Published:Updated:

அவசரத் தேவைக்கான பணத்தை அதிக ரிஸ்க் திட்டங்களில் போடாதீர்கள்!

கிரிப்டோகரன்சி
பிரீமியம் ஸ்டோரி
கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

அவசரத் தேவைக்கான பணத்தை அதிக ரிஸ்க் திட்டங்களில் போடாதீர்கள்!

கிரிப்டோகரன்சி

Published:Updated:
கிரிப்டோகரன்சி
பிரீமியம் ஸ்டோரி
கிரிப்டோகரன்சி

மகள் திருமணத்துக்காகச் சேர்த்து வைத்த ரூ.10 லட்சத்தை கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் மும்பை வியாபாரி ஒருவர் இழந்துள்ளார். இந்த வியாபாரியின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக, அவர் ரூ.10 லட்சம் சேர்த்து வைத்து உள்ளார். இந்த நிலையில், அதிக லாபம் கிடைக்கும் என நினைத்து, அவர் அந்தப் பணத்தை கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் போட்டிருக்கிறார். ஆனால், வர்த்தகத்தில் ரூ.10 லட்சத்தையும் இழந்துள்ளார்.

பொதுவாக, நம்மிடம் இருக்கும் பணம் குறுகிய காலத்தில் தேவைப்படும் என்கிற போது, அதை ரிஸ்க் உள்ள முதலீடுகளில் போடக் கூடாது. உதாரணமாக, பங்குச் சந்தை, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறுகிய காலத்தில் அதிக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது என்பதால், அதில் முதலீடு செய்யக் கூடாது என நிதி ஆலோசகர்கள் அடிக்கடி அறிவுறுத்தி வருகிறார்கள்.

அவசரத் தேவைக்கான பணத்தை 
அதிக ரிஸ்க் திட்டங்களில் போடாதீர்கள்!

பங்குச் சந்தை, ஈக்விட்டி ஃபண்டைவிட பல அதிக ரிஸ்க் கொண்டது கிரிப்டோகரன்சி. இதுவரைக்கும் இந்தியாவில் கிரிப்டோகரன்சி ஒழுங்குபடுத்தப்படவில்லை. மேலும், அதன் வர்த்தக நுட்பம் நம்மவர்களுக்கு இன்னும் புரியவில்லை. இந்த நிலையில், ஓரிரு மாதங் களில் மகளின் திருமணத்தை வைத்துக்கொண்டு அதிக லாபம் கிடைக்கும் என கிரிப்டோ கரன்சியில் பணத்தைப் போட்டிருக்கக் கூடாது.

பொதுவாக, குறுகிய காலத் தேவைக்கு (ஒரு மாதம் முதல் ஓராண்டு வரைக்கும்) என வைத்திருக்கும் பணத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது மியூச்சுவல் ஃபண்டில் லிக்விட் ஃபண்ட் போன்ற ரிஸ்க் இல்லாத மற்றும் உடனடியாகப் பணமாக்கக்கூடிய முதலீடுகளில் போட்டு வைப்பதுதான் சரி.

மும்பை வியாபாரியின் பண இழப்பு நமக் கெல்லாம் ஒரு பாடமாக இருக்கட்டும். குறுகிய காலத்தில் தேவைப்படும் பணத்தைக் கொண்டு ரிஸ்க் எடுத்து, இப்படி செய்யக் கூடாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism