Published:Updated:

குறையும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி... மூத்த குடிமக்கள் என்ன செய்யலாம்?

மூத்த குடிமக்கள்...
பிரீமியம் ஸ்டோரி
மூத்த குடிமக்கள்...

வட்டி விகிதம்

குறையும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி... மூத்த குடிமக்கள் என்ன செய்யலாம்?

வட்டி விகிதம்

Published:Updated:
மூத்த குடிமக்கள்...
பிரீமியம் ஸ்டோரி
மூத்த குடிமக்கள்...

கடந்த பத்து வருடங்களாகவே வங்கி சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை அண்மையில் தாக்கல் செய்திருக்கிறார். அதில் அவர், “நோய்த்தொற்றுக்குமுன்னர் மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கிகள் 8.5% - 9% வரை வட்டி கொடுத்தன. தற்போது இந்த வட்டி 7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டி ருக்கிறது. இதனால், இந்தத் தொகையை நம்பி வாழும் மூத்த குடிமக்கள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்திருக் கிறார்கள். ஆகவே, நோய்த்தொற்றுக்கு முன்னர் வழங்கப்பட்ட வட்டி விகிதத்தை மூத்த குடிமக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டிருந்தார்.

வித்யா பாலா
வித்யா பாலா

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “இது மத்திய அரசின் கொள்கை முடிவு. அதனால், இது குறித்த எந்த ஓர் உத்தரவையும் எங்களால் பிறப்பிக்க இயலாது. அதே சமயம், மூத்த குடிமக்கள் பிக்ஸட் டெபாசிட் சேமிப்பின் மூலமாகக் கிடைக்கும் வட்டியை மட்டுமே நம்பி வாழ்வதால், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. வட்டி விகிதங்களை மத்திய அரசு தொடர்ந்து குறைக்க என்ன காரணம், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களை விட்டால், மூத்த குடிமக்களுக்கு வேறு சேமிப்புத் திட்டங்களே இல்லையா என நிதி ஆலோசகர் வித்யா பாலாவிடம் பேசினோம்.

குறையும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி... மூத்த குடிமக்கள் என்ன செய்யலாம்?

வட்டி ஏன் குறைக்கப்படுகிறது..?

“முன்பெல்லாம் வங்கிகள், தங்களை நம்பி மக்கள் சேமிக்கும் பணத்தை வைத்துதான் பிசினஸ் செய்தன. மக்களின் பணத்தை அதிக வட்டியில் கடனாகக் கொடுத்து அல்லது அந்தப் பணத்தை வருமானம் தரக்கூடிய முதலீடுகளில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை வட்டியாக மக்களுக்கு திருப்பிக் கொடுத்தன. அதனால் அன்றைய நிலையில் வங்கி எஃப்.டி சேமிப்புக்கு அதிகமான வட்டி வழங்கப்பட்டது.

2000-க்கு முன்பு வரை வங்கி எஃப்.டி-க்கு அதிகமான வட்டி வழங்கப்பட்டு வந்தது. 2003-2004-ல்தான் வரலாறு காணாத வீழ்ச்சியை வங்கி சேமிப்புத் திட்டங்கள் சந்திக்க ஆரம்பித்தன. அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்த ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புக்கான வட்டி விகிதம் தற்போது 5 - 7% என்கிற நிலையில் இருக்கிறது.

இன்றைய நிலையில் வங்கிக்கு பல்வேறு வழிகளில் பணம் வருவதால், அதுவே வங்கிகளுக்கான போதுமான தாக இருக்கிறது. மக்களிடமிருந்து அவர்கள் பணத்தை எதிர்பார்க்கவில்லை. இதனால்தான், வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்கள்...

பொதுத்துறை வங்கிகளைவிட, தனியார் வங்கிகள் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் பலவும் வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தைவிட கூடுதல் வட்டி விகிதத்தை மூத்த குடிமக்களுக்கு வழங்கி வருகின்றன. அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக் கப்பட்டுள்ள சேமிப்புத் திட்டமான ‘Senior Citizen Savings Scheme (SCSS)’ 7.40% வட்டியை மூத்த குடிமக்களுக்கு தருகிறது. அதே போல, எல்.ஐ.சி நிறுவனத்தில் ‘Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY)’ என்கிற மூத்த குடிமக்களுக்கான திட்டமும் 7.40% வட்டியை வழங்குகிறது. ஆனால், இந்த இரு திட்டங்களிலும் ஒருவர் அதிகபட்சம் ரூ.15 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

இவை தவிர, வங்கிகளில் ‘Floating Rate Savings Bond’ என்கிற சேமிப்புத் திட்டமும் மூத்த குடிமக்கள் பரிசீலிக்கலாம். இதற்கான வட்டி விகிதம் 7.15%. இந்தத் திட்டத்தில் பெயரில் பாண்டு என்று இருந்தாலும், இது ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு ஆரம்பிப்பது போன்ற நடைமுறை களைக் கொண்டதுதான். டீமேட் கணக்கு இதற்குத் தேவையில்லை. ஆனால், இதற்கான வட்டி விகிதம் மாற்றத்துக்கு உட்பட்டது. இந்தச் சேமிப்பில் பணத்தைப் போட அதிகபட்ச வரையறை கிடையாது.

கார்ப்பரேட் டெபாசிட் திட்டங்கள்...

கார்ப்பரேட் டெபாசிட்டிலும், ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்கிலும் அதிக வட்டி கிடைத்தாலும், இவற்றில் முதலீடு செய்வதில் ரிஸ்க் அதிகம் இருக்கிறது. இருப்பினும், தற்போது வங்கி எஃப்.டி-க்கு ரூ.5 லட்சம் வரை இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு இருப்பதால், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ரிஸ்க் அதிகம் என்றாலும்கூட, குறைந்த மதிப்புள்ள தொகையை ஃபிக்ஸட் சேமிப்பாகப் போட்டு வைப்பதில் தவறில்லை” என்றார். மூத்த குடிமக்கள் இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு நடப்பார்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism