பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்ட்... நீண்ட கால முதலீட்டில் எது யாருக்கு லாபம்?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

முதலீடு

முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் எனில், தற்போதைய நிலையில் ரிஸ்க் குறைவான வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 3 - 5 ஆண்டுகளுக்கு 5.3 - 5.5% வட்டி தரப்படுகிறது. ஓரளவு ரிஸ்க் கொண்ட ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் சுமார் 6 - 6.5% வட்டி கிடைக்கிறது. சற்று ரிஸ்க் கொண்ட கம்பெனி டெபாசிட்க்கு 6.5% வட்டி கிடைக் கிறது. ரிஸ்க் இல்லாத போஸ்ட் ஆபீஸ் மூன்று ஆண்டு டைம் டெபாசிட்க்கு 5.5% வட்டி கிடைக்கிறது.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ்  நிறுவனர்,  www.gururamfinancialservices.com

மீடியம் டூரேஷன் மியூச்சுவல் ஃபண்ட்

மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய ஏற்றதாக, மீடியம் டூரேஷன் மியூச்சுவல் ஃபண்ட் (Medium Duration Mutual Fund) உள்ளது. இந்த ஃபண்டில் டாப் 5 ஃபண்டு களின் வருமானம் 8% - 9% இருக்கிறது. ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம் சுமார் 6 சதவிகித மாக இருக்கிறது.

இந்தக் குறிப்பிட்ட முதலீட்டுப் பிரிவு களுடன் ஒப்பிடும்போது கடன் ஃபண்டுகளில் ஓரளவுக்கு ரிஸ்க் இருக்கிறது. அதேநேரத்தில், இதர முதலீடுகளில் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் கடன் ஃபண்டுக்கு இருக்கிறது. அந்த முதலீடு மூன்று ஆண்டுகளைத் தாண்டி இருக்கும்பட்சத்தில், பணவீக்க விகித சரிக் கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும் என்பதாகும்.

நீண்ட காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%) வருமான வரி கட்ட வேண்டும். அந்த வகையில் வரிக்குப் பிந்தைய நிலையில் கடன் ஃபண்டுகள் லாபகர மாக இருக்கிறது.

மூன்று ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யக் கூடிய மீடியம் டூரேஷன் ஃபண்டில் முதலீட் டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம் மூன்று மற்றும் நான்கு ஆண்டுகள் இடையே முதிர்வுகொண்ட கடன் சந்தை மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். இது ஒரு ஓப்பன் எண்டட் ஃபண்ட் ஆகும். அதாவது, இந்த ஃபண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை வெளியே எடுக்கலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்ட்... நீண்ட கால முதலீட்டில் எது யாருக்கு லாபம்?

வருமான வரி எப்படி?

மூன்று ஆண்டுக்கு மேற்பட்ட நிலையில் அதாவது, நீண்ட காலத்தில் வரிக்குப் பிந்தைய நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்ட் எது லாபகரமாக இருக்கும் எனப் பார்ப்போம்.

மூன்று ஆண்டுக்கு மேற்பட்ட நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப 5%, 20% மற்றும் 30% வரி கட்ட வேண்டும். கடன் ஃபண்ட் என்கிறபோது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பணவீக்க சரிக் கட்டலுக்குப் (Indexation) பிறகு, 20% வரி கட்ட வேண்டும். ஒருவர் 5% வரி வரம்பில் வந்தாலும் இந்தக் கணக்குதான்.

ஒருவர் தலா ரூ.10 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக வைத்துகொள்வோம். ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்ட் மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 6% வருமானம் தருவதாக வைத்துகொள்வோம். (பார்க்க அட்டவணை1).

முதலில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எப்படி வரி கட்ட வேண்டும் எனப் பார்ப்போம். ஒருவர் 30% வரி வரம்பில் வந்தால், அவர் கட்ட வேண்டிய தொகை ரூ.58,685 ஆகும். ஒருவர் 20% வரி வரம்பில் வந்தால், அவர் கட்டவேண்டிய தொகை ரூ.39,124 ஆகும். ஒருவர் 5% வரி வரம்பில் வந்தால் அவர் கட்ட வேண்டிய தொகை ரூ.9,781 ஆகும்.

ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்ட்... நீண்ட கால முதலீட்டில் எது யாருக்கு லாபம்?

கடன் ஃபண்டில் ஒருவர் எப்படி வரி கட்ட வேண்டும் என்பதை இனி பார்ப்போம். இங்கே ஒருவர் 30%, 20% மற்றும் 5% என எந்த வரி வரம்பில் வந்தாலும், ரூ.33,255 வரி கட்ட வேண்டும். அதன்படி பார்க்கும்போது, 20% மற்றும் 30% வருமான வரி வரம்பில் வருபவர்களுக்கு நீண்ட காலத்தில், மூன்று ஆண்டுக்குப் பிறகு எஃப்.டி-யைவிட கடன் ஃபண்டு களில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கிறது.

இதுவே, வரி வரம்புக்குள் வராதவர்கள் (0%) மற்றும் 5% வருமான வரம்புக்குள் வருபவர் களுக்கு நீண்ட காலத்தில் கடன் ஃபண்டுகளைவிட ஃபிக்ஸட் டெபாசிட் லாபரமானதாக இருக்கிறது.

இவர்கள் ரிஸ்க் இல்லாத எஃப்.டி-களில் முதலீடு செய்வது நல்லது. இதற்கு ஏற்ப திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியமாகும்.

உங்கள் வருமானம் மற்றும் கட்ட வேண்டிய வரியை வைத்து நீங்கள் முடிவு செய்வது சரியான முடிவாக இருக்கும்!