Published:Updated:

மாதம் ரூ.2,500... 15 ஆண்டுகள்... ஈக்விட்டி ஃபண்டில் எவ்வளவு வருமானம்..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

மாதம் ரூ.2,500... 15 ஆண்டுகள்... ஈக்விட்டி ஃபண்டில் எவ்வளவு வருமானம்..?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

வடிவேல் முருகன், இ-மெயில்

இண்டெக்ஸ் ஃபண்ட் ஒன்றில் 10 ஆண்டுகளுக்கு நீண்ட கால முதலீடாக மாதம் ரூ.2,000 முதலீடு செய்ய விரும்புகிறேன். இதன் நோக்கம் செல்வம் சேர்ப்பதாகும். எனக்கு ஏற்ற இண்டெக்ஸ் ஃபண்டை பரிந்துரை செய்யவும்.

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், www.vidurawealth.com

“நீங்கள் யு.டி.ஐ இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். அது கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 12% வருமானம் கொடுத்திருக்கிறது. மேலும் அந்த ஃபண்ட் குறைந்த அளவு செலவு விகிதம் கொண்டதாகும்.”

மாதம் ரூ.2,500... 15 ஆண்டுகள்...
ஈக்விட்டி ஃபண்டில் எவ்வளவு வருமானம்..?

பாலமுருகன், இ-மெயில் மூலம்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.2,500 கட்டி வந்தால் 15 வ௫டம் கழித்து எவ்வளவு தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது?

ராஜேந்திரன் கௌரிசங்கர், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், கும்பகோணம்.

“பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நீண்ட கால நோக்கில் மட்டுமே நல்ல பலன் தரும் என்பதைத் தெளிவாக புரிந்து கேள்வி கேட்டிருக்கிறீர்கள். 15 ஆண்டு கள் கழித்து பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தர நிறைய வாய்ப்பிருக்கிறது. நீங்கள் முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள் எனில், டைவர்சிஃபைடு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஃப்ளெக்ஸி கேப் அல்லது மல்ட்டிகேப் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் முதலீடு 12% வருமானம் கொடுக்க வாய்ப்புள்ளது. மாதம் ரூ.2,500 வீதம் 15 ஆண்டுகளில் ரூ.4,50,000 நீங்கள் முதலீடு செய்த தொகை 12% வளர்ச்சியில் ரூ.12,47,275 கிடைக்க வாய்ப்புள்ளது.”

கே.வெங்கட், தென்காசி

பாரத் பாண்ட் ஃபண்ட் முதலீடு யாருக்கு ஏற்றது? இதில் எவ்வளவு காலம் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது?

சி.குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், நாமக்கல்.

“பாரத் பாண்ட் ஃபண்ட் என்பது எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு கடன் வகை ஃபண்ட் ஆகும். இது ஒரு ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் ஆகும். ஏஏஏ தரக்குறியீடு உள்ள கடன் பத்திரங்களிலேயே பெருமளவு தொகை பாரத் பாண்ட் இ.டி.எஃப் மூலம் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்ட் குறைந்த அளவு ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே ஏற்றது. ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான முதலீட்டுக்கு வங்கி வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டியைவிட ஓரிரு சதவிகிதம் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. வட்டி விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ஃபண்டின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நல்ல லாபம் கிடைக்க நன்கு செயல்படும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளை பரிசீலனை செய்யவும்.”

மாதம் ரூ.2,500... 15 ஆண்டுகள்...
ஈக்விட்டி ஃபண்டில் எவ்வளவு வருமானம்..?

மலர்விழி, கடையம், திருநெல்வேலி மாவட்டம்.

ஒரு குறிப்பிட்ட நோய் ஏற்கெனவே இருக்கும்பட்சத்தில் அதற்கான காத்திருப்புக் காலம் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசியிலும் ஒரேமாதிரிதான் இருக் குமா? ஏற்கெனவே இருக்கும் நோய்க்குக் காத்திருப்புக் காலம் இல்லாமலும் பாலிசி இருக்கிறதா?

வெங்கடேசன் பிரம்மநாயகம், நிதி ஆலோசகர் & மருத்துவ காப்பீட்டு ஆலோசகர்.

“ஒரு குறிப்பிட்ட நோய் ஏற்கெனவே இருக்கும்பட்சத்தில் அதற்கான காத்திருப்புக் காலம் அனைத்துக் காப்பீட்டு நிறுவனங் களின் பாலிசியிலும் ஒரே மாதிரி இருக்காது. இது ஒவ்வொரு காப்பீடு நிறுவனத்துக்கும் மாறுபடும், ஒவ்வொரு காப்பீடு நிறுவனமும் பல வகையான பாலிசிகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு பாலிசியும் ஒவ்வொரு வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே இருக் கும் நோய்களுக்கு காத்திருப்புக் காலம் சில பாலிசிகளில் நான்கு வருடமாகவும், மற்றவற்றில் மூன்று அல்லது இரண்டு அல்லது ஒரு வருடம் மற்றும் ஒரு மாதம் எனக் காத்திருப்புக் காலத்தை நிர்ணயிக்கிறார்கள். காத்திருப்புக் காலம் பொதுவாக வயது, நோயின் தன்மை, பாலிசி யின் அம்சங்கள், காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமியத்துக்கு தகுந்தாற்போல மாறுபடும்.

ஏற்கெனவே இருக்கும் நோய்க்குக் காத்திருப்புக் காலம் இல்லாமலும் பாலிசி இருக்கிறதா என்றால் சில குறிப்பிட்ட நோய் களுக்கு மட்டும் பாலிசி எடுப் பதற்கு முன்பே மருத்துவ பரிசோதனை செய்து அதன் தன்மையைப் பொறுத்து காத்திருப்புக் காலம் இல்லாமலும் பாலிசி கொடுக்கின்றனர். இது பல கட்டுப்பாடுகளுடனும் மற்றும் நிறுவனத்துக்கு தகுந்தாற் போல மாறுபடக்கூடியதாகவும் இருக்கும்.”

மாதம் ரூ.2,500... 15 ஆண்டுகள்...
ஈக்விட்டி ஃபண்டில் எவ்வளவு வருமானம்..?

தி.ராஜசேகர், கெருகம்பாக்கம், சென்னை -128

புது பிளாட் வாங்கியுள்ளேன். வங்கியிலிருந்து ரூபாய் 29 லட்சம் லோனாக 20 ஆண்டுகளுக்குப் பெற்றுள்ளேன். மாதம் ரூபாய் 22,500 செலுத்தி வருகிறேன். எனது இ.எம்.ஐ ரூ.13,500 ஆக குறைக்க முடிவு செய்துள்ளேன். அப்படியென்றால் அதற்கு ப்ரீ பேமென்ட்டாக எவ்வளவு வங்கிக்குச் செலுத்த வேண்டும்?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“நீங்கள் கேட்ட கேள்வியில் எத்தனை வருடங்களாக மாதத் தவணை செலுத்திக்கொண்டு வருகிறீர்கள், வாங்கிய கடனில் இப்போது நிலுவையில் இருக்கும் அசல் தொகை எவ்வளவு என்ற இரண்டு விவரங்களும் குறிப்பிடப் படவில்லை. ஆகவே, நீங்கள் இந்த வருடம்தான் இந்தக் கடனை வாங்கியிருக்கிறீர்கள் என்று அனுமானித்துக் கொள்கிறேன்.

தோராயமாக ரூ.11.50 லட்சம் இப்போது மொத்தமாகச் செலுத் தினால், இப்போதுள்ள வட்டி விகிதமான 7.01 சதவிகிதத்தில் 20 வருடங்களுக்கு நீங்கள் செலுத்த விரும்பும் மாதத் தவணையான ரூ.13,500-ஐ செலுத்தலாம். இதில் கவனிக்க வேண்டியது வட்டி விகிதம் உயர்ந்துகொண்டே போவதால் மாதத் தவணை நிலையாக இருந்தாலும் கடனைத் திரும்பச் செலுத்தும் வருடங்கள் உயர வாய்ப்பிருக்கிறது. அதேபோல் மாதத் தவணை ரூ.22,500 நிலையாக வைத்துக்கொண்டு கடனைத் திரும்பச் செலுத்தும் வருடங்களை குறைத்துக்கொள்ளலாம். இதில் மாதத் தவணையைக் குறைப்பது சிறந்ததா, திரும்பச் செலுத்தும் வருடங்களைக் குறைப்பது சிறந்ததா, எதில் லாபம் என்பதை கடன் தொகை, வட்டி விகிதம், கடனைத் திரும்பச் செலுத்தும் வருடங்கள், இதுவரை கடனை திரும்ப செலுத்திய வருடங்கள், இப்போது நிலுவையில் இருக்கும் அசல் தொகை, இப்போது எவ்வளவு தொகை முன்கூட்டியே செலுத்தப்போகிறோம் என்பன போன்ற அனைத்து விவரங்களையும் வைத்துக்கொண்டு தனியாகக் கணக்கிட்டுதான் சொல்ல முடியும்.”

கே.என்.செல்வராஜன், சென்னை

எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் டாக்ஸ் பிளான் (இ.எல்.எஸ்.எஸ்) திட்டத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், முதலீடு செய்யும் பணத்துக்கு, முதலீடு செய்யும் வருடத்தில் வருமான வரிக்கழிவு உண்டு. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பல நல்ல வரி சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் அல்லது கனரா ராபிகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட் இவற்றுள் ஒன்றில் முதலீடு செய்யலாம்.”