Published:Updated:

பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான் எடுப்பது சரியா..?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

கேள்வி பதில்

பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான் எடுப்பது சரியா..?

கேள்வி பதில்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

சுதாகர், கடலூர்.

என் வயது 35. பியூர் டேர்ம் பிளான், பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான்களில் ஆண்டுக்கு தோராயமாக எவ்வளவு பிரீமியம் கட்ட வேண்டும்? நான் இல்லாதபோது என் குடும்பத்துக்கு உதவ எந்த பாலிசி பயனுள்ளதாக இருக்கும்?

ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in

“டேர்ம் இன்ஷூரன்ஸுக்குக் கட்டும் பிரீமியத்தைச் செலவாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எனவே, பிரீமியம் திரும்பத் தரும் பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளானைவிட சாதாரண டேர்ம் இன்ஷூரன்ஸே மிகச் சிறந்த தாகும். உங்கள் வயது 35 என்று சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் வயதுக்கு ரூ.50 லட்சம் கவரேஜ் அவசியம். இதற்கு 60 வயது வரை பிரீமியம் கட்டும்பட்சத்தில் ஆண்டு ஒன்றுக்கு சாதாரண டேர்ம் பிளானுக்கான பிரீமியம் தோராயமாக ரூ.10,000-ஆக இருக்கும். இதுவே, பிரீமியம் ரிட்டர்ன் பிளானுக்கான பிரீமியம் ரூ.23,000-ஆக இருக்கும்.”

பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான்
எடுப்பது சரியா..?

பொன்ராஜ், காரைக்குடி

நான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். இந்தத் திட்டங்களில் இடையில் மொத்தமாக முதலீடு செய்ய முடியுமா? விளக்கம் அளிக்கவும்.

ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

“எஸ்.ஐ.பி முறையில் ஒரு ஃபண்டில் முதலீடு செய்து வரும்பட்சத்தில், இடையில் எப்போது வேண்டுமானாலும் கூடுதலாக மொத்த முதலீட்டைச் செய்ய முடியும். இதை ‘அடிஷனல் பர்ச்சேஸ்’ என்பார்கள். வழக்க மான எஸ்.ஐ.பி தொகை போக கூடுதலாக தனியே காசோலை கொடுத்து, ஃபண்டின் பெயர் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு எண்ணை (ஃபோலியோ) குறிப்பிட்டு முதலீடு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலமும் கூடுதல் மொத்த முதலீட்டை இடையில் எப்போது வேண்டுமானலும் செய்ய முடியும்.”

கீர்த்திவாசன், காரைக்குடி.

ஐ.டி நிறுவனம் ஒன்றில் நான் வேலை செய்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 5-ம் தேதி இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கில் நான் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இந்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை விளக்கிச் சொல்ல முடியுமா?

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

“நீங்கள் நிறுவனப் பங்குகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் திட்டமிடும்போது, நிலையான முதலீட்டுத் தொகை, நிலையான தேதி, நிலையான பங்கு ஆகிய மூன்றும் கவனிக்க வேண்டிய விஷயங் களாகும். இப்படிச் செய்யும்போது ஒரு முக்கியமான சவாலை நீங்கள் சந்தித்தாக வேண்டும்.

பொதுவாக, பங்கு முதலீட்டில் விலை நகர்வைப் பற்றி நாம் அதிக மாக சிந்திப்போம். மிகக் குறைந்த விலையில் பங்குகளை வாங்க முயற்சி செய்வோம். ஆனால், எஸ்.ஐ.பி முறையில் அப்படி காத்திருக்க முடியாது. விலை அதிகம் என்றாலும் அன்றைய தேதியில் பங்கை வாங்கித் தான் ஆக வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அம்சங் களிலும் நீங்கள் உறுதியாக இருந்தால், எஸ்.ஐ.பி முறையில் பங்குகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது உங்களுக்குச் சாதகமாக இருக்கும். ஆனால், நீங்கள் முதலீட்டுக்குத் தேர்வு செய்துள்ள பங்கு நிறுவனம் தொடர்ந்து சிறப்பான மற்றும் நிலையான செயல்திறனைக் கொண்டதாக இருக்க வேண்டும்.”

உமா, கொரட்டூர், சென்னை.

ஐந்து வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பில்டர், கட்டட அனுமதி பெற்றதில் சிறிது மாற்றம் செய்து, பக்கவாட்டு இடம் விடாமல் விதிமுறை (Setback deviation) மீறியுள்ளார். பால்கனி பகுதியை வெளியே வைத்துள்ளார். அதற்கு அனுமதி இல்லை. இதற்கு கட்டட அனுமதி வாங்கலாமா, விற்கும்போது பிரச்னை வருமா, இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

டி.ஜீவா, வழக்கறிஞர் மற்றும் நோட்டரி, சென்னை.

“மறுஅனுமதி (Re-approval) கிடைக்காது. பக்க வாட்டில் இடம்விடாதது மற்றும் பால்கனியை வெளியே கட்டியிருப்பது சரிசெய்ய முடியாது. சொத்து வரி கட்டிவருகிறீர்கள் எனில், பிரச்னை இல்லை. மேலும், கட்டடம் கட்டி சுமார் ஏழு ஆண்டுகளான நிலையில், தற்போது பிரச்னை இல்லை என்றாலும் வீட்டை வேறு ஒருவருக்கு விற்கும்போது பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.”

பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான்
எடுப்பது சரியா..?

அருந்ததி கணேஷ், ஊத்துக்கோட்டை.

நான் 12 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஆன்லைன் வழியாக டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்தேன். இந்த ஃபண்டுகளின் மூலமான வருமானம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மேலும், அலுவலகப் பணி காரணமாக ஃபண்டுகளை நிர்வகிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில், இந்த ஃபண்டுகளை ரெகுலர் பிளானுக்கு எப்படி மாற்றுவது என விளக்கிச் சொல்லவும்.

எஸ்.பி.சண்முகம், சர்ட்டிஃபைடு ஃபைனான்ஸ் பிளானர், Shan Wealth Pvt Ltd.

“முதலில் நீங்கள் எந்த மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் மூலம் முதலீடு செய்யப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, அவரின் ஏ.ஆர்.என் எண்ணைக் குறிப்பிட்டு, நேரடி பிளானிலிருந்து ரெகுலர் பிளானுக்கு மாற்றுவதற்கான படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மூலமும் டைரக்ட் பிளானிலிருந்து ரெகுலர் பிளானுக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதே நேரத்தில், நீங்கள் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகள் உங்களின் நிதி இலக்கு, ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம் ஆகியவற்றுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

அப்படி இல்லாதபட்சத்தில் அந்த ஃபண்டுகளிலிருந்து வெளியேறி விநியோகஸ்தர் குறிப்பிடும் திட்டங்களில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். அப்படி செய்யும் போது நீங்கள் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் காலம் மற்றும் ஃபண்ட் பிரிவைப் (ஈக்விட்டி ஃபண்ட், கடன் ஃபண்ட்) பொறுத்து, குறுகிய காலம் அல்லது நீண்ட கால மூலதன ஆதாய வரியைக் கட்ட வேண்டிவரும்.”

சுரேஷ் குமார், இ-மெயில் மூலம்.

என் மைனர் பிள்ளை பெயரில் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டிருக்கிறேன். இதை அடமானம் வைத்து கடன் வாங்க முடியுமா?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“முடியும். பெரும்பாலான வங்கிகளில் கொடுத்துவிடுவார் கள். சில சமயங்களில் மைனர் பிள்ளை பெயரில் வங்கியில் போடப்பட்டிருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட், குழந்தைகளின் எதிர் காலத்துக்கான சிறப்புத் திட்டங் களின்கீழ் போடப்பட்டிருந் தால், அப்போது அந்த ஃபிக்ஸட் டெபாசிட்டைப் பெற்றோர்/ காப்பாளரின் அக்கவுன்டுக்கு மாற்றம் செய்து அதன் பிறகு கடன் தருவார்கள்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism