Published:Updated:

ரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான்... எது பெஸ்ட் சாய்ஸ்..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

ரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான்... எது பெஸ்ட் சாய்ஸ்..?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

நளினி, சிதம்பரம்.

நான் மஹிந்திரா மேனுலைஃப் ஃபண்ட் மற்றும் குவான்ட் வேல்யூ ஃபண்ட் ஆகியவற்றில் தொடர்ந்து எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்கிறேன். நான் இரண்டு ஃபண்டுகளிலும் மாதம் ரூ.10,000 ஏஜென்ட் மூலம் முதலீடு செய்து வருகிறேன். செலவு விகிதம் சுமார் 2 சதவிகிதமாக இருக்கிறது. டைரக்ட் பிளானில் செலவு விகிதம் 0.6 சதவிகிதமாக உள்ளது. நான் செலவு விகித்தைக் குறைக்க நேரடி பிளானுக்கு மாறுவது லாபகரமாக இருக்குமா?

ஜி.சோலை, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்.

“செபி விதிமுறையின்படி, ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் ஆம்ஃபியில் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்மூலம் ரெகுலர் பிளானில் (Regular Plan) முதலீடு செய்யலாம். அல்லது நேரடியாக டைரக்ட் பிளான் (Direct Plan) மூலம் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் மூலம் என்கிறபோது அவரின் அனுபவம், சேவை போன்றவற்றை ஒருவர் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், பங்குச் சந்தை, கடன் சந்தை போன்றவற்றின் சவாலான காலகட்டத்தில் சரியாக முதலீடு செய்யவும், நிதி இலக்குகளை அடையவும் உதவி செய்வார். டைரக்ட் பிளானில் முதலீட்டாளர் அவரின் சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் முதலீட் டுக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை முடிவு செய்யவேண்டும். இந்த முறையில் ரெகுலர் பிளானைவிட செலவு விகிதம் சிறிது குறைவாக இருக்கும். ரெகுலர் பிளான், டைரக்ட் பிளான் என்பவை அவற்றின் சிறப்புகளைக் கொண்டுள்ளன. நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.”

ரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான்... எது பெஸ்ட் சாய்ஸ்..?

என்.கணேசன், மதுரை.

நான் மருத்துவக் காப்பீடு பாலிசி எடுத்திருக்கிறேன். நான் கடந்த 12 வருடத்தில் எந்த க்ளெய்மும் செய்ய வில்லை. அப்படியெனில், அந்த பாலிசி முடிந்தவுடன் அந்தப் பணம் எனக்கு கிடைக்குமா?

வெங்கடேசன் பிரம்மநாயகம், மருத்துவக் காப்பீட்டு ஆலோசகர்.

“மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை, பல பாலிசிதாரர்களிடமிருந்து சிறிது சிறிதாக பெறப்படும் பிரீமியத் தொகையை ஒன்றாகச் சேர்த்து, ஒரு சில பாலிசிதாரர்களுக்கு எதிர் பாராமல் ஏற்படும் மருத்துவச் செலவினங் களுக்குக் காப்பீட்டின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இழப்பீடு வழங்குவதே இதன் நோக்கம். ஆதலால், மருத்துவக் காப்பீட்டில் நீங்கள் வருடக் கணக்கில் எந்த க்ளெய்மும் செய்யாமலிருந்தாலும் அல்லது வருடம்தோறும் க்ளெய்ம் செய்திருந்தாலும் பாலிசிக் காலம் முடிந்த பிறகு, நீங்கள் இதுவரை செலுத்திய பிரீமியத் தொகை திரும்பக் கிடைக்காது.”

எஸ்.எல்.நரசிம்மன், இ-மெயில் மூலம்

என் வயது 53. எனக்கு தேசிய சேமிப்புப் பத்திர முதலீட்டின் மூலம் ரூ.1.5 லட்சம் கிடைத்துள்ளது. இதை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன்மூலம் ஆண்டுக்கு 13 - 15% எதிர்பார்க்கிறேன். என் பணத்தை ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்டில் முதலீடு செய்வது சரியாக இருக்குமா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“நீண்ட கால முதலீட்டுத் திட்டமாக இத்தகைய ஒரு தொகையை முதலீடு செய்யும்போது மொத்த மாகக் குவித்து ஒரு ஃபண்டில் முதலீடு செய்வது நல்லதல்ல. மேலும், பங்குச் சந்தையில் இருந்து ஆண்டுக்கு 13 - 15% எதிர்பார்ப்பது அதிகம். நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரி யாக 10 - 12% வருமானம் கிடைப் பது சாத்தியமாக இருக்கும். அதற்குமேல் வந்தால் அது உங்கள் அதிர்ஷ்டமாக நினைத் துக்கொள்ளலாம். நீங்கள் இந்தத் தொகையை ஒரு ஃபண்டுக்குப் பதிலாக மூன்று ஃபண்டுகளில் முதலீடு செய்தால், ரிஸ்க் குறையும். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஃபண்டுடன் ஆக்ஸிஸ் நிஃப்டி 100 ஃபண்டிலும், யு.டி.ஐ ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டிலும் முதலீடு செய்து (சம அளவுகளில் - தலா ரூ.50,000) பயன் அடையுங்கள்.”

ரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான்... எது பெஸ்ட் சாய்ஸ்..?

பிரகாஷ் சம்பத், இ-மெயில் மூலம்.

என் பிள்ளையின் உயர்கல்விக்கு முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். பத்து ஆண்டுகள் கழித்து இந்தப் பணம் தேவைப்படும். நான் எஸ்.ஐ.பி முறை மற்றும் மொத்தமாக எந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்?

எம்.ஜீவானந்தம், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், க்ரோவெல் இன்வெஸ்ட்மென்ட், தஞ்சாவூர்.

“நீங்கள் 10 வருடங்கள் முதலீடு செய்ய முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி. பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி (Diversified Equity) ஃபண்டில் நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த வகை மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து அதிக வருமானத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் குழந்தையின் கல்விக்கு (பண வீக்கம் உட்பட) எவ்வளவு தேவை என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், அதன் அடிப்படையில் நீங்கள் மாதாந்தர முதலீட்டைத் திட்டமிட வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து முதலீடு செய்வதை உறுதி செய்யுங்கள். சந்தைகள் இடையில் நிலையற்றதாக இருக்கலாம். ஆனால், நீண்ட காலத்துக்கு உங்கள் குழந்தையின் கல்விக்கான இலக்குத் தொகையைப் பெற அதிக வாய்ப்புள்ளது.”

ரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான்... எது பெஸ்ட் சாய்ஸ்..?

மல்லிகா முத்து, சென்னை - 44

கேன்சர் பாலிசி என்றால் என்ன? அதை யார் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்?

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், www.vidurawealth.com

“புற்றுநோய் காப்பீடு என்பது புற்றுநோயுடன் தொடர்புடைய மருத்துவச் செலவுகளை சமாளிக்க வடிவமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஆகும். இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயானது ஒருவரின் உடல்நலம், மன அழுத்தம் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கிறது, அதற்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள செலவுகளும் அதிகம். புற்று நோய் சிகிச்சைக்கு நிதி ரீதியாக உங்களைத் தயார்படுத்திக் கொள்வதே ஒரே வழி. இதற்குப் புற்றுநோயை உள்ளடக்கிய காப்பீட்டு பாலிசியைத் தேர்ந்தெடுப்பதே சரி. இந்த நோக்கத்துடன் ‘கேன்சர் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி’கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை புற்றுநோய்க்கு எதிரான விரிவான பாதுகாப்பை வழங்குகின்றன. இது புற்றுநோயால் வரும் அதிர்ச்சியைச் சமாளிக்க உதவுவதுடன், நோயாளியையும் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் பாதுகாப்பாக வைக்கிறது.”

கண்ணன் குமார், திசையன்விளை.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால் நஷ்டமே வராதா?

என்.ஜெயகுமார், சி.எஃப்.ஏ, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்

“எஸ்.ஐ.பி முறையிலான முதலீடு நஷ்டம் தருமா அல்லது லாபம் தருமா என்பது பல காரணிகளைப் பொறுத்து அமையும். நீங்கள் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள், எப்போது உங்கள் முதலீட்டை ஆரம்பிக் கிறீர்கள், எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள், எவ்வளவு காலம் முதலீடு செய்வீர்கள், ஒரு முறை முதலீடா (Lump Sum ) அல்லது எஸ்.ஐ.பி முறையிலா, எப்போது உங்கள் முதலீட்டின் மதிப்பை (Valuation) கணக்கிடுவீர்கள் என்பதைப் பொறுத்து அமையும்.”