Published:Updated:

பங்குச் சந்தை டிரேடிங் சந்தேகங்கள்..! - சரியான தீர்வுகள்..!

அருள்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
அருள்ராஜன்

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

பங்குச் சந்தை டிரேடிங் சந்தேகங்கள்..! - சரியான தீர்வுகள்..!

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

Published:Updated:
அருள்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
அருள்ராஜன்
பங்குச் சந்தை டிரேடிங் குறித்து வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் பங்கு மற்றும் கமாடிட்டிச் சந்தை நிபுணரான அருள்ராஜன்.

பங்குச் சந்தை முதலீட்டில் புக் பிராஃபிட் (Book Profit) என்றால் என்ன... இதற்கான உத்தி இருக்கிறதா?

- நாகங்குடி ஹாஜி, முகநூல் மூலம்

‘‘பங்குச் சந்தையில் ‘புக் பிராஃபிட்’ என்றால் ஏற்கெனவே குறைந்த விலையில் வாங்கி வைத்திருப்பவர்கள், விலை உயரும்போது விற்று லாபத்தை வெளியே எடுப்பதைக் குறிக்கும். முதலில், குறைந்த விலையில் வாங்கும் உத்தி தெரிய வேண்டும். அதேபோல், பங்கின் விலை ஏறும்போது விற்று லாபம் எடுப்பதற்கும் உத்தி தெரிய வேண்டும். பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் மற்றும் டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்திருக்க வேண்டும். அதில் தேர்ந்தவர்கள், அதன் அடிப்படையில் தங்களுக்கான முதலீட்டு உத்தியை உருவாக்கி, லாபம் ஈட்டுவார்கள்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

‘பங்குகளில் டிரேட் செய்தால், நிச்சயம் இழப்புதான். அந்தப் பக்கமே போகாதே...’ என்கிறான் என் நண்பன். இது எந்த அளவுக்கு உண்மை?

- ஏ.தனசேகர், கோயம்புத்தூர்

‘‘பங்குகள் என்றல்ல, நீங்கள் மளிகைக்கடை வைத்து நடத்துவதாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி நெளிவுசுளிவுகளை அறிந்திருந்தால் மட்டுமே அந்தத் துறையில் வெற்றியடைய முடியும். இல்லையென்றால், எந்த வியாபாரம் செய்தாலும் அதில் வெற்றி கிட்டாது. அதைப்போலவே, பங்குச் சந்தையில் டிரேட் செய்வதாக இருந்தால், அதைப் பற்றிய நெளிவுசுளிவுகளைத் தெரிந்து, அறிந்து செய்ய வேண்டும். ஆகவே, இந்த நுணுக்கம் தெரியாத பெரும்பான்மையானவர்கள் இழப்பையும், தெரிந்த சிலர் நல்ல லாபத்தையும் அடைகிறார்கள்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு கம்பெனி பங்கை விற்பதற்கு அதிக அளவில் ஆட்கள் இருந்தும், குறைந்த அளவில் வாங்குவதற்கு ஆட்கள் இருக்கும் நிலையில் அந்தப் பங்கின் விலை குறையத்தானே வேண்டும்... ஆனால், விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. இதற்கு என்ன காரணம்?

- டி.ரவீந்திரன், பழவந்தாங்கல் சென்னை 114

‘‘இந்தக் கேள்வியில் எந்த நிறுவனம், எந்த மாதியான சூழலில் நடந்தது என்று சொல்லாமல், பொதுவாகக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதற்கு உத்தேசமாக ஒரு பதில் கூற வேண்டுமானால், விற்கும் ஆட்கள் அதிகம் இருக்கலாம். ஆனால், விற்கப்படும் பங்குகள் குறைவாக இருந்து, குறைவான ஆட்கள் அதிகமான பங்குகளை வாங்கினால் விலை ஏறத்தான் செய்யும்.’’

அருள்ராஜன்
அருள்ராஜன்

நான் டி.வி.எஸ்., ஐ.டி.சி பங்குகளில் நீண்டகாலத்துக்கு முதலீடு செய்திருக்கிறேன். இது சரியா?

- என்.ஆனந்தன், இ-மெயில் மூலம்

‘‘தற்போது ஆட்டோமொபைல் துறை பெரிய சறுக்கலில் உள்ளது. ஐ.டி.சி நிறுவனம் தங்கள் சிகரெட் வியாபாரத்தில் ஒரு பகுதியை போட்டி நிறுவனங்களிடம் இழந்துவிட்டது. இதன் அடிப்படையில் இந்த நிறுவனப் பங்குகளின் வலிமை சற்று குறைந்திருக்கிறது. இருந்தாலும், பெரும் இறக்கங்கள் வரும்போது பகுதி பகுதியாக இந்தப் பங்கை வாங்கலாம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிமார்ட் (Dmart) பங்கு விலை கணிசமாக அதிகரித்திருந்தாலும் எந்த டிவிடெண்டும் அறிவிக்கவில்லை. ஏன் என்பதை விளக்க முடியுமா... இந்தப் பங்கில் முதலீடு செய்ய இது சரியான நேரமா?

பாலாஜி நந்தக்குமார், இ-மெயில் மூலம்

‘‘ஒரு நிறுவனம் நல்ல லாபம் சம்பாதிக்கும்போது, அந்த லாபத்தின் ஒரு பகுதியை டிவிடெண்டாகக் கொடுக்கும். ஒருவேளை அந்த நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, அந்தப் பணமும் தேவைப்படும் என்ற நிலை வந்தால், டிவிடெண்ட் கொடுப்பதற்கு பதிலாக, அந்தப் பணத்தை மறுமுதலீடு செய்யும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. அந்த வகை முதலீடுகள், நிறுவனத்தை இன்னும் பலப்படுத்தி, இன்னும் அதிக லாபத்தைச் சம்பாதிக்கும். அப்போது, பங்கின் விலையும் ஏறும். இது முதலீட்டாளர்களுக்கு லாபமே. டிமார்ட் நிறுனவமும் அந்த வகையைச் சார்ந்ததாக இருக்கலாம். இந்தப் பங்கு வலிமையான ஏற்றத்திலுள்ள நிலையில், எப்போது இறங்கி ரூ.2,090 என்ற விலைக்கு வந்தாலும் முதலீடு செய்வது நல்லது.’’

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

பங்குச் சந்தை குறித்த படிப்புகள் என்னென்ன இருக்கின்றன... அவற்றை எங்கு படிக்கலாம்?

- எஸ்.சிவராமகிருஷ்ணன், மதுரை

‘‘பங்குச் சந்தை சார்ந்த கல்வியாக செபியின் துணை நிறுவனமான என்.ஐ.எஸ்.எம் (NISM) மற்றும் தேசியப் பங்குச் சந்தையின் துணை நிறுவனமாக என்.எஸ்.இ அகாடமி (NSE Academy) போன்றவை பல்வேறு பாடத் திட்டங்களை நடத்துகின்றன. நாணயம் விகடன் இதழும் எளிய தமிழில் பல்வேறு வகையான பங்குச் சந்தை தொடர்பான பயிற்சி வகுப்புகளை நிபுணர்களைக் கொண்டு நடத்திவருகிறது. அதிலும் நீங்கள் பங்கு பெறலாம்.’’

எம்.ஆர்.எஃப் பங்கின் விலை மிக அதிகமாக உள்ளது. அதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

- கே.வீராச்சாமி, கண்டிகை

‘‘ஒரு பங்கை அதன் விலையைக் கொண்டு அதிகமாக உள்ளது அல்லது குறைவாக உள்ளது என்று மதிப்பிடக் கூடாது. அந்த நிறுவனத்தின் வியாபாரமும் லாபமும் இன்னும் அதிகரிக்குமா என்றே பார்க்க வேண்டும். இதே எம்.ஆர்.எஃப் பங்கு ஏப்ரல் 2018-ல் ரூ.81,000 என்ற விலையில் இருந்தது. தற்போது வாகனச் சந்தையின் வளர்ச்சி குறைந்திருப்பதால், ரூ.62,000 என்ற விலையில் உள்ளது. எப்போதாவது ரூ.54,000 என்ற விலைக்கு வந்தால் வாங்கலாம்.’’

பங்குகளின் விலையை ஆபரேட்டர்கள்தான் நிர்ணயம் செய்கிறார்களா?

- சிவகுமரன், திருச்சி-1

‘‘பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளின் விலையை, சந்தையில் பங்களிப்பவர்கள் அதாவது, வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் நிர்ணயம் செய்கிறார்கள். இதில், அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்.ஐ.ஐ-க்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், பெரு முதலீட்டாளர்கள்) அவ்வப்போது அதிக எண்ணிக்கையில் வாங்குவது மற்றும் விற்பது மூலமே விலை கூடுவதும் குறைவதும் நடக்கிறது. `இதுதான் விலை’ என்று யாரும் நிர்ணயிப்பதில்லை.

சுருக்கமாகச் சொன்னால், டிமாண்ட் அண்ட் சப்ளையைப் பொறுத்துதான் விலை ஏறுவதும் இறங்குவதும் இருக்கிறது. இதில், ஆபரேட்டர்கள் என்ற பங்குகளின் விலையைச் செயற்கையாக ஏற்றுபவர்களின் பங்களிப்பு ஒரு சிறு பகுதியாக இருக்கும். இந்த ஆபரேட்டர்கள் அனைத்து நிறுவனப் பங்குகளிலும் இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது.’’

பங்கு முதலீட்டுக்கான டீமேட் கணக்கு, ஷேர் டிரேடிங் கணக்கு விளக்க முடியுமா?

- கமலேஷ், பெங்களூரு

‘‘நீங்கள் பங்குச் சந்தையில் ஈடுபட வேண்டுமானால், இரண்டுவிதமான கணக்கைத் தொடங்குவீர்கள். ஒன்று, பங்குகளை வாங்கி விற்கப் பயன்படுத்தும் டிரேடிங் அக்கவுண்ட். மற்றது, இவ்வாறு வாங்கிய பங்குகளை வைத்திருக்க உதவும் மின்னணுக் கணக்கு - டிமேட் கணக்கு. இது வங்கிக் கணக்குபோல் செயல்படும். பங்குகளை வாங்கினால், அது டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். விற்றால், டிமேட் கணக்கிலிருந்து வெளியேறும்.’’

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

சொக்கலிங்கம் பழனியப்பன்
சொக்கலிங்கம் பழனியப்பன்

வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் குறித்த கேள்விகளுக்கு மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன் (டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் - www.prakala.com) பதிலளிக்கிறார்.

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism