Published:Updated:

பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அவசியமா?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

கேள்வி பதில்

பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அவசியமா?

கேள்வி பதில்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

மலர்விழி, கல்லிடைக்குறிச்சி.

பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட தனியாக ஏதாவது படிக்க வேண்டியது அவசியமா? குறைந்த செலவில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் ஏதாவது இருக்கிறதா?

வி.ஹரிகரன், பங்குச் சந்தை தொழில்முறை பயிற்சியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்.

“பங்குச் சந்தையில் தொடர்ந்து லாபம் ஈட்ட முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் போக்கு மற்றும் சந்தையின் கள நிலவரங்கள், அதைத் தொடர்ந்து நிறுவனங்களின் லாப நஷ்டக் கணக்குகளை அறிந்து முதலீடு செய் தால், முதலீட்டாளர்கள் யாரும் நஷ்டம் அடைய மாட்டார்கள்.

இதைப் பற்றிய நுணுக்கங்களை அறிய நம் நாட்டில் பல குறுகிய காலப் படிப்புகள் உள்ளன. உதாரணமாக, நேஷனல் இன்ஸ்டி டியூட் ஆஃப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட் சான்றிதழ் படிப்பு உதவியாக இருக்கும்.

சர்ட்டிஃபைடு ஃபைனான்ஷியல் அனலிஸ்ட், சர்ட்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர் போன்ற நீண்டகாலப் படிப்புகள் சர்வதேசச் சந்தைகளில் முதலீடு செய்யவும் நிதித் திட்டமிடலை ஒருங்கிணைத்து முதலீடு செய்யவும் உதவியாக இருக்கும்.’’

பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட 
அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அவசியமா?

வருண், முகநூல் மூலம்.

நான் நிதி ஆண்டில் ஒரு வங்கியில் ரூ.6 லட்சம் மற்றும் இன்னொரு வங்கியில் ரூ.5 லட்சம் முதலீடு செய்திருக்கிறேன். இது அதிக மதிப்பு பரிமாற்றக் கணக்கில் வருமா?

ஆர்.ஜெகதீஷ், ஆடிட்டர், தேனி

“நீங்கள் பல்வேறு வங்கிச் சேமிப்புக் கணக்கு களில் நிதி ஆண்டில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) ரூ.10 லட்சத்துக்குமேல் பணம் டெபாசிட் செய்யும்போது, அது அதிக மதிப்பு பரிவர்த்தனைகளாக (High Value Transactions) எடுத்துக் கொள்ளப்படும்.

நீங்கள் ரூ.6 லட்சம் மற்றும் ரூ.5 லட்சமாக மொத்த ரூ.11 லட்சம் வங்கி சேமிப்புக் கணக்கு களில் பணம் போட்டிருப்பதால், அது அதிக மதிப்பு பரிவர்த்தனையாக வருமானவரித் துறையில் பதிவாகும்.”

லோகேஸ்வரி, கொருக்குப்பேட்டை, சென்னை.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமான எதிர்பார்ப்பாகப் பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் ஆண்டுக்கு 12 சதவிகிதத்தைக் குறிப்பிடுகிறார்கள். இப்படி 12% எனக் குறிப்பிட ஏதாவது பிரத்யேக காரணம் இருக்கிறதா?

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

“முதலீட்டு ஆலோசகர்கள் நீண்ட காலத்தில் பங்குச் சந்தை மூலம் 12% வருமானம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) மற்றும் பணவீக்க விகிதம் இரண்டையும் கூட்டினால், பல சமயங்களில் 12% வரும். இதன் அடிப்படையில் தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் 12% வருமானம் கிடைக்கும் என்கிறார்கள்.

1980–ம் ஆண்டில் இருந்து பார்த்தால், ஜி.டி.பி மற்றும் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டின் கூட்டுத்தொகை 12%-க்கு மேல் இருக்கும். அத்துடன் முதலீடு செய்யும் நிறுவனத்தைச் சார்ந்து கூடுதலாக 2 - 3% வருமானம் அதாவது, 14 - 15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.”

கல்யாண் குமார், திருச்சி.

பல நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவதற்கு பதில் அவர்களிடமிருந்து பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றன. இதனால் முதலீட்டாளர் மற்றும் நிறுவனத்துக்கு என்ன லாபம் என்பதை விளக்கிச் சொல்லவும்.

பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட 
அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அவசியமா?

எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com

“பைபேக் செய்யும் நிறுவனம், பைபேக் பங்குகளை வாங்க செலவு செய்யும் மொத்தத் தொகை மீது 23.29% பைபேக் வரி செலுத்த வேண்டும். ஆனால், முதலீட்டாளருக்குக் கிடைக்கும் பைபேக் தொகைக்கு முழு வரி விலக்கு உண்டு. முதலீட்டாளர்கள் தாம் பெறும் டிவிடெண்ட் வருமானத்துக்கு அவர்களின் அடிப்படை வருமான வரி வரம்புக்கேற்ப வரி கட்ட வேண்டும். உச்சபட்ச வரி வரம்பில் இருக்கும் முதலீட் டாளர், அவர் பெறும் டிவிடெண்ட் வருமானத்துக்கு 42.74% வரி கட்ட வேண்டும். 30% வரி மற்றும் அதற்கும் மேலான வரி வரம்பில் உள்ள அனைத்து முதலீட்டாளர் களுக்கும் டிவிடெண்ட் முறையைவிட பங்கு பைபேக் அதிக லாபகரமாக இருக்கும். 30 சதவிகித்தைவிடக் குறைந்த வரி வரம்பில் வருபவர்களுக்கு டிவிடெண்ட் முறை லாபகரமாக இருக்கும்.

கம்பெனியின் நிறுவனர் இன்னொரு கம்பெனியாக இருந்தாலும் பைபேக் முறை சிறந்தது. ஒரு கம்பெனி அது பெறும் டிவிடெண்ட் வருமானத்தை அதன் பங்குதாரர் களுக்கு டிவிடெண்டாகத் தராவிட்டால், அந்த வருமானத் துக்கு வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் பைபேக் வரி விகிதத்தைவிட அதிகம்.

எனவே, பைபேக் முறை அத்தகைய நிறுவனத்துக்கும் அதிக வருமானத்தைத் தரும். மேலும், பைபேக் தொகையை அதன் பங்குதாரர்களுக்குப் பிரித்துத் தர வேண்டிய அவசியமும் இல்லை. இதனால்தான் டி.சி.எஸ் உட்பட பல நிறுவனங்கள் ஸ்பெஷல் டிவிடெண்டுக்குப் பதில், பைபேக் செய்வதற்கான மூலக் காரணம் ஆகும்.”

லட்சுமி, மெயில் மூலம்.

சென்னையின் புறநகரில் அடுக்குமாடி வீட்டில் வசித்துவரும் நான் என்னுடைய வீட்டின் கட்டட வரைபட அனுமதி (Building plan approval) அசலைத் தொலைத்துவிட்டேன். நகலும் என்னிடம் இல்லை. பிற்காலத்தில் வீட்டை விற்பனை செய்ய வேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது என்று குழப்பமாக உள்ளது. மீண்டும் அதைப் பெற என்ன செய்ய வேண்டும்?

கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை.

“அடுக்குமாடி வீடு என்பதால், அக்கம்பக்கத்து வீட்டின் உரிமை யாளர்களிடம் கட்டட வரைபட அனுமதியின் பிரதி வைத்திருக் கிறார்களா என்று கேட்டுப் பாருங்கள். அந்தக் கட்டட வரை பட அனுமதி மற்றும் தேதியைக் குறிப்பிட்டு அனுமதி வழங்கிய அலுவலகத்தில் விண்ணப்பித்து நகலைப் பெற்றுக்கொள்ளலாம்.

அப்படி எதுவும் கிடைக்காத பட்சத்தில் உங்கள் அடுக்குமாடி வீடு அமைந்துள்ள இடத்தின் முகவரி, புல எண், உட்பிரிவு போன்ற சொத்து விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு அனுமதி வழங்கிய அலுவலகத் தின் அதிகாரிக்கு விண்ணப் பித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய கட்டணம் செலுத்தி உங்கள் வீட்டுக்கு வழங்கப்பட்ட கட்டட வரைபட அனுமதி நகலைப் பெற முடியும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism