Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி உண்டா?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

கேள்வி - பதில்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி உண்டா?

கேள்வி - பதில்

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

தேவிகா, கன்னியாகுமரி.

நான் ஒரு குடும்பத் தலைவி. வீட்டுச் செலவுக்கு என் கணவர் மாதம் ரூ.30,000 தருகிறார். இதில் 8,000 ரூபாயை மிச்சப்படுத்தி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்துக்கு நான் வருமான வரி கட்ட வேண்டுமா?

லதா ரகுநாதன், ஆடிட்டர்.

“மதிப்பீட்டு ஆண்டு 2020-21 வரை மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்தைப் பெறுபவர் களிடம் வரி விதிக்கப்படாமல்தான் இருந்தது. காரணம், விதி 110(ஒ)-வின்கீழ் இதற்கான வரியை டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனமே செலுத்த வேண்டும். ஆனால், 1.4.2020 முதல் வரி விதிமுறைகளில் வந்த மாற்றத்தால், டிவிடெண்ட் வருமானத்துக்கு அதைப் பெறுபவர் வரி கட்ட வேண்டும். ஆகையால் உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் டிவிடெண்ட் மூலம் கிடைக்கும் வருமானம் உங்கள் இதர வருமானத்துடன் (Income from other sources) இணைக்கப்படும். தவிர, அந்த டிவிடெண்ட் வருமானம் ரூ.5,000-க்கு மேல் இருக்குமானால் அதற்கு 10% டி.டி.எஸ் (TDS) பிடிக்கப்படும். இதை உங்கள் வருமான வரிப் படிவம் தாக்கல் செய்யும்போது நீங்கள் காட்டி, குறைவாக வரி கட்டியிருந்தால் மீதி வரியைக் கட்ட வேண்டும். நீங்கள் வரி வரம்புக்குள் வரவில்லை அல்லது 5% வரி வரம்புக்குள் வந்தால், கூடுதலாகக் கட்டிய வரிக்கு ரீஃபண்ட் கேட்கலாம்.

உங்கள் கணவர் உங்களுக்கு மாதம்தோறும் தரும் ரூ.30.000 உங்களின் வருமானமாகக் கருதப்படாது. ஆகவே, இந்த மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் மட்டும்தான் உங்களது மொத்த வருமானம் எனில், அது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்புக்குள் இருந்தால், வரி எதுவும் செலுத்த வேண்டிய தேவையிருக்காது. ஆகவே, அதற்கான டி.டி.எஸ் பிடிக்கப்படாமல் இருக்கத் தேவையான படிவத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் சமர்ப்பித்து பயன் பெறுங்கள்.’’

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி உண்டா?

க.அ.ஶ்ரீகாந்த், முகநூல் மூலம்.

நான் எனது ஊரில் ஒருவரிடம் 10 சென்ட் நிலத்தில் 5 சென்ட் அதாவது, 2,400 சதுர அடி வாங்கியிருந்தேன். அதன்பிறகு மற்றொருவர் மீதமுள்ள 5 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். ஆனால், அதில் ஒரு சென்ட் நிலத்தில் எனக்கு சொத்து விற்றவருக்கு அரசாங்கம் தண்ணீர் தொட்டி ஏற்கெனவே கட்டிக் கொடுத்துள்ளது. இதனால் அவர் எங்கள் நிலத்தில் பங்கு கேட்கிறார். இதை ஆளுக்கு 4.5 சென்ட் என இருவரும் பங்கு பிரித்துக்கொள்ளுங்கள்; எனக்கு தண்ணீர் தொட்டி உள்ள ஒரு சென்ட் இடத்தைத் தாருங்கள் என்கிறார். இதில், என்னுடைய பத்திரம்தான் முதல் பத்திரம். என் பெயரில் 5 சென்ட் உள்ளது. எனக்கு 5 சென்ட் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்?

ஜீவா, அட்வகேட் & நோட்டரி பப்ளிக், சென்னை.

“உங்களுக்கு ஐந்து சென்ட் கிரயம் செய்து தந்துள்ள பட்சத்தில் ஆவணங்கள் சரியான முறையில் இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம். விட்டுக் கொடுக்கும்படி கூற முடியாது. உங்கள் ஆவணங்களுடன் வழக்கறிஞர் ஒருவரைக் கலந்து நீதிமன்றத்தை அணுகலாம்.”

மாணிக்க வள்ளி, சாத்தூர்.

என் வயது 28. நான் என் ஓய்வுக்காலத்துக்கு மாதம் ரூ.3,000 வீதம் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கேற்ற ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும்.

ராமகிருஷ்ணன் வி நாயக், நிதி ஆலோசகர், https://www.dakshincapital.com/

“ஓய்வுக்கால முதலீட்டுக்குத் திட்ட மிடுகிறீர்கள். அது நீண்ட காலமாக இருக்கும்பட்சத்தில், லார்ஜ்கேப் ஃபண்டுகள் மற்றும் மிட்கேப் ஃபண்டு களில் முதலீடு செய்து வரலாம். முதலீட்டுத் தொகையை சமமாகப் பிரித்து அதாவது, தலா ரூ.1,500 வீதம் லார்ஜ்கேப் ஃபண்ட் மற்றும் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட், மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.”

லதா ரகுநாதன், ஜீவா, ராமகிருஷ்ணன் வி நாயக், ஆர்.வெங்கடேஷ், த.ராஜன்
லதா ரகுநாதன், ஜீவா, ராமகிருஷ்ணன் வி நாயக், ஆர்.வெங்கடேஷ், த.ராஜன்

க.சிதம்பரம், கடலூர்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீட்டை ஆரம்பிக்க பங்குச் சந்தையின் போக்கைப் பார்க்க வேண்டுமா?

ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

“எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பிக்க பங்குச் சந்தையின் போக்கையோ, நேரத்தையோ பார்க்கத் தேவையில்லை. ஈக்விட்டி ஃபண்ட் போன்ற வற்றில் எஸ்.ஐ.பி முதலீட்டை நீண்ட காலத்துக்கு இடையே நிறுத்தாமல் தொடர வேண்டும் என்பதுதான் முக்கியம்.

முதலீட்டுக்கு நேரம், காலம் பார்க்காமல், எஸ்.ஐ.பி, எஸ்.டி.பி (சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான்) போன்ற முறைகளைப் பயன்படுத்தி முதலீட்டை மேற்கொள்வது எப்போதும் லாபகரமாக இருக்கும்.

மற்றொரு விஷயத்தையும் முதலீட்டாளர்கள் அவசியம் கவனிக்க வேண்டும். முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம், நிதி இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் எஸ்.ஐ.பி முதலீட்டை பல்வேறு ஃபண்ட் வகைகளில் (கடன் ஃபண்டுகள், ஹைபிரிட் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) மேற்கொண்டு வருவதுதான் லாபகரமாக இருக்கும்.”

வி.மாறன், திருப்பூர்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வெளியேறும் கட்டணம் பற்றித் தெரிவிக்கவும். குறிப்பாக, லிக்விட் ஃபண்டின் வெளியேறும் கட்டணம் பற்றிச் சொல்லவும்.

த.ராஜன், இணை நிறுவனர், Holisticinvestment.in

“மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் பொறுத்தவரை, முதலீடு செய்து குறுகிய காலத்துக்குள் யூனிட்டுகளை விற்று வெளியேறினால், வெளியேறும் கட்டணம் (Exit Load) செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக, கடன் ஃபண்டுகளில் ஆறு மாதத்துக்குள் யூனிட்டுகளை விற்றால் சுமார் 0.5%, ஈக்விட்டி ஃபண்டுகளில் ஓராண்டுக்குள் யூனிட்டுகளை விற்றால், கிட்டத்தட்ட 1% வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது திட்டம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.

லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்து 6 நாள்களுக்குள் யூனிட்டுகளை விற்று பணமாக்கினால் வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டும். இது மிகக் குறைவாக இருக்கிறது. முதலீடு செய்து மறுநாள் எடுத்தால் 0.0070 சதவிகிதமாக அதாவது, ரூ.1 லட்சத்துக்கு 7 ரூபாயாக வெளி யேறும் கட்டணம் இருக்கிறது.

நாள்கள் அதிகரிக்க அதிகரிக்க வெளியேறும் கட்டணம் குறையும். ஆறாவது நாள் பணத்தை எடுத்தால் 0.0045% அதாவது, ரூ.1 லட்சத்துக்கு ரூ.4.5 வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism