Published:Updated:

உறுப்பு மாற்று சிகிச்சை... மருத்துவக் காப்பீட்டில் இழப்பீடு கிடைக்குமா?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

கேள்வி பதில்

உறுப்பு மாற்று சிகிச்சை... மருத்துவக் காப்பீட்டில் இழப்பீடு கிடைக்குமா?

கேள்வி பதில்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

சொக்கலிங்கம், காரைக்குடி.

நான் கடன் ஃபண்ட் ஒன்றில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் முதலீடு செய்து வருகிறேன். இப்போது திடீர் செலவுக்காகக் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. மூன்று மாதக் காலத்துக்கு எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவைக்கும் வசதி இருக்கிறதா?

பி.நாராயணசாமி, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், திருச்சி.

“நீங்கள் தொடா்ந்து கொண்டிருக்கும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தற்காலிகமாக நிறுத்தும் வசதி எல்லா மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களிலும் உள்ளது. அதற்கு, உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரையோ அல்லது உங்களுக்கு அருகி லுள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளை அலுவல கத்தையோ தொடா்பு கொண்டு மூன்று மாதங்களோ அல்லது அதற்கு மேலாகவோ தற்காலிகமாகவோ நிறுத்திக் கொள்ளலாம். மூன்று மாதங் களுக்குப் பிறகு, முதலீட்டை மறுபடியும் தொடா்வது மிகவும் நல்லது.”

உறுப்பு மாற்று சிகிச்சை... மருத்துவக் காப்பீட்டில் இழப்பீடு கிடைக்குமா?

ராம்கி, கோவை.

என் வயது 25. மாதச் சம்பளம் ரூ.40,000. மாதம் ரூ.10,000 வீதம் பத்து ஆண்டுகளுக்கு மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளேன். நான் இந்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என் முதலீட்டு முடிவு சரியா?

பி.ரமணன், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், https://wcassociates.net/

“பத்தாண்டுக் காலத்துக்கு நீங்கள் தாராளமாக மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இதில் ஃபண்ட் தேர்வு மிக முக்கியமானது. ஒரே ஒரு ஃபண்டில் மொத்த முதலீட்டை மேற்கொள் வதற்குப் பதில் 2 - 3 ஃபண்டு களில் பிரித்து முதலீடு செய்யவும். அதாவது, மிட்கேப் ஃபண்டுகளின் இடையே முதலீட்டைப் பிரித்து பரவலாக்குவது மூலம் ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைக்க முடியும்.

ஃபண்டைத் தேர்வு செய்யும்முன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பாரம் பர்யத்தை முக்கியமாக கவனிக்கவும். எஸ்.பி.ஐ மிட் கேப் ஃபண்ட், டி.எஸ்.பி மிட் ஃபண்ட், ஏ.பி.எஸ்.எல் ஃபண்ட் போன்ற நீண்ட வரலாறு கொண்ட ஃபண்டு களை முதலீட்டுக்கு கவனிக்கலாம். நிலையான மற்றும் தொடர்ந்து நல்ல வருமானம் கொடுக்கும் ஃபண்டுகளாக தேர்வு செய்ய வேண்டும். கடந்த ஓராண்டில் தந்திருக் கும் அதிக வருமானத்தை மட்டும் கணக்கில்கொண்டு முதலீட்டை மேற்கொள்ளக் கூடாது. பங்குச் சந்தை இறக்கத்தின்போது அதிகம் இறக்கம் காணாத ஃபண்ட் எனில், நல்லது. இந்த மிட்கேப் ஃபண்டு களில் செய்திருக்கும் முதலீட்டைக் குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறை மறுஆய்வு செய்வது அவசியம்.’’

அறிவழகன், மன்னார்குடி.

என் வயது 50 ஆகிறது. இன்னும் பத்தாண்டுகளில் 60 வயதில் பணி ஓய்வு பெற இருக்கிறேன். அப்போது சொந்தமாக வீடு வாங்க மியூச்சுவல் ஃபண்டில் எந்த மாதிரியான திட்டங் களில் முதலீடு செய்து வர வேண்டும்?

ஜி.சோலை, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், கோயம்புத்தூர்.

“சொந்த வீட்டுடன் பணி ஓய்வுபெறத் திட்டமிட்டு உள்ள உங்களுக்கு வாழ்த்துகள். இதற்கான தொகை யைப் பெற நீங்கள் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி அல்லது மொத்தத் தொகை அல்லது இரண்டு முறையிலும் கலந்து முதலீடு செய்யலாம். இந்தத் தேவைக்கு அதிக ஏற்ற இறக்கம் இல்லாத, நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய டைவர்சிஃபைடு லார்ஜ்கேப் ஃபண்ட் அல்லது மல்ட்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இலக்கை நெருங்கும் சில ஆண்டுகளுக்கு முன் ஈக்விட்டி ஃபண்டிலிருக்கும் உங்கள் முதலீட்டை பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் அல்லது ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுக்கு மாற்றிக்கொள்வது பாதுகாப்பானது. அப்படி செய்யும்போது பங்குச் சந்தையின் இறக்கத்திலிருந்து முதலீட்டுத் தொகையைப் பாதுகாக்க முடியும்.”

உறுப்பு மாற்று சிகிச்சை... மருத்துவக் காப்பீட்டில் இழப்பீடு கிடைக்குமா?

அருள் முருகன், இ-மெயில் மூலம்.

உறுப்பு மாற்றம் செய்யும்போது ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் இழப்பீடு கிடைக்குமா, எது போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்குக் கிடைக்கும், இழப்பீட்டைக் கோரிப் பெறுவது எப்படி என விரிவாக விளக்குங்கள்.

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், www.vidurawealth.com

“இதய மாற்று அறுவைசிகிச்சை, சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்கள் அடிப்படைக் காப்பீட்டு திட்டங்களின் கீழ் வராது. இந்த நோய்களுக்கு, நீங்கள் தீவிரநோய் காப்பீடு என்று சொல்லப்படும் கிரிட்டிக்கல் இல்னஸ் இன்ஷூரன்ஸ் என்ற பாலிசி எடுக்க வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பல செலவுகள் கொண்டதாக இருக்கும். இவை நோய் கண்டறிதல், அதற்கான மருத்துவர் கட்டணம், விலை உயர்ந்த மருந்துகள், ஆம்புலன்ஸ் கட்டணம், செவிலியர் மற்றும் அறைக் கட்டணம் ஆகியவை அடங்கும்.

உடல்உறுப்பு மாற்று சிகிச்சையுடன்கூடிய மருத்துவக் காப்பீட்டு பாலிசியை நீங்கள் வாங்கினால், ஏற்படும் அனைத்துச் செலவுகளுக்கும் விரிவான கவரேஜ் இருக்கிறதா, இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்பைக் கண்டுபிடிக்க வேண்டும். இது நிறைய செலவினங்களை உள்ளடக்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய செலவுகள், மாற்று அறுவை சிகிச்சைக்காக கண்டறியப்பட்ட உறுப்புக்கான செலவு என பல செலவுகள் இருக்கின்றன.

தீவிர கண்காணிப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வழக்கமான சோதனையின்போது ஏற்படும் செலவுகள், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெறுநர் மற்றும் நன்கொடையாளர் இருவரின் நிலை கண்காணிக்கப்படுவதற்கான செலவுகள் அதிகம்.

அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிக்கல்களை சரி செய் வதற்கான செலவுகள், இந்த சிக்கல்களை சரிசெய்வது நீண்ட மற்றும் விலையுயர்ந்த செயல்முறையாகும். ஆகையால், தகுந்த இன்ஷூரன்ஸ் ஆலோசகரிடம் ஆலோசித்து சரியான பாலிசியைத் தேர்ந்தெடுப்பது மட்டும் இல்லாமல் க்ளெய்ம் கிடைப்பதற்கும் அவர் வழிகாட்டுவார்.”

யுவராஜ், இ-மெயில் மூலம்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது போர்ட் ஃபோலியோ வில் இருக்கும் பங்குகள் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு கிடைக்குமா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“ஒரு மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் பங்குகள் வழங்கும் டிவிடெண்டுகள் அந்த ஃபண்டின் முதலீட்டாளர் களுக்கு நேரடியாகவோ, உடனடியாகவோ செல்லாது. இத்தகைய டிவிடெண்டுகள் ஒரு ஃபண்டின் முதலீட்டுத் தொகையில் வரவு வைக்கப் பட்டு, அந்த தினத்தின் என்.ஏ.வி-யில் வெளிப்படும். அதாவது, அந்த ஃபண்டின் என்.ஏ.வி அதிகமாவதன் மூலம் அந்த ஃபண்டின் முதலீட்டாள ருக்கு லாபமாக வெளிப்படும்.

மற்றபடி ஃபண்டிலிருந்து வரும் டிவிடெண்ட் என்பது அந்த ஃபண்டின் நிர்வாகி எடுக்கும் தனிப்பட்ட முடிவு. அதற்கும், போர்ட்ஃபோலியோ பங்குகள் வழங்கும் டிவிடெண்டுகளுக்கும் தொடர்பில்லை.”