Published:Updated:

`30 வயதில் இதைச் செய்யுங்க; 60 வயதில் நீங்க கோடீஸ்வரர்!' - நிபுணர்கள் சொன்ன முதலீட்டு சூட்சுமம்

``கொரோனா பாதிப்பு நம்மை இணையத்தை அதிகம் பயன்படுத்தப் பழக்கியிருக்கிறது. அந்த வகையில், ஆன்லைனில் முதலீட்டை மேற்கொள்வது வசதியானதாக மாற்றி இருக்கிறது".

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அண்மைக் காலத்தில் அதிகமானோர் புதிதாக நவீன முதலீடுகளான பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நாணயம் விகடன் மற்றும் Alice Blue இணைந்து `பங்குகள், ஐ.பி.ஓ, மியூச்சுவல் ஃபண்ட்: ஆன்லைனில் எளிதாக முதலீடு செய்வது எப்படி?' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தின. இதில், நிதி ஆலோசகர் விவேக் கார்வா (Vridhiinvestment.in), அலைஸ் புளு நிறுவனத்தின் இயக்குநர் கே.ராஜேஷ் ஆகியோர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலோசகர்கள்
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலோசகர்கள்
அக்டோபர் 1 முதல் `ஆட்டோ டெபிட்' முறையில் புதிய கட்டுப்பாடுகள்; யாருக்கு என்ன பாதிப்பு?

``கொரோனா பாதிப்பு நம்மை இணையத்தை அதிகம் பயன்படுத்தப் பழக்கியிருக்கிறது. அந்த வகையில், ஆன்லைனில் முதலீட்டை மேற்கொள்வது வசதியானதாக மாற்றி இருக்கிறது" என்று குறிப்பிட்ட கே.ராஜேஷ், நிறுவனப் பங்குகள் குறிப்பாக புதிய வெளியீடுகள், மியூச்சுவல் ஃபண்ட்களில் குறிப்பாக என்.எஃப்.ஓகளில் ஆன்லைனில் எப்படி முதலீடு செய்வது என்பதை செய்முறை பயிற்சியாக செய்து காட்டினார்.

விவேக் கார்வா பேசும்போது, ``முதலீடு செய்வதற்கான சரியான நாள் என்பது நேற்றாகும். அது முடிந்துவிட்டது. அதற்காக கவலைப்பட வேண்டாம். அதற்கு அடுத்த நாள்கள் இன்றும் நாளையும் ஆகும். எனவே, முதலீட்டை உடனடியாக ஆரம்பியுங்கள். கோடீஸ்வரர் ஆவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஒருவர் தனது 30 வயதில் மாதம் ரூ. 2,860 முதலீடு செய்ய ஆரம்பித்து, அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், அவரின் 60 வயதில் ரூ. 1 கோடி சேர்ந்திருக்கும்" என்றார்.

இதன் பிறகு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் விரிவாக பதில் அளிக்க நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க:

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு