Published:Updated:

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் இரண்டு வீடுகளுக்கு மானியம் கிடைக்குமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் இரண்டு வீடுகளுக்கு மானியம் கிடைக்குமா?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கன்னிகா, மேட்டுப்பாளையம்.

நானும் என் கணவரும் பணிபுரிபவர்கள். இருவரும் அவரவர் பெயரில் தனித் தனியே வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் ஒரு வீட்டை வாடகைக்கு விட உள்ளோம். இந்த வீட்டை வீட்டுக் கடன் மூலம் வாங்கும் நிலையில் எங்கள் இருவருக்கும் பிரதமரின் அனைவருக்கும் வீடு என்கிற திட்டத்தின் கீழ் தனித் தனியே ரூ.2.67 லட்சம் வட்டி மானியம் கிடைக்குமா?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக வீடு வாங்குபவர் களுக்கும், வீடு கட்டுபவர்களுக்கும் மானிய உதவி மத்திய அரசு வழங்குகிறது. இதில் முக்கியமான விதிமுறையாக மானியத்தைப் பெறுபவருக்கோ, மானியத்தைப் பெறுபவரின் குடும்ப உறுப்பினர்களுக்கோ இந்தியாவில் வேறு எங்கும் வீடு இருக்கக் கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. ஆதலால் தாங்கள் இரண்டு வீடுகளுக்கு மானிய உதவி பெறுவது என்பது சாத்தியமில்லை.”

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் இரண்டு வீடுகளுக்கு மானியம் கிடைக்குமா?

ஜி.பார்த்திபன் இ-மெயில் மூலம்.

என்னிடம் சில லட்ச ரூபாய் இருக்கிறது. இதைக் கொண்டு வீட்டுக் கடன் பகுதியை அடைப்பதா, தங்கத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதா..? வேறு ஏதாவது லாபகரமான முதலீடு இருக்கிறதா? என் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகள் என தீர்மானித்திருக்கிறேன்.

சி.குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், நாமக்கல்.

“தற்போதைய நிலவரப்படி வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைவான அளவில் சுமாராக 7% ஆக உள்ளது. ஆகவே, மற்ற முதலீடுகளை மேற்கொள்வது லாபகரமாக இருக்கும். வீட்டுக் கடன் அடைப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள்.

உங்கள் முதலீட்டுக் காலம் எட்டு ஆண்டுகள் என்பதால், கையில் இருக்கும் தொகையில் 25 சதவிகிதத்தை மத்திய அரசின் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யுங்கள். தங்கத்தின் விலை அதிகரிப்புடன் ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் வட்டியும் கிடைக்கும். மேலும் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பத்திரத்தின் முதிர்வின்போது வரி எதுவும் இல்லை என்பதால் அது கூடுதல் அனுகூலம்.

மீதமுள்ள தொகையை நன்கு செயல்படும் இரண்டு அல்லது மூன்று ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் சமமாகப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு சராசரி யாக 12 சதவிகித வருமான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஓப்பன் எண்டட் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால் எப்போது வேண்டுமானாலும் பகுதியாகவோ, முழுமையாகவோ பணத்தைத் திரும்பபெறும் வசதி உண்டு.”

ஏழுமலை, விழுப்புரம்.

என்னுடைய வயது 41. என் ஓய்வுக் காலத்துக்கு இன்னும் முதலீட்டை ஆரம்பிக்க வில்லை. மாதம் ரூ.10,000 முதலீடு செய்ய முடியும். நான் எந்த மாதிரியான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?

ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

“உங்களின் பணி ஓய்வுக்காலத்துக்கு இன்னும் 17 - 19 ஆண்டுகள் இருப்பதால் நீங்கள் தாராளமாக பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்து வரலாம்.

முதலீட்டுத் தொகையை நான்கு அல்லது மூன்றாகப் பிரித்து வைத்து நல்ல லார்ஜ்கேப், மல்ட்டிகேப் மற்றும் ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என முதலீடு செய்து வரவும்.

முதலீட்டுக்கு கனரா ராபிகோ புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட், குவான்ட் ஆக்டிவ் ஃபண்ட் அல்லது சுந்தரம் மல்ட்டிகேப் ஃபண்ட், பிஜிம் இந்தியா ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளைக் கவனிக்கலாம். இந்த ஃபண்டுகளின் செயல்பாட்டை ஆண்டுக்கு ஒரு முறை கவனித்து வர வேண்டியது அவசியமாகும்."

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் இரண்டு வீடுகளுக்கு மானியம் கிடைக்குமா?

கவின் மலர், கிண்டி, சென்னை.

என் வயது 36. என்னுடன் மனைவி (வயது 32), ஒரு மகன் (7 வயது), என் அப்பா (வயது 62), அம்மா (55) ஆகியோர் உள்ளனர். எல்லோருக்கும் சேர்த்து ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி ரூ.6 லட்சத்துக்கு எடுக்கலாமா, இல்லை வேறு தனித் தனி பாலிசி எடுக்கலாமா?

நிவாஸ் நரசிம்மன், காப்பீட்டு ஆலோசகர்.

“ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியைப் பொறுத்த வரையில் நீங்கள் உங்களுக்கும், மனைவி, குழந்தைகளுக்கும் தனியாக எடுத்துக்கொள்ளலாம். அதே போன்று உங்கள் அப்பா அம்மாவுக்கும் தனியாக ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.

ஐந்து பேருக்கும் சேர்த்து ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி அனைத்து நிறுவனங்களிலும் இல்லை. சில நிறுவனங்களில் மட்டுமே உள்ளது. அப்படி எடுக்கும்போது என்ன பிரச்னை வரும் என்றால் அதிக வயது யாருக்கோ அவருடைய வயதைப்பொறுத்து ஐந்து பேருக்கும் சேர்த்து பிரீமியம் அதிகமாக வரும். அதனால் உங்களுக்கும் மனைவி குழந்தைகளுக்கும் தனியாகவும், உங்கள் அப்பா மற்றும் அம்மாவுக்கு தனியாக ஒரு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியும் எடுத்துக்கொள்வது நல்லது.

உங்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்துக்கொள்ளலாம். தாய், தந்தை இருவருக்கும் வயது அதிகமாக இருப்பதால் குறைந்தது ரூ. 10 லட்ச ரூபாய் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. உங்கள் குடும்பத்துக்கு ஸ்டார் ஹெல்த் யங்ஸ்டார் திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். உங்கள் பெற்றோருக்கு ஸ்டார் ஹெல்த் ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். பெற்றோர் களுக்கு ஏதாவது நோய்கள் ஏற்கெனவே இருந்தால் குறைந்தபட்ச காத்திருப்புக் காலம் இருக்கும் திட்டத்தைத் தேர்வு செய்து எடுத்துக்கொள்ளவும்.”

காஜா முகைதீன், கடையநல்லூர்.

என்னுடைய வயது 50. நான் மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய விரும்புகிறேன். இந்தப் பணம் எனக்கு என் பணி ஓய்வுக்குப் பிறகு, அதாவது 60 வயதில் தேவை. நான் எந்த மியூச்சுவல் திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் எனச் சொல்ல முடியுமா?

வி.ஶ்ரீனிவாசன், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், சீனு இன்வெஸ்ட்மென்ட்ஸ், திருவாரூர்.

“தங்களுடைய வயது 50 மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய விரும்பு கிறீர்கள். ஆகையால் ரூ.5,000 ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட், ரூ.5,000 லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட், ரூ.5,000 மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் தங்களுடைய 60-வது வயதில் பணி ஓய்வுக்குப் பிறகு நல்ல வளர்ச்சி அடைந்திருக்கும்.”