Published:Updated:

ஃபிக்ஸட் டெபாசிட் Vs கடன் ஃபண்ட்... எது யாருக்கு லாபகரமாக இருக்கும்?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

ஃபிக்ஸட் டெபாசிட் Vs கடன் ஃபண்ட்... எது யாருக்கு லாபகரமாக இருக்கும்?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

நம் மக்களில் பலரும் ஃபிக்ஸட் டெபாசிட்டை அதிகம் நாடுபவர்களாக இருக்கிறார்கள். வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்வதால், மூலதனத்துக்கு எப்போதும் பாதுகாப்பு என்று அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். சமீப காலமாக, பலரும் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட்டுவிட்டு, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்யத் தொடங்கி யிருக்கிறார்கள்.

ஆர்.வெங்கடேஷ்
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ் நிறுவனர்,  www.gururamfinancialservices.com

ஒருவரின் முதலீட்டுக் காலம் குறுகிய காலமாக அதாவது, மூன்றாண்டுக்குள் இருக்கும்பட்சத்தில் ஃபிக்ஸட், கடன் ஃபண்டுகள் - இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் லாபகரமாக இருக்கும் என்கிற கேள்விக்கான பதிலை இப்போது பார்ப்போம்.

முதலீட்டுக் காலம் ஓராண்டுக்கு மேலும் மூன்று ஆண்டுக்கு உள்ளும் இருக்கும் எனில், ஃபிக்ஸட் டெபாசிட் சுமார் 5%, கம்பெனி டெபாசிட் போன்றவை மூலம் சுமார் 5% - 6%, தபால் அலுவலக டைம் டெபாசிட்டில் 5.5% வருமானம் கிடைக்கும்.

கடன் ஃபண்டுகளில் ஷார்ட் டூரேஷன் ஃபண்ட் (Short Duration Fund) திட்டங்கள் இந்த முதலீட்டுக் காலத்துக்கு ஏற்றதாக இருக்கும். அந்த ஃபண்ட் சராசரி வருமானம் சுமார் 5 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால், டாப் ஐந்து ஃபண்டுகளின் வருமானம் 5.5 சதவிகிதத்தில் இருந்து 11.5 சதவிகிதமாக இருக்கிறது. அது என்ன ஷார்ட் டூரேஷன் ஃபண்ட்?

இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியானது 1 மற்றும் 3 ஆண்டுகள் இடையே முதிர்வு கொண்ட கடன் சந்தை மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.

இது ஒரு ஓப்பன் எண்டட் ஃபண்ட் ஆகும். மூன்று ஆண்டுக்கு உட்பட்ட நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்டுகள் இரண்டுக்கும் ஒரே மாதிரிதான் வருமான வரி விதிக்கப்படும். அதாவது, லாபத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். அந்த வகையில், மூன்று ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்டுகள் மூலம் ஒரே வருமானம் வந்தால் இரண்டுக்கும் வரிக்குப் பிந்தைய நிலையில் ஒரே வருமானம்தான் கிடைக்கும்.

ஃபிக்ஸட் டெபாசிட் Vs கடன் ஃபண்ட்... எது யாருக்கு லாபகரமாக இருக்கும்?

கடன் ஃபண்ட் வசதிகள்

ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் எந்த வகையில் எல்லாம் லாபகரமாக இருக்கும்?

ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு ஆண்டுதோறும் வரி கட்ட வேண்டும். இதுவே கடன் ஃபண்டுகள் என்கிறபோது எப்போது யூனிட்டுகளை விற்று பணமாக்குகிறமோ, அப்போது வரி கட்டினால் போதும்.

அடுத்து ஃபிக்ஸட் டெபாசிட் இரண்டு வருடங்களுக்குப் போட்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இடையில் சிறிது பணம் தேவைப்பட்டாலும் அந்த ஃபிக்ஸட் டெபாசிட் தொகையை முழுமையாக எடுக்க வேண்டும். முதிர்வுக் காலத்துக்கு முன் இடையில் எடுக்கும்பட்சத்தில், அபராதம் இருக்கிறது.

கடன் ஃபண்டுகளில் அப்படிக் கிடையாது. எவ்வளவு தொகை தேவையோ, அதற்கேற்ற யூனிட்டுகளை மட்டும் விற்றுப் பணமாக்கிக் கொள்ள முடியும். ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்குப் பிறகு, பணத்தை எடுக்கும் பட்சத்தில் வெளியேறும் கட்டணம் என்கிற அபராதம் இருக்காது.

ஃபிக்ஸட் டெபாசிட் முதிர்வு அடைந்த வுடன் அந்தத் தொகையை எடுத்துவிட வேண்டும். அது தானே புதுப்பிக்கப்படாது. புதுப்பிக்க மறந்துவிட்டால், கூடுதல் நாள்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்குரிய வட்டி போட மாட்டார்கள்; அதற்குக் குறைவாக வங்கிச் சேமிப்பு கணக்கான வட்டிதான் போடு வார்கள். மேலும், புதுப்பிக்க விரும்பினால், எஃப்.டி முதிர்வடைவதற்கு 7 முதல் 15 நாள்களுக்குள் வங்கிக்குச் சென்று அதை நீட்டிக்க வேண்டும். இந்தக் கால வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.

கடன் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, முதலீட்டுக் காலம் எல்லையற்றது. முதலீட்டாளர்கள் முழுப் பணத்தையும் எடுக்காத வரைக்கும் அந்த முதலீட்டுக் கணக்குத் தொடரும். குறுகிய காலத்தில் எஃப்.டி போன்ற முதலீடுகளுக்கும் கடன் ஃபண்டுகளும் இடையே வருமான வரி கட்டுவதில் என்ன வேறுபாடு இருக்கிறது?

எப்போது கடன் ஃபண்ட் லாபம்?

நாம் இங்கே எளிதாகப் புரிந்துகொள்ள ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கும் கடன் ஃபண்டுக்கும் ஆண்டுக்கு 5% வருமானம் கிடைப்பதாக எடுத்துக்கொள்வோம். தலா ரூ.10 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் மீடியம் டூரேஷன் கடன் ஃபண்டில் (என்.ஏ.வி ரூ.100. குரோத் ஆப்ஷன்) முதலீடு செய்திருப்பதாக வைத்துக்கொள்வோம். ஓராண்டு முடிவில் இரு முதலீடுகளின் மதிப்பும் ரூ.10,50,000-ஆக அதிகரித்திருக்கும். அவசரச் செலவுக்கு ரூ.4 லட்சம் தேவை. ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.2 லட்சம் மற்றும் கடன் ஃபண்டில் ரூ.2 லட்சம் எடுப்பதாக வைத்துக் கொள்வோம்.

இந்த நிலையில் எப்படி வரி விதிக்கப்படும்? கடன் ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பு ரூ.100-லிருந்து ரூ.105-ஆக அதிகரித்துள்ளது. ரூ. 2 லட்சம் தேவைக்கு 1,905 யூனிட்டுகள் விற்கப்பட்டிருக் கின்றன. மூன்று ஆண்டுக்குள் விற்றதால், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக ஒருவர் எந்த வருமான வரம்புக்குள் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்.

குறுகிய கால மூலதன ஆதாயம் = விற்கப்பட்ட யூனிட்டுகள் எண்ணிக்கை X (விற்பனை விலை – வாங்கிய விலை) = 1905 X (105 – 100) = ரூ.9,525.

இங்கே ஒருவர் 30% வரி வரம்பில் வந்தால், அவர் கட்ட வேண்டிய ரூ.2,857.5 ஆகும். 20% வரி வரம்பில் வந்தால், அவர் கட்ட வேண்டிய ரூ.1,905 ஆகும். 5% வரி வரம்பில் வந்தால், அவர் கட்ட வேண்டிய ரூ.476 ஆகும்.

ஃபிக்ஸட் டெபாசிட்டில் மூலதனத்தில் வரிப் பிடித்தம் (TDS) இல்லை என்று வைத்துக் கொள்வோம். மொத்த டெபாசிட் ரூ.10 லட்சத்தில், ரூ.2 லட்சம் எடுப்பதற்கு அபராதம் எதுவும் போடப்படவில்லை எனவும் வைத்துக்கொள்வோம்.

ஃபிக்ஸட் டெபாசிட் Vs கடன் ஃபண்ட்... எது யாருக்கு லாபகரமாக இருக்கும்?

ஃபிக்ஸட் டெபாசிட்டை பொறுத்தவரை, ரூ.2 லட்சம் மட்டும் எடுக்கப்பட்டாலும், அந்த நிதி ஆண்டில் ஈட்டிய மொத்த வட்டிக்கும் அந்த நிதி ஆண்டியிலேயே வரி கட்ட வேண்டும். ரூ. 10 லட்சம் என்பது நிதி ஆண்டு இறுதியில் 10,50,000 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

இங்கே வட்டி வருமானம் ரூ.50,000-க்கு எந்த வருமான வரம்பில் ஒருவர் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். ஒருவர் 30% வரி வரம்பில் வந்தால், அவர் கட்ட வேண்டிய ரூ.15,000 ஆகும். ஒருவர் 20% வரி வரம்பில் வந்தால் அவர் கட்ட வேண்டிய ரூ.10,000 ஆகும். ஒருவர் 5% வரி வரம்பில் வந்தால் அவர் கட்ட வேண்டிய வரி ரூ.2,500 ஆகும்.

இங்கே குறுகிய கால முதலீட்டைப் பொறுத்தவரை, எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் கடன் ஃபண்டில்தான் குறைவான வரி வருகிறது. மேலும், டி.டி.எஸ், முன்கூட்டியே டெபாசிட்டை எடுப்பதற்கு அபராதம் ஆகிய வற்றைக் கணக்கிட்டால் எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டித் தொகை குறைவாகவே இருக்கும்.

இதுவே, ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்ட் முதலீட்டை ஓராண்டு நிறைவில் மொத்தமாக எடுக்கும்பட்சத்தில் மொத்த வட்டி மற்றும் மொத்த குறுகிய கால மூலதனத்துக்கும் வரி வரம்புக்கேற்ப வருமான வரி கட்ட வேண்டும். அதாவது, ஃபிக்ஸட் டெபாசிட் மூலமும் கடன் ஃபண்ட் மூலமும் ரூ.50,000 வருமானம் கிடைத்திருக்கும்பட்சத்தில், ஒருவர் எந்த வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டிவரும்.

அப்போது இரண்டு முதலீட்டிலும் ஒரே தொகைதான் வரி கட்ட வேண்டும். உதாரண மாக, 30% வரி வரம்பில் வரும் ஒருவர் ஃபிக்ஸட் டெபாசிட் லாபம் ரூ.50,000 மற்றும் கடன் ஃபண்ட் குறுகிய கால மூலதன ஆதாயம் இரண்டுக்கும் ரூ.15,000 வரி கட்ட வேண்டும்.

அதேநேரத்தில் டாப் ஃபண்டுகளை (பார்க்க அட்டவணை) தேர்வு செய்து முதலீடு செய்யும் போது ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட வரிக்கு முந்தைய மற்றும் வரிக்கு பிந்தைய நிலையில் கடன் ஃபண்டுகளில் நிச்சயம் அதிக வருமானம் கிடைக்கக்கூடும். இதற்கேற்ப திட்டமிட்டு முதலீடு செய்யவும்.

ஆக, நேரம் காலம் பார்க்காமல் கொஞ்சம் அலசி ஆராய்ந்து முதலீடு செய்யும்பட்சத்தில், உங்களுக்கு அதிகமான லாபம் கிடைக்கும் என்பதற்கு நாம் பார்த்த இந்தக் கணக்குகளே சாட்சி!