Published:Updated:

பணி ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற ஃபண்ட் திட்டங்கள் எவை?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

பணி ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற ஃபண்ட் திட்டங்கள் எவை?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

எஸ்.சுதர்சன், யூடியூப் மூலம்.

வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டான இ.எல்.எஸ்.எஸ் (ELSS) திட்டத்தில் உள்ள ரிஸ்க்குகள் பற்றி விளக்கிச் சொல்லவும்.

லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், http://moneyvedam.com

“இ.எல்.எஸ்.எஸ் (Equity Linked Savings Scheme) என்பது நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். எனவே, இது பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய் வதற்குமுன் அதன் போர்ட்ஃபோலியோவைக் கவனிப்பது முக்கியம். அவை, லார்ஜ்கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாக இருக்கும். இவற்றின் அளவு எப்படி வேண்டுமானாலும் இருக்கும்.

புதிய முதலீட்டாளர்கள் மற்றும் மிதமான ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளில் குறைந்தது 60 - 70% முதலீடு செய்யும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களுக்கு 3 வருட லாக்இன் இருப்பதால், அவை சந்தையில் நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலம் இழப்பு ரிஸ்க்கைக் குறைக்க உதவுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதன்மூலம் முதலீட்டாளர்கள் கால இடர்ப்பாட்டையும் (Time risk) மற்றும் பணத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.”

பணி ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற
ஃபண்ட் திட்டங்கள் எவை?

கே.அறிவழகன், பொழிச்சலூர், சென்னை.

நான் வாங்கிய மனைக்கு என் பெயரில் பட்டா வாங்க கடந்த ஓராண்டுக் காலமாக முயற்சி செய்து வருகிறேன். இந்த நிலையில் என் நண்பர் ஒருவர், ‘‘வருவாய்த்துறை சார்பில் நடக்கும் ஜமாபந்தியில் மனு கொடுத்தால் உன் பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்’’ என்கிறார். இது உண்மையா? ஜமாபந்தி பற்றி விளக்கிச் சொல்லவும்.

டி.ஜீவா, வழக்கறிஞர் மற்றும் நோட்டரி பப்ளிக், சென்னை.

“ஜமாபந்தி என்பது மாவட்ட ஆட்சியர் தம் கீழ்ப் பணியில் உள்ள வருவாய்த்துறை சம்பந்த பட்ட அதிகாரிகள், தாசில்தார் மற்றும் கிராம நிர்வாகி சகிதம் குறைகளைக் களைவதற்காக நடத்தப்படும் கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் மக்கள் தரும் மனுக்கள் உடனுக்குடன் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது, வருவாய்த்துறை சம்பந்தப்பட்டது. நீண்ட காலமாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் வருவாய்த்துறை தொடர்பான பிரச்னைகளை இந்த ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்கள் மனுவாகக் கொடுத்தால் விரைந்து தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.”

பணி ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற
ஃபண்ட் திட்டங்கள் எவை?

ரவிகாந்த், மும்பை.

என் வயது 40. என் பணி ஓய்வுக்காலத்துக்கென மாதம் ரூ.25,000 முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு இந்தப் பணம் என் 60 வயதில் தேவை. எனக்கு ஏற்ற ஃபண்டுகளைக் குறிப்பிடவும்.

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“நீங்கள் தொடர்ந்து ரூ,25,000 மாதம்தோறும் முதலீடு செய்துவந்தால், 20 வருடங்களில் அந்தத் தொகை நன்கு வளர்ந்து சுமார் ரூ.2.5 கோடியாக உயர்வதற்கு வாய்ப்பு உண்டு. இத்தகைய முதலீட்டுக்கு ஒரு நல்ல ஃபண்ட் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைப் பராமரித்து வர வேண்டியது முக்கியம்.

உங்கள் முதலீட்டை நீங்கள் ஐந்து ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கலாம். யு.டி.ஐ நிஃப்டி 50 ஃபண்ட், பராக் பரிக் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் ஆகியவற்றில் தலா ரூ.5000 முதலீடு செய்து வரலாம். இந்தத் திட்டங்கள் தரும் வருமானத்தை ஆண்டுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்வது அவசியம்.’’

பணி ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற
ஃபண்ட் திட்டங்கள் எவை?

சதீஷ் குமார், சென்னை.

என் வயது 58. நான் என் ஓய்வுக் காலத்துக்காக ரூ.1 கோடி சேர்த்து வைத்துள்ளேன். இந்தத் தொகையை நான் எதில் முதலீடு செய்ய வேண்டும்? இதிலிருந்து ஆண்டுக்கு 7% தொகையை எடுத்தால் இந்தத் தொகை எத்தனை ஆண்டுகளுக்கு வரும் என்பதை விளக்கிச் சொல்லவும்.

நிவாஸ் நரசிம்மன், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், https://excitemutual.in/

“நீங்கள் ஒரு கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர் எனில், அஸெட் அலொகேட்டர் திட்டம் அல்லது பேலன்ஸ்டு அட்வான் டேஜ் திட்டங்களில் முதலீடு செய்யலாம். 7% என்கிற முறையில் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) முறையில் மாதம் தோறும் பெறலாம். சராசரியாக 10% வளர்ச்சி எதிர்பார்க்கலாம். 7% என்கிற அளவில் நீங்கள் எடுக்கும் தொகை போக, மீதமுள்ள உங்கள் முதலீடு பெருகிக்கொண்டே இருக்கும்.

இதுவே, நீங்கள் அக்ரசிவ் முதலீட்டாளர் எனில், அக்ரசிவ் ஹைபிரிட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதற்கு ஆண்டுக்கு 10% - 12% வரை வருமானம் எதிர்பார்க்கலாம்.

உங்கள் தொகுப்பு நிதியில் இருந்து 7% பணத்தை மட்டும் எடுத்துவந்தால், நீங்கள் வாழும் வரை உங்கள் முதலீடு குறைய வாய்ப்பு இல்லை. குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்குள் முதலீட் டைத் திரும்ப எடுத்தால், பங்குச் சந்தை நிலைமையைப் பொறுத்து லாபம் அல்லது நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நிதி ஆலோசகரின் ஆலோசனையைக் கேட்டு முதலீடு செய்யவும்.”

திருமூர்த்தி, செங்கல்பட்டு.

நான் மாதம் ரூ.20,000 முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஏழு ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாக வாய்ப்புள்ளதா? அது போன்ற மூன்று ஃபண்டுகளை நீங்கள் பரிந்துரை செய்ய முடியுமா? அதில் உள்ள ரிஸ்க்கையும் குறிப்பிடவும்.

பிரனேஷ் நாகராஜன், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், https://www.moneymineinvestments.com/

“உங்கள் முதலீடு ஏழு வருடங் களில் இரட்டிப்பாவது சாத்தியம் சிறிது குறைவுதான். ஆனால், நீங்கள் சொல்லும் இலக்குக்கு மிக அருகில் இருக்க வாய்ப்பிருக்கிறது.

உங்கள் முதலீடு ஆண்டுக்கு 12% வருமானம் கிடைக்கும் பட்சத்தில், ரூ.25 லட்சத்துக்கு மேல் வளர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏழு வருடம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தபின் இரண்டு அல்லது மூன்று வருடத்துக்குப் பிறகு, முதலீட்டைத் திரும்ப எடுப்பதன்மூலம் உங்கள் முதலீடு இரட்டிப்பாக வாய்ப்பிருக்கிறது.

உங்கள் முதலீட்டு தொகையான ரூ.16.80 லட்சம் (20,000 X 84 மாதங்கள்) இரண்டு வருடத்துக்குமேல் திரும்ப எடுப்பதன் மூலம் ரூ.33.60 லட்சமாக வளர்வதற்கு வாய்ப்பு உண்டு. ஆகையால், முதலீட்டுக் காலத்தை சிறிது அதிகப் படுத்துங்கள். உங்கள் முதலீட்டுக் காலத்தை 7 - 10 வருடங்களாக வைத்துக்கொள்ளுங்கள். எஸ்.ஐ.பி முதலீட்டுக் காலம் முடிந்தவுடன் (7 வருடம்/ 84 மாதங்களுக்குப் பின்) முதலீட்டை அப்படியே தொடர வேண்டும்.

மேற்சொன்ன ஆலோசனைகள் அனைத்தும் பங்குச் சந்தையின் போக்கை வைத்தே தீர்மானிக்க முடியும். பங்குச் சார்ந்த திட்டத்தில் 40% லார்ஜ்கேப் ஃபண்ட், 40% மிட் அண்ட் ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். கடன் சார்ந்த திட்டத்தில் மீதம் 20% பணத்தை முதலீடு செய்யவும்.

பங்குச் சார்ந்த திட்டத்தில் 30% - 50% வரை முதலீட்டு மதிப்பு குறைய வாய்ப்பிருக்கிறது. கடன் சார்ந்த திட்டங் களில் 10% - 20% வரை முதலீட்டு மதிப்பு குறைய வாய்ப்பிருக்கிறது, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும்போது இதை நீங்கள் தவிர்க்கலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism