Published:Updated:

ஓய்வுக்காலம்... சிறந்த முதலீடு எது..?

ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலம்

கேள்வி - பதில்

ஓய்வுக்காலம்... சிறந்த முதலீடு எது..?

கேள்வி - பதில்

Published:Updated:
ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலம்

அருண் குமார், அறந்தாங்கி.

என் வயது 30. நான் என் ஓய்வுக் காலத்துக்கு ஆக்டிவ் ஃபண்ட் அல்லது பேசிவ் ஃபண்ட் எதில் முதலீடு செய்வது? சில ஃபண்டுகளை முதலீட்டுக்குக் குறிப்பிடவும்.

ஓய்வுக்காலம்... சிறந்த முதலீடு எது..?

சி.குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், நாமக்கல்.

“ஆக்டிவ் வகை பங்குச் சந்தை ஃபண்டுகளை ஃபண்ட் மேனேஜர்கள் திறம்பட நிர்வகிப்பதால், நீண்ட காலத்தில் பெஞ்ச்மார்க் குறியீட்டை விட மேலான வருமானம் தந்து வருகின்றன. ஆனால், பேசிவ் வகை ஃபண்டுகளில் பங்குச் சந்தை குறியீட்டில் உள்ள பங்குகளின் விகிதாசாரப்படியே முதலீடு மேற் கொள்ளப்படுவதால் வருமானமும் குறியீட்டை ஒட்டியே இருக்கும். இந்த பேசிவ் ஃபண்டில் ஃபண்ட் மேனேஜர்களின் பணி பெரிய அளவில் தேவைப்படுவதில்லை.

உங்களின் ஓய்வுக்காலத்துக்காக நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்ய முடியும் என்பதால், ஆக்டிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம். ஓர் ஆலோசகரின் உதவியுடன் உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப ஃபண்டுகளைத் தேர்வு செய்வது நல்லது. ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட், கனரா ராபிகோ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட், கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்ட், நிப்பான் இந்தியா மல்ட்டிகேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் போன்றவற்றை பரிசீலனை செய்யலாம்.”

குணசீலன், அடையாறு, சென்னை.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது வெய்வர் ஆஃப் பிரீமியம் ரைடரையும் சேர்த்து எடுக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்?

என்.சத்யமூர்த்தி, சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், Ruwise.in

“டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் சில துணை பாலிசிகள் என்கிற ரைடர்களைக் கூடுதலாக பிரீமியம் செலுத்தி எடுத்துகொள்ள முடியும். அவற்றுள் வெய்வர் ஆஃப் பிரீமியம் ரைடர் (Waiver of Premium rider) முக்கியமாக எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

இந்த ரைடரை எடுத்துகொண்ட பாலிசிதாரருக்கு விபத்து காரணமாகச் செயல்பட முடியாமை அல்லது மிகப் பெரிய அளவில் பாதிப்பு (Disability or Critical illness) ஏற்பட்டால் மீதமுள்ள ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், இந்த வகை ரைடர்களுக்கு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களைவிட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பிரீமியம் சற்று அதிகமாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.”

வி.சந்திரசேகரன், இ-மெயில் மூலம்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை டெக்னிக்கல் அனாலிசிஸ் மூலம் தேர்வு செய்ய முடியுமா? அதற்கான இணைய தளம் ஏதாவது இருக்கிறதா?

த.முத்துகிருஷ்ணன், சர்ஃடிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர்.

“மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்டுகள் நிறுவனப் பங்கு போன்றதல்ல. அதனால், அவற்றைத் தொழில்நுட்ப பகுப்பாய்வுக்கு (Technical analysis) உட்படுத்த முடியாது. மியூச்சுவல் ஃபண்டுகளை ஃபண்டமென்டல்களின் அடிப்படையில் மட்டுமே பகுப்பாய்வு செய்ய முடியும்.

மியூச்சுவல் ஃபண்டுகளின் ஃபண்டமென்ட்ல் பகுப்பாய்வை https://www.valueresearchonline.com/ மற்றும் https://www.morningstar.in/ இணையதளங்கள் மேற்கொண்டு வருகின்றன.”

சி.குமார், என்.சத்யமூர்த்தி, த.முத்துகிருஷ்ணன்,  சி.பாரதிதாசன், லலிதா ஜெயபாலன், ஜி.கே.சீனிவாஸ், தி.ரா.அருள்ராஜன்
சி.குமார், என்.சத்யமூர்த்தி, த.முத்துகிருஷ்ணன், சி.பாரதிதாசன், லலிதா ஜெயபாலன், ஜி.கே.சீனிவாஸ், தி.ரா.அருள்ராஜன்

தியாகராஜன் கோவிந்தராஜன், இ-மெயில் மூலம்

என்னிடம் ரூ.10 லட்சம் உள்ளது. முதலீட்டுக் காலம் 5 முதல் 10 ஆண்டுகள். எனக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 - 18% வருமானம் வரும்படியான முதலீட்டுத் திட்டங்களைப் பரிந்துரை செய்யவும்.

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com

“ஐந்து ஆண்டுகளுக்குள் தேவைப்படும் தொகையை டைவர்சிஃபைடு புளூசிப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இந்த ஃபண்டுகள் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்படும் தொகையை மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகள் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 15% லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.”

என் சித்ரா தேவி, கன்னியாகுமரி

வயது 39. நான் எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.2,000 முதல் ரூ.4,000 முதலீடு செய்ய விரும்பு கிறேன். முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகள். எதில் முதலீடு செய்யலாம்?

லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், MoneyVedam.com

“முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுக்குள் இருப்பதால், அதிக ரிஸ்க் எடுக்க முடியாது. நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் எனில், ஆதித்ய பிர்லா சன் லைஃப் கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம். இதுவே, நீங்கள் ஓரளவுக்கு ரிஸ்க் எடுப்பவர் எனில் யூ.டி.ஐ நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம்.”

தசரதன், இ-மெயில் மூலம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டி லிருந்து சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) முறையில் பணம் எடுக்கும்போது, வருமானத்துக்கு வருமான வரி டி.டி.எஸ் (TDS) பிடிக்கப்படுமா?

ஜி.கே.சீனிவாஸ், ஆடிட்டர் கோவை.

“மியூச்சுவல் பண்ட் முதலீட்டி லிருந்து யூனிட்டுகளை விற்று பணம் எடுக்கும்போது, அது குறுகிய கால முதலீடு அல்லது நீண்ட கால முதலீடு எதுவாக இருந்தாலும், மூலத்தில் வருமான வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்) இருக்காது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின்மூலம் கிடைக்கும் குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயம் வருமான வரிக்கு உட்பட்டது என்றாலும் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு டி.டி.எஸ் பிடிக்கப்படுவதில்லை. இது என்.ஆர்.ஐ-களுக்கு மட்டுமே பிடிக்கப்படும்.”

பாலசுப்ரமணியன், சேலையூர்.

பங்குச் சந்தை முதலீட்டில் மார்ஜின் ஆஃப் சேஃப்டி என்பது குறித்து விளக்கிச் சொல்ல முடியுமா?

தி.ரா.அருள்ராஜன், முதன்மை செயல் அதிகாரி, Ectra.in

“மார்ஜின் ஆஃப் சேஃப்டி (Margin of Safety) என்பது பங்குச் சந்தை அடிப்படை பகுப்பாய்வு (ஃபண்டமென்டல் அனாலிசிஸ்) செய்யும்போது உபயோகப்படுத்தப்படும் வார்த்தை ஆகும்.

ஒரு நிறுவனப் பங்கை ஆராயும்போது, அதன் நிதி ஆதார அடிப்படையில் ஆய்வு செய்து, அதன் அடுத்த வருட நியாயமான விலை நிர்ணயிக்கப்படும். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் விலையைக் குறைத்து, இப்போது வாங்கக்கூடிய விலையை நிர்ணயம் செய்வார்கள். இவ்வாறு அடுத்த வருட நியாயமான விலையிருந்து தள்ளுபடி செய்து கொண்டு வரப்படும் விலையானது, தற்போதைய சந்தை விலையைவிட குறைவாக இருக்கும்.

ஆகவே, இப்படிப்பட்ட குறைந்த விலையில் வாங்குவது என்பது பாதுகாப்பானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அடிப்படையில், இந்த விலையை மார்ஜின் ஆஃப் சேஃப்டி என்று அழைக்கிறார்கள்.”