Published:Updated:

காப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும்போதும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமா?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

கேள்வி பதில்

காப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும்போதும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமா?

கேள்வி பதில்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

மகேஷ்குமார், திண்டுக்கல்.

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு எடுத் துள்ளேன். இந்தத் தொகையை ரூ.5 லட்சமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு மருத்துவப் பரிசோதனை உண்டா?

வெங்கடேசன் பிரம்மநாயகம், மருத்துவக் காப்பீட்டு ஆலோசகர்.

“நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவ செலவினங்களைப் பார்க்கும்போது, மருத்துவக் காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற உங்களின் திட்டம் மிகவும் சரியான முடிவே. மருத்துவக் காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க காப்பீடு நிறுவனங்கள் பல கட்டுப் பாடுகளை விதித்திருக்கிறது. முக்கியமாக, வயது, உடல் நலம் மற்றும் ஏற்கெனவே செய்திருக்கும் க்ளெய்ம் பற்றிய விவரம் ஆகியவற்றைக்கொண்டே முடிவெடுப்பார்கள்.

மருத்துவக் காப்பீட்டில் தொடர்ந்து இருக்கக்கூடிய, 50 வயதுக்குக் குறைவானவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் நோயினாலோ, விபத்தினாலோ பாதிக்கப்படாத பட்சத்தில், மருத்துவப் பரிசோதனை அவசியமில்லை. இருப்பினும், உயர்த்தி வழங்கும் தொகையின் அளவைக் காப்பீட்டு நிறுவனங்களே முடிவு செய்யும். உதாரணமாக, ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்திக் கேட்கும்பட்சத்தில் ரூ.3 லட்சம் அல்லது ரூ.4 லட்சமாக மட்டுமோ, அப்படியே ரூ.5 லட்சமாகவோ அதிகரித்தும் வழங்கலாம். 60 வயதுக்குமேல் உள்ளவர்கள் மேலும் நாள்பட்ட நோய் (Chronic Illness), தொடர் நோய் (Recurring Illness) மற்றும் தீவிர நோய் (Critical Illness) இருப்பவர்களுக்கு காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க முடியாது என்று மறுக்கப்படவும் வாய்ப்பு உண்டு. எனினும், காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தகுந்தாற்போல் மாறுபடலாம்.”

காப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும்போதும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமா?

ராம், பம்மல், சென்னை.

என் நண்பர் ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் செக்டார் ஃபண்டில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்று சொன்னார். தற்போதைய சூழ்நிலையில், எந்தத் துறை ஃபண்டுகளில் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது? செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது எந்த மாதிரியான விஷயங்களை ஒரு முதலீட்டாளர் கவனிக்க வேண்டும்?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“நீங்கள் குறிப்பிடுவதுபோல, எந்தத் துறை நன்கு வளரும் எனத் தெரிந்து கொண்டு, சமயம் பார்த்து முதலீடு செய்து, அதே போல் சமயம் பார்த்து வெளியே வருவது சாத்தியம் இல்லை. நீண்ட கால முதலீடுகளுக்கு செக்டார் ஃபண்டுகள் ஏற்றவை அல்ல என்பதே பொதுவான கருத்து. தற்போதைய சூழ்நிலையில், வாகனம் மற்றும் வாகன உபரிப் பொருள்கள் துறைகள் நன்கு வளரும் என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால், அதில் நுழைவதற்கு இப்போது சரியான நேரமா என்பது கேள்விக் குறியே. எப்போது வெளி வர வேண்டும் என்பதையும் இப்போது அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆகையால், லார்ஜ்கேப், ஃப்ளெக்ஸிகேப் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்வதே உசிதமான வழி.”

மூர்த்தி கிருஷ்ணா, திருவொற்றியூர், சென்னை -19.

நான் என் ஓய்வுக்காலத்துக்கென மூன்று ஈக்விட்டி ஃபண்டுகளில் தலா ரூ.5,000 கடந்த 20 ஆண்டுகளாக முதலீடு செய்து வருகிறேன். நான் இன்னும் ஐந்து ஆண்டு களில் பணி ஓய்வு பெற இருக்கிறேன். இந்த முதலீடுகள் ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன. இந்தத் தொகையை நான் எப்போது அதிக ரிஸ்க் இல்லாத கடன் ஃபண்டுகளுக்கு மாற்ற வேண்டும்?

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், www.vidurawealth.com

“உங்கள் ஓய்வுக்காலத்துக்காக நீங்கள் சரியான முதலீட்டை 20 ஆண்டுகளுக்கு முன்பே தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். தற்போது அது ரூ.2 கோடி அளவில் இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் வயது மற்றும் பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம் மற்றும் உலக அளவில் உள்ள பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும்போது, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டிலிருந்து 50% தொகையைக் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு மாற்றுவது நல்லது. மீதமுள்ள 50% தொகையை அஸெட் அலொக்கேட்டர் ஃபண்ட் மற்றும் மல்ட்டி அஸெட் ஃபண்டுக்கு மாற்றம் செய்து உங்களுக்கு ஓய்வூதியம் தேவைப்படும்போது சிஸ்டமெட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) முறையில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் மூலதன ஆதாயத்துக்கு அதிக வருமான வரி செலுத்துவதைத் தவிர்க்கலாம்.”

ராஜ் சரவணகுமார், இ-மெயில் மூலம்.

பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன். நான் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளேன். அது மட்டுமல்லா மல், மாதம் ரூ.3,000 என்ற முறையில் மியூச்சுவல் ஃபண்டில் பணம் கட்டி வருகிறேன். மேலும், போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் வைத்துள்ளேன். அதை ரத்து செய்துவிட்டு, அந்தத் தொகையை என்.பி.எஸ்ஸில் போட முடிவு செய்துள்ளேன். இது சரியாக இருக்குமா?

காப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும்போதும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமா?

ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in

“டேர்ம் இன்ஷூரன்ஸின் அவசியம் அறிந்து அதை எடுத்திருப்பதில் மகிழ்ச்சி. தபால் துறை இன்ஷூரன்ஸ் ஒரு முதலீடு சார்ந்த இன்ஷூரன்ஸ் பாலிசி என்பதால், அதிலிருந்து வரும் வருமானம் குறைவாகவே இருக்கும். ஆகவே, அந்த பாலிசியின் பிரீமியம் 3 வருடத்துக்கு மேல் கட்டியிருக்கும்பட்சத்தில், இந்த பாலிசியை ஒரு பெய்டப் (Paidup) பாலிசியாக மாற்றிவிட்டு, மாதாந்தரமாகச் செலுத்தும் 3,000 ரூபாயை ஒரு சிறந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். நியூ பென்ஷன் திட்டத்தைப் (என்.பி.எஸ்) பொறுத்தவரை, உங்களுடைய 60 வயதை எட்டும்போது மட்டுமே செலுத்திய பணத்தில், ஒரு பகுதி முதலீட்டை வருமானத்துடன் எடுக்க முடியும். மீதமுள்ள தொகையை ஆண்டளிப்பு (Annuity) பிளான் மூலம் ஓய்வூதியம் வழங்கப் படும். ஆகவே, தாங்கள் மாதம்தோறும் சேமிக்கும் தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.”

கே.பூபதிராஜா, ஈரோடு.

எனக்கு பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையில் 15 சென்ட் விவசாய பூமி உள்ளது. நான் இப்போது அந்த இடத்தில் பொதுத்துறை வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்ட விரும்புகிறேன். நான் வீட்டுக் கடன் வாங்க டி.டி.சி.பி அனுமதி கட்டாயம் தேவையா?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“விவசாய பூமி எனில், அதில் வீடு கட்ட வங்கிகளில் கடன் கிடைப்பது சற்றுக் கடினம். வங்கி சாரா நிதி நிறுவனங்களில கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அந்த நிலம் புன்செய் நிலமாக இருக்க வேண்டும். பட்டா மற்றும் வீட்டுப் பத்திரம் உங்கள் பெயரில் இருந்தால் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், கடனுக்கான வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கக்கூடும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism