Published:Updated:

எஸ்.ஐ.பி முதலீட்டில் சூப்பர் வருமானம்... லாபத்தை வெளியே எடுத்துவிடலாமா?

கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி

வி.கண்ணன், மும்பை.

நான் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகள் நல்ல லாபத்தில் இருக்கின்றன. சென்செக்ஸ் புள்ளிகள் 60000 என்கிற உச்சத்தில் இருக்கிறது. சந்தை இறங்க வாய்ப்புள்ளதா, லாபத்தை வெளியே எடுத்துவிடலாமா?

டி.எஸ்.சேதுராமன், நிறுவனர், சுரபி இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ், திருச்சி.

“இதுதான் சந்தையின் உச்சம் என யாராலும் கணிக்க முடியாது. பி.எஸ்.இ-யின் சென்செக்ஸ் குறியீட்டின் புள்ளிகள் 40000-ஐ தொட்ட போதும், 50000-ஐ தொட்டபோதும் இது போன்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு, சென்செக்ஸ் 60000 புள்ளிகளைக் கடந்தது. தவிர, நீங்கள் இப்போது லாபத்தை வெளியில் எடுத்தால், மீண்டும் எதில் முதலீடு செய்வீர்கள்? எனவே, சந்தையின் ஏற்ற, இறக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் முதலீட்டைத் தொடர்ந்து வைத்திருங்கள்.’’

எஸ்.ஐ.பி முதலீட்டில் சூப்பர் வருமானம்... லாபத்தை வெளியே எடுத்துவிடலாமா?

மகேஷ் குமார், கோயம்புத்தூர்.

ஏற்றுமதியில் டூட்டி டிராபேக் என்றால் என்ன, இது அனைத்துப் பொருள்களின் ஏற்றுமதிக்கும் பொருந்துமா?

உன்னி கிருஷ்ணன், தென்மண்டல துணைப் பொது இயக்குநர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO).

‘‘ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்ய பயன் படுத்தப்படும் மூலப்பொருள்கள் அல்லது இறக்குமதி செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் ஏற்றுமதி செய்யப் பட்ட பொருள்களின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை திருப்பக் கோரி, பெறுவதுதான் ‘டூட்டி டிராபேக்’ ஆகும். குறிப்பிட்ட ஏற்றுமதி பொருள்களுக்கு இறக்குமதி வரி மற்றும் இறக்குமதியால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது, இதன் சராசரி அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் எவ்வளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து, மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டுக்கும் ‘டூட்டி டிராபேக்’ வரிச் சலுகையை அறிவிக்கிறது. தற்போது 2,837 பொருள்களுக்கு இந்த வரியைத் திரும்பப் பெறும் சலுகை இருக்கிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட ஏழு தினங்களுக்குள் ஏற்றுமதியின் மதிப்புக்கேற்ப இறக்குமதிக்கு கட்டிய வரி ஏற்றுமதியாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நேரடியாக மூலப் பொருள்களை இறக்குமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள், தங்களின் தயாரிப்புகளுக்கு அவர்கள் கட்டும் இறக்குமதி வரியைவிட ‘டூட்டி டிராபேக்’ குறைவாக இருந்தாலோ, அவர்களின் தயாரிப்புகளுக்கு ‘டூட்டி டிரா பேக்’ இல்லாமல் இருந்தாலோ, மத்திய அரசுக்கு ‘டூட்டி டிரா பேக்’ விகிதத்தை நிர்ணயிக்க கேட்டு விண்ணப் பிக்க முடியும்.”

ரமேஷ் குமார், சென்னை - 600 017

என் மனைவிக்கு வி.ஆர்.எஸ் மூலம் ரூ.35 லட்சம் கிடைக்க இருக் கிறது. இந்தப் பணம் இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தேவையில்லை. குறைவான ரிஸ்க்கில் இந்தப் பணத்தைப் பல மடங்காகப் பெருக்க எந்தெந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்.

“15 ஆண்டுகளுக்குத் தேவை யில்லை என்பதால், முதலீட்டில் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம். நீங்கள் அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்டுகளில் (இதன் பழைய பெயர் பேலன்ஸ்டு ஃபண்ட்) முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது மூலம் ஆண்டுக்கு சராசரியாக 10% முதல் 12% வரை வருமானம் எதிர்பார்க்கலாம். மொத்த முதலீட்டுத் தொகையை மூன்று ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஈக்விட்டி & டெஃப்ட் ஃபண்ட், டி.எஸ்.பி ஈக்விட்டி & பாண்ட் ஃபண்ட் மற்றும் கோட்டக் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்துவரவும்.”

டி.எஸ்.சேதுராமன், உன்னி கிருஷ்ணன், த.முத்துகிருஷ்ணன், அர்ஜுன் பார்த்தசாரதி,  க.முரளிதரன், லலிதா ஜெயபாலன்
டி.எஸ்.சேதுராமன், உன்னி கிருஷ்ணன், த.முத்துகிருஷ்ணன், அர்ஜுன் பார்த்தசாரதி, க.முரளிதரன், லலிதா ஜெயபாலன்

கண்ணன், இ-மெயில் மூலம்.

பாண்டுகளில் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை எவ்வளவு, டீமேட் மூலம் பங்குகள் வாங்குகிற மாதிரி, பாண்டுகளில் முதலீடு செய்ய முடியுமா?

அர்ஜுன் பார்த்தசாரதி, நிறுவனர், https://inrbonds.com/

“சிறு முதலீட்டாளர்கள் பல முறைகளில் பாண்டுகளில் பாதுகாப்பாக முதலீடு செய்ய முடியும். என்.எஸ்.இ அல்லது பி.எஸ்.இ பங்குச் சந்தைகளின் கிளியரிங் ஹவுஸ் மூலம் பாண்டு களில் முதலீடு செய்யும் வசதி இருக்கிறது. இந்த முறைகளில் ஒருவர் ஒரு முறை ரூ.2 லட்சத்துக்கு மேல்தான் முதலீடு செய்ய முடியும். பங்குச் சந்தைகள்மூலம் முதலீடு செய்வதில் எந்த ரிஸ்க்கும் இல்லை. மேலும், என்.எஸ்.இ அல்லது பி.எஸ்.இ பங்குச் சந்தை களின் மூலம் குறைந்தபட்சம் ரூ.10,000 மற்றும் அதற்குமேல் முதலீடு செய்யலாம். பாண்ட் வெளியீட்டின்போது முதன்மைச் சந்தையில் ரூ.10,000 மற்றும் அதற்குமேல் முதலீடு செய்யலாம். டீமேட் மூலம் பங்குகளில் முதலீடு செய்வது போல் பாண்டுகளில் முதலீடு செய்யலாம்.”

எம்.குமரவேல், சென்னை - 600 023

மருத்துவக் காப்பீட்டில் ஐ.சி.யு (ICU) மற்றும் அறை வாடகைக்கு வரம்பு ஏதாவது உண்டா?

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், www.vidurawealth.com

“மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்திருக்கும் ஒருவர் விபத்து அல்லது திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (Intensive care unit - ICU) சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எனில், பாலிசியின் தன்மையைப் பொறுத்து, இந்தச் செலவுக்கு இழப்பீடு கோரும் தொகை மாறுபடும். உதாரணமாக, கவரேஜ் தொகையில் 5% அல்லது நாள் ஒன்றுக்கு ரூ.5,000 அல்லது ரூ.10,000 என்பதுபோல் இருக்கும். இதேபோல், அறை வாடகைக்கும் வரம்பு உண்டு. இது கவரேஜ் தொகையில் 2% அல்லது நாள் ஒன்றுக்கு ரூ.2,000 என்பது போல் இருக்கும். இந்த விவரங்களை பாலிசி எடுக்கும் போதே தெளிவுப்படுத்திக்கொள்வது நல்லது.’’

க.முத்துக்குமார், இ-மெயில் மூலம்.

என்னிடம் ரூ.5 லட்சம் இருக்கிறது. இந்தப் பணம் பத்தாண்டுகள் கழித்து தேவை. நான் தங்கத்தில் முதலீடு செய்யலாமா அல்லது வேறு நல்ல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளனவா?

லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், http://moneyvedam.com

“நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாத கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர் எனில், தபால் அலுவலக தேசிய சேமிப்பில் (NSC) முதலீடு செய்யலாம். இதில், ஆண்டுக்கு 6.8% வட்டி வருமானம் கிடைக்கும். நீங்கள் சற்று ரிஸ்க் எடுக்கத் தயார் எனில், ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இதில் வங்கி எஃப்.டி-யைவிட கூடுதலாகச் சுமார் 2% வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. நிப்பான் இந்தியா ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். நடுத்தர அளவு ரிஸ்க் எடுத்தால், நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு ஒருமுறை முதலீட்டு வருமானத்தை அலசி ஆராய்வதுடன், முதலீட்டை மூன்றாகப் பிரித்து மூன்று திட்டங்களில் மேற்கொள்ளவும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு