Published:Updated:

டிவிடெண்ட் பே அவுட், டிவிடெண்ட் யீல்டு... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

டிவிடெண்ட் பே அவுட், டிவிடெண்ட் யீல்டு... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

மா.பன்னீர்செல்வம், இ-மெயில் மூலம்

என் வயது 41. அரசு ஊழியர். நான் கடந்த ஏழு வருடங்களாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் டைரக்ட் பிளான் மூலம் எஸ்.ஐ.பி முறையில் ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் (ரூ.5,000), எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் (ரூ.2,000) ஹெச்.டி.எஃப்.சி சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்ட் (ரூ.2,500) ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். கடந்த மூன்று வருடங்களாக யு.டி.ஐ ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் (ரூ.2,500), ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்ட் (ரூ.1,000) போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். இன்னும் 19 வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா அல்லது இதில் மாற்றங்கள் செய்யலாமா..?

வித்யா பாலா, இணை நிறுவனர், Primeinvestor.in

“உங்களின் தற்போதைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவை (Portfolio) அக்ரசிவ்வாக இருக்கிறது. 40% தொகையை வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறீர்கள். சுமார் 25% தொகையை ஸ்மால்கேப் & மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறீர்கள். மீதித் தொகை ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் & ஹைபிரிட் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறீர்கள்.

உங்கள் முதலீட்டுக் கலவையில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான ஃபண்டுகள் சிறப்பாக செயல்படுகிறவை. நான் செய்ய விரும்புவதெல்லாம், உங்களின் முதலீட்டுக் கலவையில் உள்ள ரிஸ்க்கை சிறிது குறைக்க வேண்டும் மற்றும் ஃபண்டுகளின் தரத்தை சற்று உயர்த்த வேண்டும் என்பதே. இதற்கு, நீங்கள் உங்கள் முதலீட்டுக் கலவையில் இடம்பெற்றிருக்கும் ஹெச்.டி.எஃப்.சி-யின் இரு ஃபண்டுகளை மாற்றி, மிரே அஸெட் ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாம்.’’

டிவிடெண்ட் பே அவுட், டிவிடெண்ட் யீல்டு... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

காவ்யா, சூளைமேடு, சென்னை

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டி.பி.ஏ என்கிற மூன்றாம் தரப்பு நிர்வாகியின் பங்கு என்ன, பாலிசியை புதுப்பிக்கும்போது டி.பி.ஏ-யை மாற்ற முடியுமா?

வெங்கடேசன் பிரம்மநாயகம், மருத்துவக் காப்பீட்டு ஆலோசகர்

“மருத்துவக் காப்பீட்டுத் துறையில் டி.பி.ஏ (TPA – Third Party Administrator) என்று சொல்லப்படும் மூன்றாம் தரப்பு நிர்வாகி என்பவர், குறிப்பிட்ட மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தால் அவர்களின் சார்பாக க்ளெய்ம் சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளையும் அவர்களின் பாலிசிதாரர்களுக்கு செய்து தருவதற்காக நியமிக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பானது பாலிசிதாரர்களுக்கு அடையாள அட்டை (ID Card) வழங்குதல், பாலிசி தாரர்களுக்கு ஏற்படும் மருத்துவச் சிகிச்சை தொடர்பான செலவுகளை பாலிசியின் நிபந்தனை களுக்கு உட்பட்டு மருத்துவமனைகளுடன் இணைந்து முறையாகப் பெற்றுத் தருதல் உள்பட பல சேவைகளையும் செய்து தருகிறது.

பாலிசியைப் புதுப்பிக்கும்போது டி.பி.ஏ-வை மாற்ற முடியுமா எனில், காப்பீட்டு நிறுவனங்கள் இரண்டுக்கு மேற்பட்ட டி.பி.ஏ-களை நியமித் திருந்தால் மட்டுமே மாற்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது. மேலும், இது காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.”

டிவிடெண்ட் பே அவுட், டிவிடெண்ட் யீல்டு... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

எம்.கார்த்திகா, இ-மெயில் மூலம்

பங்கு முதலீட்டில் டிவிடெண்ட் பே அவுட், டிவிடெண்ட் யீல்டு இரண்டுக்கும் என்ன வித்தியாசம், இந்த இரண்டில் எதன் அடிப்படையில் எப்படி முதலீட்டை மேற்கொள்வது?

எல்.அர்ஜூன், செபி பதிவு பங்குச் சந்தை ஆலோசகர், https://flyingcalls.com

டிவிடெண்ட் என்பதை தமிழில் ஈவுத்தொகை என்கி றோம். முதலில், டிவிடெண்ட் பே அவுட், டிவிடெண்ட் யீல்டு இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் குறித்துப் பார்ப்போம்.

ஈவுத் தொகை செலுத்துதல் விகிதம் (Dividend Pay-Out) என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அதன் உண்மையான ஈட்டிய லாபத்திலிருந்து அதன் பங்கு தாரர்களுக்கு எவ்வளவு ஈவுத் தொகை செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. இது ஒரு பங்குக்குப் பெறப்பட்ட ஆண்டு ஈவுத் தொகை ஆகும்.

ஈவுத் தொகை செலுத்துதல் விகிதம் = (ஒரு பங்குக்கு ஆண்டு ஈவுத் தொகை / ஒரு பங்கு வருவாய்) X 100

ஈவுத் தொகை மகசூல் விகிதம் (Dividend Yield) அதன் சந்தை விலையுடன் ஒப்பிடும்போது ஒரு பங்குக்கு நிறுவனம் செலுத்தும் ஈவுத் தொகையின் சதவிகிதத்தைக் குறிக்க உதவு கிறது. ஒரு பங்குதாரர் தனது பங்கின் மீது பெற்ற வருடாந்தர ஈவுத் தொகையை அந்தப் பங்கின் சந்தை விலையால் வகுப்பதாகும்.

ஈவுத் தொகை மகசூல் விகிதம் = (ஒரு பங்குக்கான வருடாந்தர ஈவுத் தொகை / பங்கின் சந்தை மதிப்பு) X 100

பங்குகளில் வங்கி வட்டி போன்று டிவிடெண்ட் தரும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பான பங்குகள் (Defensive stocks) என்பார்கள். உதாரணமாக, ஆர்.இ.சி, பி.எஃப்.சி, பவர் கிரிட் இந்த பங்குகளில் நல்ல டிவிடெண்ட் கிடைக்கும். இந்தப் பங்குகளின் விலை அதிகமாக ஏற்றம் காணாது. அதே போல், அதிகமாகவும் இறக்கம் இருக்காது.

நல்ல நிர்வாகம் இருக்கும் பல நிறுவனங்கள், அவர்கள் கொடுக்கும் டிவிடெண்ட் தொகையைத் தொடர்ந்து அதிகரிக்கவே செய்கின்றன. உதாரணமாக, டி.சி.எஸ் வருடத்துக்கு இடைக்கால டிவிடெண்ட், வருட டிவிடெண்ட் என 3-4 டிவிடெண்ட் தரும் நிறுவனம் ஆகும்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்காது. பங்குச் சந்தையில் டிவிடெண்ட் மகசூல் விகிதத்தைப் (Dividend Yield) பொறுத்து பங்குகள் வாங்க வேண்டும் எனில், மேற்கூறிய பாதுகாப்பான பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம். ஆனால், பங்கு விலையில் அதிக ஏற்றம் இருக்காது என்பதை மறக்கக் கூடாது.

பங்கு விலையும் ஏற வேண்டும், டிவிடெண்டும் அதிகம் கிடைக்க வேண்டும் எனில், நன்கு டிவிடெண்ட் தருகிற, நிஃப்டி50 குறியீட்டில் இடம்பெற்றுள்ள முன்னணி நிறுவனப் பங்குகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்யலாம். ஆனால், இந்தப் பங்குகளில் ரிஸ்க்கும் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது அவசியம்.’’

டிவிடெண்ட் பே அவுட், டிவிடெண்ட் யீல்டு... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

மகாராஜா, மணிமங்கலம்

நல்ல நிறுவனப் பங்குகளில் ரூ.10 லட்சம் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். அதன் மதிப்பு 10 சதவிகித்துக்குமேல் அதிகரிக்கும்போது அந்த லாபம் என்னுடைய வங்கிக் கணக்கு வரும்படி செய்ய முடியுமா, இப்படி லாபத்தை வெளியே எடுப்பது லாபகரமாக இருக்குமா?

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை பயிற்சியாளர்- www.ectra.in

“பங்குச் சந்தையில் நல்ல நிறுவனங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்வது நல்ல விஷயம். மேலும், லாபத்துக்கு இலக்கு வைப்பதும் நல்ல விஷயமே. 10% லாபம் வந்தவுடன் தானாகவே வங்கி கணக்குக்கு வருமா எனில், அது தானாக நடக்காது. அதற்கான வேலையை நீங்கள்தான் செய்ய வேண்டும். முதல் வேலை, ஜி.டி.டி (GTT - Good till trigger) வசதி உள்ள புரோக்கரிடம் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது வேலை, ஒரு பங்கை வாங்கியவுடன், லாபம் 10% என்ற கணக்கு போட்டு அந்த விலை வந்தவுடன் விற்பதற்கு ஜி.டி.டி முறையில் விற்க பதிவு செய்யவேண்டும். இதன் மூலம் நீங்கள் குறிப்பிடும் பங்கு, நீங்கள் விரும்பிய விலை வரும்போது, தானாகவே புரோக்கர் மென்பொருள், பங்கை விற்பனை செய்யத் துணைபுரியும். மூன்றாவது வேலை, விற்று லாபம் வந்தவுடன் நீங்கள் உங்கள் புரோக்கர் மென்பொருள் மூலம் உங்கள் லாபத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்ற வேண்டும். இதை எல்லாம் செய்தால் மட்டுமே நீங்கள் விரும்புகிற லாபத்தை அடைந்தவுடன் அதை எடுத்து அனுபவிக்க முடியும்.”