Published:Updated:

ELSS Fund: வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் யாருக்கு ஏற்றவை?

ELSS Fund
ELSS Fund

பணத் தேவை இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், விட்டு வையுங்கள். பொதுவாக, பங்கு சார்ந்த திட்டங்கள் நல்ல வருவாயைத் தருவதற்குக் குறைந்தது 7 - 10 ஆண்டுகளாவது ஆகும்: ELSS Fund

`மியூச்சுவல் ஃபண்டில் முதன்முதலாக முதலீடு செய்பவர்களுக்கு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்தான் ஏற்றவை' என்கிறான் என் நண்பன். விளக்க முடியுமா?

- இந்திரக் குமார், கடையநல்லூர்

"இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முக்கியக் காரணம், வரிச் சேமிப்பு. உதாரணமாக, நீங்கள் 30% வரி வரம்பில் இருந்தால், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யும் போதே 45,000 ரூபாயைச் சேமித்துவிட்டீர்கள். ஆக முதலீட்டிலிருந்து உங்களுக்கு வருமானம் வருகிறதோ இல்லையோ, வரிச் சேமிப்பே முதல் சேமிப்பாகிவிடுகிறது. ஆகவே, நிறைய முதலீட்டாளர்கள் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீட்டை விருப்பத்துடன் முதலீடு செய்வார்கள்.

மேலும், ஒருவர் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் முதன்முதலாகச் சேமிக்க அல்லது முதலீடு செய்யச் செல்வது, வரியைச் சேமிக்கத்தான். ஆகவேதான் உங்கள் நண்பர் அவ்வாறு கூறியுள்ளார். மேலும், இ.எல்.எஸ்.எஸ் ஒரு டைவர்சிஃபைடு ஃபண்ட் மற்றும் மூன்று ஆண்டுகள் லாக்-இன் கொண்டிருப்பதால், அது முதன்முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது."

நான் வரிச் சேமிப்புக்காக லார்ஜ்கேப் பங்குகளில் அதிக முதலீடு செய்யும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளேன். தற்போதைய நிலையில், அந்தப் பிரிவிலுள்ள சிறந்த ஃபண்டைப் பரிந்துரைக்கவும்.

  • - சாருமதி, இ-மெயில் மூலம்

ELSS Fund: வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் யாருக்கு ஏற்றவை?

வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள்..! - சந்தேகங்கள்... தீர்வுகள்! https://bit.ly/3eDNkdj

"ஆக்ஸிஸ் லாங்டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், கனரா ராபிகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட், இன்வெஸ்கோ இந்தியா டாக்ஸ் பிளான், பி.என்.பி பரிபா லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட். இங்கு தரப்பட்டுள்ள நான்கு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளும் 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக லார்ஜ்கேப் பங்குகளைத் தங்களது போர்ட்ஃபோலியோவில் வைத்திருப்பதுடன் நல்ல செயல்பாட்டையும் கொண்டுள்ளன. அவற்றில் ஏதாவது ஒரு ஃபண்டை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்."

இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் முதலீட்டை அதன் லாக்- இன் காலம் முடிந்தவுடன் எடுத்துவிட வேண்டுமா?

- விவேகானந்த், குத்தாலம்

"பணத் தேவை இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், விட்டு வையுங்கள். பொதுவாக, பங்கு சார்ந்த திட்டங்கள் நல்ல வருவாயைத் தருவதற்குக் குறைந்தது 7 - 10 ஆண்டுகளாவது ஆகும். அதிக காலம் விட்டுவைக்கும் வரை நல்லது. இது இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களுக்கும் பொருந்தும்.''

- கேளுங்கள், பதில் கிடைக்கும் பகுதியில், வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் (இ.எல்.எஸ்.எஸ்) குறித்த நாணயம் விகடன் வாசகர்களின் சந்தேகங்களுக்கு ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com) நிறுவனத்தின் டைரக்டர் சொக்கலிங்கம் பழனியப்பன் அளித்த விளக்கங்களின் சிறு பகுதி இது.

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம்.

குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV
அடுத்த கட்டுரைக்கு