Published:Updated:

தங்கப் பத்திரத்தில் எப்படி முதலீடு செய்தால் லாபம்..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

தங்கப் பத்திரத்தில் எப்படி முதலீடு செய்தால் லாபம்..?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கார்த்திகேயன், சாத்தூர்.

தங்கப் பத்திரத்தை ஆர்.பி.ஐ மூலம் வாங்குவது, பங்குச் சந்தை மூலம் வாங்குவது - இதில் எது லாபகரமாக இருக்கும் என்பதை விளக்கிச் சொல்லவும்.

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்.

‘‘தங்கப் பத்திரத்தில் முதலீடு மேற்கொள்ளும் போது, ஆர்.பி.ஐ வெளியிடும் தங்கப் பத்திரங் களை வாங்குவது லாபகரமாக இருக்கும். ஏனெனில், எட்டு வருடம் கழித்துக் கிடைக்கக் கூடிய முதிர்வு ஆதாயத் தொகைக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை இருப்பதால், அதன் பலன் முழுமையாக முதலீட்டாளருக்கு கிடைக்கிறது. இது தவிர, ஒவ்வோர் ஆண்டும் 2.5 % வட்டி தருவதும், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது யுனிட் ஒன்றுக்கு ரூ. 50 தள்ளுபடியும் ஆர்பி.ஐ அளிக்கிறது.

பங்குச் சந்தை மூலம் தங்கத்தில் முதலீடு செய்யும்போது, இரண்டாம் நிலை வர்த்தகமாகக் கருதப்படுவதால் மேற்சொன்ன வரிச்சலுகை கிடைக்காது. பங்குச் சந்தை வழியாக வாங்கி, விற்கும்போது மூன்று ஆண்டுக்குள் எனில், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக ஒருவரின் வரி வரம்புக்கு ஏற்பவும் (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%), மூன்று ஆண்டுகளுக்கு மேல் எனில், நீண்ட கால ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்ட வேண்டும்.”

தங்கப் பத்திரத்தில் எப்படி முதலீடு செய்தால் லாபம்..?

சதீஷ்குமார் சம்பத், முகநூல் மூலம்.

எனது சொத்தை விற்றது மூலம் மூலதன ஆதாயம் கிடைத்தது. வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியதால் வீடு வாங்க அந்தப் பணத்தை நான் பயன்படுத்தவில்லை. இப்போதைக்கு இந்தப் பணம் தேவையில்லை. இந்தப் பணத்தை நான் எதில் முதலீடு செய்தால் எனக்கு அதிக லாபம் கிடைக்கும்?

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com

“உங்களின் பணத் தேவை ஐந்தாண்டுகளுக்கு மேல் எனில், தாராளமாக லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். உங்களின் பணத்தேவை 8 முதல் 10 ஆண்டுகள் எனில், முதலீட்டுத் தொகையின் ஒரு பகுதியை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யலாம்.

தற்போது உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சந்தை மிகவும் இறங்கிக் காணப்படுவதால், மொத்தத் தொகையை லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (STP) மூலம் மேற்கண்ட ஃபண்ட் பிரிவுகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.”

தங்கப் பத்திரத்தில் எப்படி முதலீடு செய்தால் லாபம்..?

இளையராஜா,இ-மெயில் மூலம்.

நான் வீட்டு அடமானம் கடன் வாங்கி உள்ளேன். இன்னும் ரூ.3.5 லட்சம் பாக்கி உள்ளது. மாத இ.எம்.ஐ-ஆக ரூ.5,000 கட்டுகிறேன். கடனை இன்னும் எட்டு ஆண்டுகள் கட்ட வேண்டும். எனக்கு குடும்பச் செலவுகள் போக மாதம் ரூ.50,000 மிச்சமாகிறது. இந்தத் தொகையைக் கொண்டு கடனை விரைவாக அடைக்க லாமா அல்லது முதலீடு செய்யலாமா, எது லாபகரமாக இருக்கும்?

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், https://www.moneyavenues.in/

“ஒருவருக்கு வாழ்க்கையில் சேமிப்பும் முதலீடும் எந்த அளவு முக்கியமோ, கடன் இல்லாமல் இருப்பதும் அந்த அளவுக்கு முக்கியம். அந்த அடிப்படையில் உங்களின் மாதாந்தர சேமிப்பை இரண்டு வகையில் செயல்படுத் தலாம். சேமிப்பின் ஒரு பகுதியை கடன் அடைக்க பயன்படுத்தலாம். அப்படி கடன் மெள்ள மெள்ள அடைக்கப்படும்போது கடனில்லா வாழ்வால் ஒரு சந்தோஷம் ஏற்படும். இன்னொரு பகுதியை மாதம்தோறும் எஸ்.ஐ.பி மூலம் நீண்ட காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

உங்களின் தனிப்பட்ட நிதி நிலையைக் கருத்தில் கொண்டு இந்த இரு விஷயங்களை செயல் படுத்தலாம். இருந்தாலும், இரண்டையும் அதாவது, கடன் அடைத்தல் மற்றும் முதலீடு என்பதை சம அளவில் பிரித்து மாதம் 25,000 என்ற அளவில் செயல்படுத்தலாம் என்பது எனது கருத்து. கடனை ஆண்டுக்கு ஒரு முறை அடைக்க விரும்பினால், அந்தத் தொகையைக் குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் (short term funds) வாயிலாக முதலீடு செய்து ஆண்டுக்கு ஒரு முறை எடுத்து கடனை திருப்பி செலுத்தலாம்.”

வெங்கட் பாலாஜி, கோவை.

நான் என் மூன்று பேத்திக்கு மாதம் 10,000 வீதம் டாடா ஸ்டீல் பங்குகளை வாங்கிக் கொடுக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். இது சரியான முடிவாக இருக்குமா, இல்லை பிரித்து வேறு பங்குகளில் முதலீடு செய்யலாமா?

எல்.அர்ஜூன்,செபி பதிவு முதலீட்டு ஆலோசகர், https://flyingcalls.com

“பேத்திகளுக்கு மாதம் பத்தாயிரம் வீதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் உங்கள் நல்ல எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்.

ஒரே பங்கில் மாதம் 10,000 வீதம் முதலீடு செய்வது என்பது தவறான முடிவாகும். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். உலகின் தலைசிறந்த பங்குச் சந்தை முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் பொன்மொழி ‘எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே’ என்பதாகும். இதன் அர்த்தம் ஒரே பங்கில்நம் முழு முதலீட்டையும் முதலீடு செய்யக் கூடாது என்பதாகும்.

நீங்கள் மாதம்தோறும் செய்ய நினைக்கும் ரூ.10,000 முதலீட்டை நான்காகப் பிரித்து நான்கு துறைகளில் நல்ல செயல்பாடுகளைக் கொடுத்துவரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம். உதாரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் இன்ஃபோசிஸ் (Infosys) அல்லது விப்ரோ (Wipro) பங்குகளிலும், உலோகத் துறையில் சிறந்து விளங்கும் டாடா ஸ்டீல் (Tata Steel) அல்லது ஜிந்தால் ஸ்டீல் (Jindal Steel) நிறுவனப் பங்குகளிலும், வங்கித் துறையில் சிறந்து விளங்கும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (IciciBank) அல்லது ஸ்டேட் பேங்க் (SBI) பங்குகளிலும் மேலும் பல துறைகளை உள்ளடக்கிய ரிலையன்ஸ் (Reliance) பங்கு களிலும் முதலீடு செய்யலாம்.

இவ்வாறு முதலீடு செய்வது ஒரு துறையில் நஷ்டம் ஏற்பட்டாலும் மற்ற துறைகள் நல்ல லாபத்தை கொடுக்கும். ஆகையால் பிரித்து முதலீடு செய்வது என்பது சாலச் சிறந்தது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism