்டில் முதலீட்டாளர் களின் பணம் முழுவதும் நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. ஆகவே, அதிக அளவு ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இந்த வகை ஃபண்டுகள் ஏற்றதாக இருக்கும். குறைந்த பட்சம் 35% லார்ஜ்கேப் பங்கு களிலும் 35% மிட்கேப் பங்கு களிலும் முதலீடு செய்யும் வகை யில் இந்த ஃபண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வகை ஃபண்டுகள் மூலம் நீண்ட கால அளவில் உறுதியான வளர்ச்சியை எதிர் பார்க்கலாம். ஐந்து ஆண்டு களுக்கு மேற்பட்ட உங்கள் இலக்குகளுக்கு இந்த வகை ஃபண்டை உங்கள் போர்ட் ஃபோலியோவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கெனவே தனித்தனியாக லார்ஜ் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தாலும் இதில் முதலீடு செய்யலாம்.”

பங்குச் சந்தைக்குப் புதியவர்கள்
பின்பற்ற வேண்டிய முதலீட்டு உத்தி என்ன..?

கலைச்செல்வி, விருத்தாசலம்

நான் மாதச் சீட்டில் சேர விரும்பு கிறேன். ஒரு சீட்டுக் கம்பெனியின் நம்பகத்தன்மையை எப்படி உறுதிப் படுத்திக்கொள்வது?

ஏ.சிற்றரசு, பொதுச் செயலாளர், அகில இந்திய சிட் ஃபண்ட்ஸ் சங்கம்.

“சீட்டுத் திட்டங்களை நடத்தும் கம்பெனிகள் பெரும்பாலும் கம்பெனிகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக இருக்கும். பார்ட்னர்ஷிப் நிறுவனங் களும் தனிநபர்களும்கூட சீட்டு நடத்தலாம்.

நீங்கள் சேர விரும்பும் நிறுவனங் கள் உங்களுக்கு நேரடியாகவோ, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நன்கு அறிந்த நிறுவனமாக இருப்பது அவசியம்.

அந்த நிறுவனத்தைப் பற்றிய விவரங்களையும் நீங்கள் சேர விரும்பும் சீட்டு பற்றியும் அவர் களிடமே கேட்டோ, இணையத்தின் மூலமோ தெரிந்துகொள்ளலாம். நிறுவனப் பதிவு எண், CIN (Corporate Identity Number), GST பதிவு எண், PAN (Permanent Account Number), சீட்டுப் பதிவு எண் ஆகியவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். பதிவு செய்யப்பட்ட சீட்டுகளில் மட்டுமே சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். சீட்டுப் பதிவு பற்றிய விவரங்களை https://tnreginet.gov.in/portal/ இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.”

பங்குச் சந்தைக்குப் புதியவர்கள்
பின்பற்ற வேண்டிய முதலீட்டு உத்தி என்ன..?

அருந்ததி, சென்னை - 17

முதலீட்டில் ரேட் ஆஃப் ரிட்டன் என்றால் என்ன, அதை எப்படி கணக்கிடு வது, இதன் அடிப்படையில் முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், www.moneyavenues.in

“முதலீடுகளில் ரேட் ஆஃப் ரிட்டர்ன் (Rate of Return - RoR) என்பது முதலீடுகளின் செயல் பாடுகளை அறிந்துகொள்ள ஒரு முக்கியமான அளவுகோல். அதாவது, வருமான செயல்பாடு களை அறிந்துகொள்வதாகும். பொதுவாக, நாம் முதலீடு களை நமது முதலீட்டு இலக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்போது, வருமானம் பெரும் பங்காற்றுகிறது. அதுவும் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் வருமான செயல்பாட்டைக் கணிப்பது பெரிய கலை ஆகும். ரேட் ஆஃப் ரிட்டனைக் கணக்கிட ஆண்டு கூட்டு வட்டிக் கணக்கின் (Compound Annual Growth Rate -CAGR) அடிப்படையில் கணக்கிட சிறந்த வழி ஆகும்.

ஒரு முதலீட்டுத் திட்டம் ஓராண்டுக்கு மேற்பட்டு பல ஆண்டுக்குச் செல்லும்போது சி.ஏ.ஜி.ஆர்தான் முதலீட்டு செயல்பாட்டை மிகச் சரியாகக் கணிக்க உதவும் ஒரு கருவி. முதலீடு செய்தபின், அதன் வளர்ச்சியைத்தொடர்ச் சியாகக் கணக்கிட உதவுவதுதான் சி.ஏ.ஜி.ஆர். முதலீடுகளை செய்யும்போது, முக்கியமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது ஃபேக்ட்ஷீட்டுகளில் (Factsheet) தரப்படும் திட்டங்களின் சி.ஏ.ஜி.ஆர்-ஐ அடிப் படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கலாம்.

முதலீட்டுத் திட்டங்களை ரேட் ஆஃப் ரிட்டர்ன் அடிப் படையில் மட்டுமே தேர்வு செய்யாமல், அந்த முதலீட்டின் சாதக, பாதக அம்சங்களையும், உங்களின் நோக்கம் மற்றும் இலக்குகளையும் மனதில்கொண்டு தேர்வு செய்வதே சரி.’’