Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் என் மனைவியைச் சேர்க்க முடியுமா? வழிகாட்டும் நிபுணர்

Q & A கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி

ஜெயகுமார், விழுப்புரம்

நான் பல மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளைத் தொடங்க முடியுமா? என் மனைவியை இந்தக் கணக்குகளில் சேர்க்க முடியுமா?

அதில் ஷெட்டி, சி.இ.ஓ, Bankbazaar.com

“ஒருவர் எத்தனை மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளை (ஃபோலியோ) வேண்டுமானாலும் தொடங்கலாம். அதற்கு எந்தவொரு நிபந்தனையும் கிடையாது. உங்கள் பெயரில் ஒரு ஃபோலியோவைத் தொடங்கி உங்கள் மனைவியை இணை அக்கவுன்ட் ஹோல்டராகச் சேர்த்துக்கொள்ள முடியும். இதேபோல், உங்கள் மனைவி பெயரில் ஒரு ஃபோலியோவை தொடங்கி, உங்களை இணை அக்கவுன்ட் ஹோல்டராகச் சேர்த்துக் கொள்ள முடியும். இதை தனித் தனி வங்கிக் கணக்குகள் மூலமும் இணைக் கணக்குகள் மூலமும் மேற்கொள்ள முடியும். இப்படி இருக்கும்பட்சத்தில், தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு அசம்பாவிதம் நடந்து அவர் இல்லாதபட்சத்தில் மற்றவருக்கு முதலீட்டை எளிதில் மாற்றிக்கொள்ள முடியும். அதே நேரத்தில், முதல் அக்கவுன்ட் ஹோல்டருக்குத்தான் வரிச்சலுகை பலன்கள் கிடைக்கும். மூலதன ஆதாய வரி ஏதாவது கட்ட வேண்டும் என்றாலும், அவர்தான் கட்ட வேண்டும்.”

சௌமித்ரி ஆர், இ-மெயில் மூலம்

எனக்கு 40 வயது. 2011-ல் ரூ.40 லட்சத்துக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ஒன்றை வாங்கினேன். இந்த இடத்தை அடுத்த மாதம் ஒருவருக்கு ரூ.40.50 லட்சத்துக்கு விற்கப்போகிறேன். நான் நீண்டகால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டுமா?

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர், சென்னை

“இந்த விற்பனை நீண்டகால மூலதன ஆதாயத்தின்கீழ் வரும். மூலதன ஆதாயக் கணக்கீடு:

விற்பனை விலை: ரூ.40,50,000. பணவீக்கச் சரிக்கட்டலுக்குப் பிறகான வாங்கிய விலை (Indexed Purchase Cost) 40,00,000/184X310 = 67,39,130. மூலதன இழப்பு (40,50,000 - 67,39,130) = ரூ.26,89,130. வரி எதும் கட்ட வேண்டியதில்லை.”

மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் என் மனைவியைச் சேர்க்க முடியுமா? வழிகாட்டும் நிபுணர்

ஆர்.பாண்டியன், போருர், சென்னை

கோகோ பித் (Coco Pith) பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் அதிகமாக இருப்பதை அறிகிறேன். அவற்றை பிளாக்குகளாகச் செய்து ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் கிடைக்குமா? மேலும், எந்தெந்த நாடுகளில் இதன் தேவைகள் இருக்கிறது என்பதை விளக்கிச் சொல்லவும்.

அசோகன் ஆர் ராஜா, முன்னாள் துணை டைரக்டர் ஜெனரல், ஃபியோ (FIEO)

“கோகோ பீட் பிளாக் (Coco Peat Block) அல்லது காயர் பித் பிளாக் (Coir Pith Block) ஆகியவை பசுமை இல்லம் (Green house), மண் இல்லாமல் பயிரிடும் முறை (Hydroponic) ஆகிய விவசாய முறைகளிலும், நர்சரி மற்றும் தோட்டங்களில் தழைச்சத்து மற்றும் உரங்களில் பொடி யாகக் கலந்தும், காய்கனிகள் விளைச்சல் மற்றும் பூந்தோட்டங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நீரைத் தேக்கி வைக்கும் இதன் தன்மை குறைந்த அளவு நீர் உபயோகத்துக்கும், வேர்களுக்கு நன்கு நீர் பாய்ந்து விளையும் தாவரங் களுக்கும் நல்ல வளர்ச்சியைக் கொடுப்பதாகவும் உள்ளது. பண்ணைகளில் வளர்ப்புப் பிராணிகளுக்கு தரையாகவும், பேக்கேஜிங் (Packaging) செய்யவும் இது மிகவும் பயன்படுகிறது.

பொதுவாக, ஐந்து கிலோ எடையுள்ள காயர் பித் பிளாக்காக 42x42 எனும் அளவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தென்னையில் கிடைக்கும் துணைப் பொருள்களில் காயர் பித் பிளாக்குகள் ஏற்றுமதி மிக முக்கியமான பங்கை அளிக்கிறது. 2019-20-ல் மொத்த தென்னை துணைப் பொருள்கள் ஏற்றுமதி ரூ.2,750 கோடியில் இதன் ஏற்றுமதி ரூ.1,350 கோடியாக உள்ளது. ஏற்றுமதி வாய்ப்பும் பெருகி வருகிறது.

20 நாடுகளுக்கும் மேலாக காயர் பித் பிளாக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சந்தை வாய்ப்புள்ள முக்கிய நாடுகளாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, யு.கே மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மற்றும் பிற காமன் வெல்த் நாடுகள், சீனா, ஜப்பான் மற்றும் பிற ஆசிய நாடுகள், பிரேசில், மெக்சிகோ மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகள், சவுதி அரேபியா, யு.ஏ.இ போன்ற வளைகுடா மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவை உள்ளன.”

அதில் ஷெட்டி, கே.ஆர்.சத்யநாராயணன், அசோகன் ஆர் ராஜா, கே.கார்த்திக் ராஜா, அ.பானுமதி
அதில் ஷெட்டி, கே.ஆர்.சத்யநாராயணன், அசோகன் ஆர் ராஜா, கே.கார்த்திக் ராஜா, அ.பானுமதி

தி.கணேஷ், சென்னை

தற்போதைய விலையில் நான் செயில் நிறுவனப் பங்கில் முதலீடு செய்யலாமா? குறுகியகாலம் (மூன்று மாதம்) மற்றும் நீண்ட காலத்தில் (ஓராண்டுக்கு மேல்) லாபம் ஈட்டும் வாய்ப்புள்ளதா?

கே.கார்த்திக் ராஜா, செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட், Rupeedesk.in

“தற்போது செயில் பங்கு சுமார் ரூ.130 என்கிற நிலையில் வர்த்தமாகி வருகிறது. இந்த விலையானது குறுகிய காலம் மற்றும் நீண்டகாலத்துக்கு அதிகமான விலை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், தற்போதைய விலையில் முதலீடு செய் வதைத் தவிர்ப்பது நல்லது. நீண்டகால முதலீட்டுக்கு பங்கின் விலை இறக்கத்துக்குக் காத்திருக்கலாம். பங்கின் விலை ரூ.95-100 என்கிற அளவுக்கு இறங்கி வரும்போது வாங்கினால் லாபம் பார்க்க முடியும்.”

கிருஷ்ணராஜா, ராஜபாளையம்,

நான் தற்போது வாங்க விருக்கும் பூர்வீகச் சொத்தானது, இரண்டு நபர்களுக்கு சொந்தமான தாகும். இரண்டாவது நபர் வெளிநாட்டில் வசித்துவருகிறார். கொரோனா காரணமாக அவரால் நாடு திரும்ப முடியவில்லை. இப்போது அந்தப் பூர்வீகச் சொத்தை எந்தவித சட்டப் பிரச்னையும் இல்லாமல், வாங்குவது எப்படி?

அ.பானுமதி, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், மதுரை.

“மேற்படி பூர்வீகச் சொத்தை வாங்கும்போது, இரண்டு நபர்களின் கையொப்பம் அவசியமானது ஆகும். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையால் அவரால் வர இயலாத காரணத்தால், வெளிநாட்டில் உள்ள நபர், இந்தியாவில் இருக்கும் அவரது குடும்ப உறுப்பின ருக்கோ, நண்பருக்கோ ‘பவர் ஆஃப் அட்டர்னி’ எழுதி அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் சான்றளிப்பு (Attestation)) பெற்று அதன் மூலம் மேற்படி பூர்வீகச் சொத்தை வாங்கலாம்.

வெளிநாட்டில் உள்ள அந்த நபர் விடுதலைப் பத்திரம் (Relinquishment Deed) எழுதி அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் சான்றளிப்பு பெற்று அதன் மூலமும் மேற்படி பூர்வீகச் சொத்தை நீங்கள் வாங்கலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு