Published:Updated:

வயது 32... மாதச் செலவு ரூ.75,000... ஓய்வுக்கால தொகுப்பு நிதி எவ்வளவு தேவை..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

வயது 32... மாதச் செலவு ரூ.75,000... ஓய்வுக்கால தொகுப்பு நிதி எவ்வளவு தேவை..?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

ராஜேஷ், பெருங்குடி, சென்னை.

என் வயது 32. நான் ஐ.டி துறையில் பணி புரிகிறேன். ஆண்டுக்கு ரூ.15 லட்சம் சம்பாதிக்கிறேன். தற்போதைய மாதச் செலவு ரூ.75,000. நான் 60 வயதில் பணி ஓய்வு பெற்றால், எனக்கு எவ்வளவு தொகுப்பு நிதி தேவை? எந்த மாதிரியான விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“உங்களுடைய தற்போதைய மாதச் செலவு ரூ.75,000 என்றாலும், இன்றைய மதிப்பில் ஓய்வுக்குப் பிறகான மாதச்செலவு அதைவிட குறைவாகவே இருக்கும் (மருத்துவச் செலவுகள் போக). அதை ரூ.50,000 என்று வைத்துக்கொண்டால், 28 வருடங்களில் அத்தகைய மாதாந்தர வருமானம் கிடைக்க நீங்கள் சுமார் ரூ.6 கோடி ரூபாய் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

மாதம் ரூ.13,000-லிருந்து ரூ.15,000 வரை சேமித்து அவற்றை நல்ல பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் 28 வருடங்களுக்கு முதலீடு செய்தால் இலக்கை அடைய முடியும். தொடர்ந்து முதலீடு செய்வது, வளரும் தொகையை மற்ற செலவுகளுக்கு எடுக்காமல் இருப்பது என இரண்டு விஷயங்களையும் நீங்கள் கட்டாயம் செய்தாக வேண்டும்.”

வயது 32... மாதச் செலவு ரூ.75,000...
ஓய்வுக்கால தொகுப்பு நிதி எவ்வளவு தேவை..?

ஸ்ருதி ராமநாதன் இ-மெயில் மூலம்

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரும்போது, எவ்வளவு ஆண்டுகள் கழித்தால், நெகட்டிவ் வருமானத்தைத் தவிர்க்க முடியும். 10, 15 ஆண்டுக் காலத்தில் ஒரு டைவர்சிஃபைடு ஃபண்டில் எத்தனை சதவிகிதம் லாபம் எதிர்பார்க்கலாம்?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்.

“முதலீட்டுக் காலம் 7 ஆண்டுகள் அல்லது அதற்குமேல் இருந்து, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்துவந்தால், நெகட்டிவ் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

நீங்கள் 10 முதல் 15 ஆண்டு களுக்குத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், ஆண்டுக்கு சராசரியாக சுமார் 12% வருமானம் எதிர்பார்க்கலாம்.”

சுந்தரமூர்த்தி, காரியாப்பட்டி.

நான் வேலைக்குச் சேர்ந்ததும் என் 25 வயதில் சிறிய தொகைக்கு ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்தேன். இப்போது கூடுதல் தொகைக்குப் புதிதாக ஓர் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கப்போகிறேன். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன?

பாபு ஜீ, நிதித் திட்ட நிபுணர், பண்ருட்டி

“பாலிசி எடுக்கும்போது ஏற்கெனவே ஆயுள் காப்பீடு பாலிசிகள் எடுத்திருக்கும் பட்சத்தில் அதன் விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம். மேலும், செய்யும் தொழிலின் தன்மை மற்றும் உடல்நலம் தொடர்பான விவரங்கள் வெளிப்படையாக வும் சரியாகவும் தெரிவிக்கப்பட வேண்டும். பாலிசி எடுத்த பிறகு, கட்ட வேண்டிய பிரீமியம் எதுவும் நிலுவை இல்லாமலிருக்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது.’’

ஶ்ரீகாந்த் மீனாட்சி, த.முத்துகிருஷ்ணன், பாபு ஜீ, ஆர்.ஜெகதீஷ், 
எல்.அர்ஜுன்
ஶ்ரீகாந்த் மீனாட்சி, த.முத்துகிருஷ்ணன், பாபு ஜீ, ஆர்.ஜெகதீஷ், எல்.அர்ஜுன்

அருண் குமார், இ-மெயில் மூலம்.

நான் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். கடந்த ஆண்டு புதிய வருமான வரி முறையில் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்தேன். இப்போது ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறேன். நான் நடப்பு நிதி ஆண்டில் புதிய வரி முறையில்தான் வருமான வரி கட்ட முடியுமா?

ஆர்.ஜெகதீஷ், ஆடிட்டர், தேனி.

“நீங்கள் மாதச் சம்பளம் வாங்கு பவர் என்பதால், புதிய வரி முறை யிலிருந்து பழைய வரி முறைக்கு மாற்றிக்கொள்ளலாம். வீட்டுக் கடன் ரூ.50 லட்சம் வாங்கி இருப்பதால், நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் 80சி பிரிவின்கீழ் திரும்பக் கட்டும் அசலில் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை கிடைக்கும். இது தவிர, 24 பிரிவின்கீழ் திரும்பக் கட்டும் வட்டியில் நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை கிடைக்கும். எனவே, உங்களுக்கு பழைய முறையில் வரி கணக் கிடுவது லாபகரமாக இருக்கும்.”

பிரவின் குமார், திருவான்மியூர்.

நீண்ட காலமாக விலை ஏறாமல் இருந்ததால், ஐ.டி.சி பங்குகளை 10% லாபத்தில் விற்றுவிட்டேன். இப்போது மீண்டும் ஐ.டி.சி பங்கை வாங்கலாமா?

எல்.அர்ஜுன், செபி பதிவு பங்குச் சந்தை ஆலோசகர், https://flyingcalls.com

“ஐ.டி.சி லிமிடெட் இந்தியாவில் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட கடன் இல்லாத நிறுவனம் ஆகும். சிகரெட் தயாரிப்பில் இந்திய அளவில் முதன்மை யான நிறுவனம். மேலும், தன் தொழில்களை விரிவுபடுத்தி விடுதிகள், காகிதப் பொருள்கள், அட்டைப் பெட்டிகள், வேளாண் பொருள் ஏற்றுமதி எனப் பல துறைகளில் செயல்படும் நிறுவனம் ஆகும். அதிக டிவிடெண்ட் தரக்கூடிய கம்பெனி. பங்கின் விலை கடந்த 5 வருடங்களாக ரூ.175 முதல் ரூ.330 வரை வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தப் பங்கின் விலை இறங்கி வரும்போது உதாரணமாக ரூ.210 - 240 என்ற அளவில் வாங்கலாம். மேலும், அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்கள் (FMCG ) துறை பங்குகளில் டாடா கன்ஸ்யூமர் பங்கிலும் கவனம் செலுத்தலாம்.”

குமார், காஞ்சிபுரம் இ-மெயில் மூலம்.

என் வயது 41. சொந்த வீடு உள்ளது. வாடகை வருவாய் இல்லை. அரசு ஊழியர். மாதம் 55,000 ரூபாய் வருமானம். அனைத்துச் செலவுகள் போக மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை சேமிப்பு உள்ளது. மகன் முதல் வகுப்பு படிக்கிறான். எனக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் துறையில் பதவி உயர்வும் வரும். சம்பளமும் ரூ.70,000-ஆக உயரும். நான் 7 முதல் 10 ஆண்டு வரை முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பரிந்துரை செய்யவும்.

லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், http://moneyvedam.com

“ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் மிதமான ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர் மற்றும் உங்களின் முதலீட்டுக் காலம் 7 ஆண்டுகள் எனில், பின்வரும் நான்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் சமமாக பிரித்து முதலீடு செய்யலாம்.

1. யு.டி.ஐ நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்ட் - குரோத்

2. மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட்- குரோத்

3. கனரா ராபிகோ ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் - குரோத்

4. எஸ்.பி.ஐ கான்ட்ரா ஃபண்ட் குரோத்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism