Published:Updated:

விவசாய நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்குமா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

விவசாய நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்குமா..?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கே.அய்யாசாமி, சென்னை

எட்டு மாடி அப்பார்ட்மென்டில் நான் ஐந்தாவது மாடியில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளேன். ஆனால், இந்தக் குடியிருப்பில் மொத்தம் ஆறு மாடி கட்டுவதற்குத்தான் பில்டர் அனுமதி வாங்கியிருக்கிறார். அனுமதி இல்லாமல் இரண்டு மாடி கட்டியிருக்கிறார். இந்த நிலையில், நான் ஐந்தாவது மாடியில் வீடு வாங்குவதால், பிற்காலத்தில் எனக்கு ஏதாவது பிரச்னை வர வாய்ப்பிருக்கிறதா?

கே.கவிராஜ், கட்டடவியல் வல்லுநர், டி.கே பிளானர்ஸ் & டிசைனர்ஸ், ஈரோடு

“அனுமதி இல்லாமல் பில்டர் கட்டிய மாடிகளை இடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடக்கும்போது ஐந்தாவது மாடியில் விரிசல் மற்றும் பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, அந்த வீட்டை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.”

காயத்ரி ஶ்ரீராம், இ-மெயில் மூலம்.

விவசாயம் செய்வதற்கு இடம் வாங்க வங்கிக் கடன் வாங்குவது எப்படி, இதில் ஏதாவது மானியம் இருக்கிறதா?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“விவசாயம் செய்வதற்கு விவசாய நிலம் வாங்க வங்கிகள் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் கடன் தருகின்றன. இது நிலத்தின் சந்தை மதிப்பு மற்றும் பத்திரப்பதிவு மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து 75% முதல் 85% வரை கடனாகத் தரப்படும். மேலும், தாங்கள் தற்போது செய்யும் தொழிலில் கிடைக்கும் வருமானம் மற்றும் புதிதாக மேற்கொள்ளப்படும் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

விவசாய உபகரணங்களை வாங்கவும், விவசாய பொருள்களை வாங்கவும் கடன் தரப்படுகிறது. விவசாயம் மூலம் வருமானம் எப்போது கிடைக்கும் என்பதைப் பொறுத்து, கடனைத் திரும்பச் செலுத்த ஆரம்பிக்கும் காலம் நிர்ணயிக்கப்படும்.

விவசாயம் செய்வதற்காகப் பல்வேறு மானியங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தரப்படுகிறது. விவசாய நிலம் வாங்குவதற்குப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசால் மானியம் வழங்கப்படுகிறது.”

விவசாய நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்குமா..?

வி.பூபால், பல்லாவரம்.

இந்தியப் பங்கு சந்தையில் வர்த்தகத்துக்கு முந்தைய சந்தை (Pre Open Market) எப்படிச் செயல் படுகிறது என்பதை சற்று விரிவாக விளக்கிச் சொல்ல முடியுமா?

தி.ரா.அருள்ராஜன், முதன்மை செயல் அதிகாரி, Ectra.in

“நம் நாட்டின் முன்னணி பங்குச் சந்தைகளான பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ-யில் ரெகுலர் மார்க்கெட் காலை 9.15 மணிக்கு தொடங்குகிறது. முதல் வியா பாரம் குறைவான வால்யூமில் முந்தைய நாள் முடிவு விலையைவிட மிக அதிகமான விலையிலோ, மிகக் குறைந்த விலையிலோ தொடங்கி, ஒரு தவறான வழிகாட்டுதலைக் காட்ட வாய்ப்பிருந்தது. மேலும், முந்தைய நாள் சந்தை முடிந்த பிறகு, நிகழும் பல்வேறு சந்தை அல்லது நிறுவனம் சார்ந்த காரணங்களால், மறுநாள் காலை தொடங்கும் விலை மிகப் பெரிய ஏற்ற இறங்கங்களுடன் தொடங்கி, பின்பு வழக்கமான வியாபார நிலைக்குத் திரும்பும். எனவே, காலை 9.15 மணிக்குத் தொடங்கும் விலை அதீத மாற்றங்கள் இல்லாமல் இருக்கவே, 2010-ம் ஆண்டில் இந்த ‘ப்ரீ ஓப்பன் மார்க்கெட்’ முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படை யில் காலை 9.00 முதல் 9.08 வரை வாங்க மற்றும் விற்க விரும்பு பவர்கள், தங்கள் ஆர்டரை போடலாம்.

பின் 9.08 முதல் 9.12 மணி வரை வாங்குபர்கள் மற்றும் விற்பவர் களின் விலையை ஒப்பிடப்பட்டு, பொருந்தி வரும் விலையைத் தேர்வு செய்யும். அதன்பின் 9.12 - 9.15 வரை காத்திருக்கும் நேரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, காலை 9.15-க்கு வழக்கமான வியாபாரம் தொடங்கும்.”

டாக்டர் சௌந்தரராஜ் நல்லசாமி, இ-மெயில் மூலம்.

நான் முதலீடு செய்திருக்கும் ஃபண்டின் வருமானம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால் எவ்வளவு காலத்துக்குப் பிறகு இந்த ஃபண்டிலிருந்து வேறு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்ற வேண்டும். விளக்கிச் சொல்லவும்.

கே.கவிராஜ், வி.தியாகராஜன், தி.ரா.அருள்ராஜன், எம்.கண்ணன், வி.ஶ்ரீனிவாசன்
கே.கவிராஜ், வி.தியாகராஜன், தி.ரா.அருள்ராஜன், எம்.கண்ணன், வி.ஶ்ரீனிவாசன்

எம்.கண்ணன், ஆலோசகர், radhaconsultancy.blogspot.com

“நீங்கள் முதலீடு செய்திருப்பது கடன் ஃபண்டா, ஈக்விட்டி ஃபண்டா என்று குறிப்பிடவில்லை. அது மிகவும் முக்கியம். கடன் ஃபண்ட் எனில், அதன் வருமானம் சற்றுக் குறைவாகவே இருக்கும். இந்த வருமானம் வங்கி வட்டியை விட அதிகம் இருந்தால், முதலீட் டைத் தொடரவும். ஆனால், ஈக்விட்டி ஃபண்டாக இருந்து, வருமானம் மிகவும் குறைவாக இருந்தால், அது ஆராயப்பட வேண்டிய விஷயமே. தற்போது சந்தை மிகவும் உச்சத்தில் இருப்பதால், ஈக்விட்டி வகை ஃபண்டுகளில் வருமானம் அதிகமாகவே இருக்கும்.

நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்டில் வருமானம் மிக மிகக் குறைவாக இருந்தால், அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயல வேண்டும். அதே வகையான ஃபண்டுகள் சந்தையில் குறைந்த வருமானம் கொடுத்துவந்தால், அதில் கவலைப்பட ஏதும் இல்லை. உங்களுக்கு அது போதும் எனில், அந்த ஃபண்டில் நீங்கள் முதலீட்டைத் தொடரலாம். அதே சமயம், நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்ட் வகையில், மற்ற ஃபண்டுகள் மிக அதிக வருமானம் தந்தால், ஏன் நமது ஃபண்ட் மட்டும் குறைந்த வருமானம் தருகிறது, எத்தனை வருடமாகக் குறைந்த வருமானம் தருகிறது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

மூன்று அல்லது நான்கு வருடங்கள் தொடர்ந்து குறைவாகவே வருமானம் வந்திருந்தால், அதைச் சற்று மாற்றிக்கொள்ளலாம். யோசித்து முடிவு செய்யவும். அவசரப்பட்டு அடிக்கடி ஃபண்டுகளை மாற்றுவதில் எந்தவித பலனும் இல்லை. தேவைப்பட்டால் நல்ல நிதி ஆலோசகரைக் கலந்து ஆலோசிக்கவும்.”

கமல் ராஜ், ஆலங்குளம்.

நான் என் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவையில் சில குளோபல் ஃபண்டுகளைச் சேர்க்க விரும்புகிறேன். நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய மூன்று ஃபண்டுகளைச் சொல்லவும்.

வி.ஶ்ரீனிவாசன், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், சீனு இன்வெஸ்ட்மென்ட்ஸ், திருவாரூர்.

“பொதுவாக, ஒருவரின் மியூச்சுவல் போர்ட்ஃபோலி யோவில் ரிஸ்க்கைக் குறைக்க குளோபல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அந்த வகையில், நீங்கள் பிஜிம் இந்தியா குளோபல் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் யூ.எஸ் ஆப்பச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஹெச்.எஸ்.பி.சி குளோபல் ஈக்விட்டி கிளைமேட் சேஞ்ச் ஃபண்ட், பி.என்.பி பரிபாஸ் அக்வா ஃபண்ட் ஆஃப் ஃபண்ட், கோட்டக் குளோபல் இன்னோவேஷன் ஃபண்ட் ஆகியவற்றில் மூன்று ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யவும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism