நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

விலை குறைந்த எல்.ஐ.சி பங்கு... இப்போது முதலீடு செய்யலாமா..?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

கேள்வி பதில்

அ.பாண்டியன், மதுரை - 2

நடப்பு நிதி ஆண்டு 2022-23 முதல் காலாண்டில் கோயம்புத்தூரைச் சேர்ந்த கே.பி.ஆர் மில் (KPR Mill) நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 75 சதவிகிதமாக உள்ளது. இந்த நிலையில், அந்தப் பங்கை அதன் தற்போதைய விலையில் நீண்ட கால முதலீடாக வாங்கி சேர்ப்பது நல்ல முதலீடாக இருக்குமா?

எல்.அர்ஜூன், செபி பதிவு பங்குச் சந்தை ஆலோசகர், https://flyingcalls.com

“கே.பி.ஆர் மில் பங்கின் விலை கடந்த இரண்டு வருடங்களில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் 70 ரூபாயாக இருந்த பங்கின் விலை, கடந்த 2022 ஜனவரி மாதத்தில் 750 ரூபாய் வரை சென்றுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் கூட்டு வருடாந்தர வளர்ச்சி விகிதம் 23.7% என நல்ல லாப வளர்ச்சியை வழங்கியுள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு 2012-ல் இதன் நிகர லாபம் ரூ.33 கோடியாக இருந்த நிலையில், தற்போது 2022 மார்ச் மாதம் வரை நிகர லாபம் ரூ.842 கோடியாக உள்ளது. ஆகவே, நல்ல வளர்ச்சியைக் கொண்டுள்ள இந்த நிறுவனத் தின் பங்குகளை நீண்ட கால முதலீட்டு நோக்கில் வாங்கலாம். இந்தப் பங்கின் விலை தற்போது ரூ.550 என்ற நிலையில் உள்ளது. இந்தப் பங்கின் விலை இறங்கும்பட்சத்தில் ரூ.400 முதல் ரூ.500 வரையிலான பங்கு விலையில் முதலீடு செய்யலாம்.’’

விலை குறைந்த எல்.ஐ.சி பங்கு... இப்போது முதலீடு செய்யலாமா..?

கோகுல்பிரசாத், கோயம்புத்தூர்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் வெளியேறும் கட்டணம் எப்படிக் கணக்கிடப்படுகிறது; மொத்த முதலீடு மற்றும் எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு எப்படிக் கணக்கிடுகிறார்கள்?

ஜி.சோலை, நிறுவனர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்.

“பங்குச் சந்தை சார்ந்த பெரும்பாலான ஈக்விட்டி ஃபண்டுகள் எப்போது வேண்டு மானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் யூனிட்டுகளை விற்று பணமாக்கும் வசதி கொண்ட ஓப்பன் எண்டெட் ஃபண்டுகளாகும். பொதுவாக, ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்த ஓராண்டுக்குள் யூனிட்டுகளை விற்றால் வெளியேறும் கட்டணம் சுமார் 1 சதவிகிதமாக இருக்கும். இந்த வெளியேறும் கட்டணம் யூனிட்டுகளை விற்கும் மதிப்புக்கு விதிக்கப்படும்.

மொத்த முதலீடு என்கிறபோது முதலீடு செய்த தேதியிலிருந்து ஓராண்டு எனக் கணக்கிடப்படும். எஸ்.ஐ.பி முறை முதலீட்டில் ஒவ்வொரு எஸ்.ஐ.பி முதலீடும் தனித் தனி முதலீடாக எடுத்துக் கொள்ளப்பட்டு வெளியேறும் கட்டணம் விதிக்கப் படும். அதாவது, ஒவ்வொரு மாதமும் எத்தனை யூனிட்டுகள் ஒதுக்கப்படுகின்றன; அத்தனை யூனிட்டுகளை முதலீட்டு தேதியிலிருந்து ஓராண்டுக்குள் விற்றால் வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.”

விலை குறைந்த எல்.ஐ.சி பங்கு... இப்போது முதலீடு செய்யலாமா..?

விவேக் குமார், சென்னை.

ரூ.950 வரை சென்ற எல்.ஐ.சி பங்கு இப்போது ரூ.650 என்கிற நிலையில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், நீண்ட கால முதலீடாக எல்.ஐ.சி பங்கில் பணத்தை முதலீடு செய்யலாமா?

எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com

“ஒரு நிறுவனப் பங்கின் விலை அந்த நிறுவனத் தின் தற்போதைய வருவாய் மற்றும் எதிர்கால வருவாயைக் கணக்கில்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விகிதம் P/E விகிதம் என்று அழைக்கப்படும். ஒரு நிறுவனத் தின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு பிரகாசமாக இருப்பின், பங்கின் P/E விகிதம் அதிகமாக இருக்கும்.

பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்ட மூன்று ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களான ஐ.சி.ஐ.சிஐ புரூடென்ஷியல், எஸ்.பி.ஐ லைஃப் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி லைஃப் ஆகியவற்றிற் கான P/E 75-85 ஆக உள்ளது. (சென்செக்ஸ்-ன் P/E 23தான் என்பதை நாம் கவனிக்க வேண்டும்!). இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதே இதற்கு காரணம்.

இருப்பினும், இந்த அணுகு முறை எல்.ஐ.சி-க்கு பொருந்தாது. எல்.ஐ.சியின் தற்போதைய P/E 100 மடங்குக்கும் அதிகம். ஆனால், மிகப் பெரிய நிறுவன மான எல்.ஐ.சி-யின் எதிர்கால வளர்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்பில்லை. மேலே குறிப் பிடப்பட்ட மூன்று காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்த அடித் தளத்தைக் கொண்டுள்ளன. எனவே, அவை வேகமாக வளர வாய்ப்புண்டு.

2021-22-ம் ஆண்டுக்கான எல்.ஐ.சி பிரீமியம் இந்த மூன்று நிறுவனங்களின் மொத்த பிரீமியத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. ஆனால், பிரீமியம் வருமான வளர்ச்சி மிகவும் குறைவு. உதாரணமாக, 2022-ம் நிதி ஆண்டில், எல்.ஐ.சி-யின் பிரீமியம் வருமான வளர்ச்சி 6.1%; ஆனால், எஸ்பிஐ லைஃப்-இன் பிரீமியம் 17.4% வளர்ச்சியை அடைந்தது. இது எல்.ஐ.சி வளர்ச்சி விகிதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, எல்.ஐ.சி பங்கின் P/E விகிதம் அதிகம். பங்கின் விலையும் அதிகம்.

எம்பெட்டட் மதிப்பு (EV) என்பது ஆயுள் காப்பீட்டுக்கான மற்றொரு முக்கியமான அளவீடு. இது ஓர் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஏற்கெனவே விற்றுள்ள பாலிசி களிலிருந்து எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய லாபத்தின் தற்போதைய மதிப்பு ஆகும்.

இந்த விகிதம் பொதுவாக, பழைய காப்பீட்டு நிறுவனங்களுக்கு குறைவாக இருக்கும். அதிக வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட இளம் நிறுவனங்களுக்கு இந்த விகிதம் அதிகமாக இருக்கும். எல்.ஐ.சி-யைப் பொறுத்தவரை, இவ்விகிதம் 0.77 மட்டுமே. ஆனால், எஸ்.பி.ஐ லைஃப் நிறுவனத்தின் விகிதம் 3.30 ஆகும்.

எல்.ஐ.சியின் எதிர்கால பிரீமியம் வருமானம், லாபம் மற்றும் EV தொடர்ந்து அதிக வளர்ச்சி அடையாவிட்டால், அதன் பங்கு விலை கணிசமாக உயர வாய்ப்பு இல்லை. மிகப் பெரிய நிறுவனமான எல்.ஐ.சி-க்கு அதிக வளர்ச்சி ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

எல்.ஐ.சி-யின் பங்குகளில் 3.5% மட்டுமே பட்டியலிடப் பட்டுள்ளன. அதிக பங்குகள் பங்குச் சந்தையில் புழக்கத்தில் வரும்போது விலை குறைவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, தற்போதைய விலையில், எல்.ஐ.சி பங்கில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.’’

விலை குறைந்த எல்.ஐ.சி பங்கு... இப்போது முதலீடு செய்யலாமா..?

எஸ்.ராதாகிருஷ்ணன், கோயமுத்தூர்.

நான் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலர் பணி செய்கிறேன். அண்மையில் ரூ.1 லட்சம் தனிநபர் கடன் வேண்டி பல வங்கி களிடம் விண்ணப்பித்துக்கொண்டே இருந்தேன். வங்கிகள் எனது கடன் விண்ணப்பத்தை தகுதி இல்லை என நிராகரித்துக் கொண்டே வந்தன. காரணம், பாதுகாவலர் பணிக்குக் கடன் கிடையாது என மறைமுகமாகச் சொல்கின்றனர். இது உண்மையா?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“ஒவ்வொரு வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்தின் தனிநபர் கடன் விதிமுறைகளுக்கேற்ப யாருக்குக் கடன் தர வேண்டும், யாருக்குத் தரக்கூடாது என்று தீர்மானிக்கப் படுகிறது.

பொதுவான விதிமுறையாக, நிகர மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.15,000 உங்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். இதைத் தவிர, உங்கள் வயது, வேலை பார்க்கும் நிறுவனம், பதவி, கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் தகவல் அறிக்கை ஸ்கோர், இப்போது செலுத்திக்கொண்டிருக்கும் மாதத் தவணைகள் ஆகிய வற்றைப் பொறுத்து கடன் தொகை, வட்டி விகிதம், கடனைத் திருப்பி செலுத்தும் காலம் ஆகியவை தீர்மானிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளைப் பொறுத்து, நீங்கள் பாதுகாவலர் பணியில் இருந்தாலும், உங்களுக்குக் கடன் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.”