Published:Updated:

பொருளாதார நெருக்கடி: மத்திய அரசு செய்யவேண்டியவை என்னென்ன?

விகடன் டீம்

ஆடம்பரமான பொருள்களுக்கு 18% வரி விதித்தால் எந்தத் தவறும் இல்லை. ஆனால், லாரிகளோ, பஸ்களோ அல்லது இருசக்கர வாகனங்களோ ஆடம்பரமானவை அல்ல;

Economic Crisis
Economic Crisis

கடந்த சில நாள்களாக செய்தித்தாள்களைத் திறந்தாலே, 'இன்று ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு', 'மாதத்துக்கு பத்து நாள்கள் உற்பத்தி நிறுத்திவைப்பு' என்கிற செய்திகளைப் படிப்பது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. சரி, மத்திய அரசு உடனடியாக என்ன செய்ய வேண்டும்? https://bit.ly/2Ho46i8

வட்டிவிகித மாற்றங்கள்:

வட்டி விகிதக் குறைப்பு நுகர்வோர் விருப்பத்தைத் தூண்டக்கூடியவை என்பதால் மத்திய வங்கி தன் பங்கிற்கு வட்டி விகிதங்களை அதிரடியாகக் குறைத்துவருகிறது. மேலும், வட்டிவிகிதக் குறைப்பு, தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவினத்தைக் குறைத்து சர்வதேச அரங்கில் திறம்படப் போட்டியிட உதவும். ஆனால், மத்திய வங்கியின் வட்டிக் குறைப்பானது நுகர்வோரை முழுமையாகச் சென்றடைய வேண்டும்.

கொள்கை சீர்திருத்தங்களின் அவசியம்:

எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை அதிகமாக உள்ள தற்போதைய சூழ்நிலையில், பொருளாதாரத் தேக்கநிலையை முடிவுக்குக் கொண்டுவர நம்மிடம் உள்ள ஒரே வழி, அதிரடியான கொள்கைச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதுதான். வாஜ்பாய் அரசிற்குப் பிறகு (சிலவற்றைத் தவிர) முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனும் இதையே வலியுறுத்தியிருக்கிறார்.

Economic Crisis
Economic Crisis

தாராளமயப் பொருளாதாரம், பணியாளர் சட்டத் திருத்தங்கள், வங்கிச் சீரமைப்பு, ஏற்றுமதி ஊக்குவிப்பு, எளிமையான வரி விதிமுறைகள், தொழில் முனைவுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது, ஒற்றைச் சாளர அனுமதிகள் எனப் பல முக்கியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும்போது சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் இந்தியாவை நோக்கி இன்னும் அதிகமாக ஈர்க்கப்பட நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக, உள்நாட்டு அரசியல் சிக்கல்கள் மற்றும் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள சீனா உருவாக்கவுள்ள வெற்றிடத்தை இந்தியா திறம்பட அணுகி, அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும். மத்திய அரசாங்கம் தனக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்றப் பெரும்பான்மையைச் சரியாகப் பயன்படுத்தி, பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் நமது பொருளாதார தேக்கநிலையும் முடிவுக்கு வரும்.

வட்டிவிகிதக் குறைப்பு, தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவினத்தைக் குறைத்து சர்வதேச அரங்கில் திறம்படப் போட்டியிட உதவும்.

ஆட்டோ ஜி.எஸ்.டி... "12% ஆகக் குறைக்க வேண்டும்!''

"இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு முக்கியமான காரணம், ஆட்டோமொபைல் துறை கடுமையாகப் பாதிக்கப் பட்டிருப்பதுதான். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. கனரக வாகனங்களான லாரி மற்றும் பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங் களுக்கான உதிரிபாகங்களுக்கு ஜி.எஸ்.டி வரி 18% விதிக்கப்படுகிறது. ஆடம்பரமான பொருள்களுக்கு 18% வரி விதித்தால் எந்தத் தவறும் இல்லை. ஆனால், லாரிகளோ, பஸ்களோ அல்லது இருசக்கர வாகனங்களோ ஆடம்பரமானவை அல்ல; இன்றைய வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை. ஆட்டோ உதிரிபாகங்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதால், அதிக விலைக்கு விற்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். எனவே, ஆட்டோ உதிரி பாகங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 12 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்" என்கிறார் கோவை ஆர்.எஸ்.எம். ஆட்டோகேஸ்ட் இயக்குநர் இளங்கோ.

- பொருளாதார மந்தநிலைக்கான ஆறு காரணங்கள் மற்றும் 2008-ல் எப்படிச் சமாளித்தோம்? என்பதை நாணயம் விகடன் இதழின் கவர் ஸ்டோரி மூலம் அறிய > பொருளாதார மந்தநிலை... என்ன காரணம், என்ன தீர்வு? https://www.vikatan.com/news/general-news/the-economic-recession-what-is-the-cause-and-what-is-the-solution

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/