Published:Updated:

ஃப்ளிப்கார்ட்: 27 சதவிகித பங்கு... அர்விந்த் ஃபேஷனில் ரூ.260 கோடி முதலீடு!

ஃப்ளிப்கார்ட் - அர்விந்த் ஃபேஷன்
ஃப்ளிப்கார்ட் - அர்விந்த் ஃபேஷன்

கொரோனாவால் ஏற்பட்ட இழப்பீடு காரணமாக மார்ச் 31 வரை மட்டுமே 35 சதவிகித இழப்பை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சந்தித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ. 208 கோடியாகும்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அர்விந்த் ஃபேஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அர்விந்த் யூத் பிராண்டில் 27 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. இந்தப் பங்குகளின் மொத்த விலை ரூ. 260 கோடியாகும். இதே போல் ஃப்ளிப்கார்ட், மின்ட்ரா ஆகிய இ-காமெர்ஸ் நிறுவனங்களில் விற்பனை செய்து வந்த ஃப்ளையிங்க் மெசின் ப்ராண்டையும் அர்விந்த் யூத் ப்ராண்ட் வாங்க உள்ளது. இந்த முதலீடு குறித்து ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், ``இந்த முதலீடு மூலம் அர்விந்த் யூத் ப்ராண்டுடன் இணைந்து எங்கள் சந்தையை விரிவுப்படுத்த உள்ளோம். ஏற்கெனவே ஃப்ளையிங்க் மெசின் ப்ராண்டும் இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது’ என்றார்.

ஃப்ளிப்கார்ட், அமேசான்... இ-காமர்ஸ் நிறுவனங்களின்
நஷ்டத்துக்கு என்ன காரணம்?
ஃப்ளிப்கார்ட்
ஃப்ளிப்கார்ட்

ப்ளையிங்க் மெசின் ப்ராண்ட் கடந்த 2019-ல் மட்டுமே ரூ. 365 கோடிக்கு விற்பனை செய்திருந்தது. இதில் 36 சதவிகித விற்பனை அர்விந்த் ஃபேஷன்ஸிலிருந்து வந்தது. தற்போது அர்விந்த் ஃபேஷன்ஸ் ப்ளையிங்க் மெசின் ப்ராண்டை வாங்கியுள்ளதை பற்றி, அர்விந்த் ஃபேஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜே சுரேஷ் கூறுகையில், ``ப்ளையிங்க் மெஷின் ரூ. 500 கோடி மதிப்புமிக்க ப்ராண்டாகும். இதை அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பு செய்வதே எங்கள் நோக்கம்" என்றார்.

கொரோனாவால் ஏற்பட்ட இழப்பீடு காரணமாக மார்ச் 31 வரை மட்டுமே 35 சதவிகித இழப்பை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சந்தித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ. 208 கோடியாகும். இதே நேரத்தில்தான் போன வருடம் ரூ 21.30 கோடி லாபத்தை இந்நிறுவனம் பெற்றிருந்தது. ஃப்ளிப்கார்ட், மின்ட்ரா உடன் இணைந்து ஃபேஷன் துறையில் நல்ல முறையிலேயே செயல்பட்டு வந்தது. ஆனால், கொரோனா காரணமாகக் கடும் சரிவை சந்தித்தது ஃபேஷன் துறைதான். தற்போது இணையம் மூலமாகவே உடைகளை வாங்கவும் மக்கள் விரும்புகின்றனர். இதனால் ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்றவற்றை சார்ந்திருப்பதைத் தவிர ஃபேஷன் பிராண்டுகளுக்கு வேறு வழியில்லை என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இணைய விற்பனை சற்றே சூடுபிடித்துள்ளது.

ஃப்ளிப்கார்ட்
ஃப்ளிப்கார்ட்

ஆனாலும் கொரோனாவுக்கு முந்தைய விற்பனையில் 65 சதவிகிதம் மட்டுமே தற்போது வரை வந்துள்ளது. இனி இந்த முதலீட்டுக்குப் பிறகு ஃப்ளையிங்க் மெசின் ப்ராண்ட் பொருள்களும் அர்விந்த் ஃபேஷன்ஸ் உடைகளும் இணைந்து ஃப்ளிப்கார்ட், மின்ட்ரா ஆகியவற்றிலேயே விற்பனை செய்யப்படும். இதனால் அதிக வாடிக்கையாளர்களை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பெறக்கூடும். அதே சமயம் அர்விந்த் ஃபேஷன்ஸ் உடைகள் நேரடி விற்பனைக்கு கடைகளிலும் கிடைக்கும். இந்த ஊரடங்கில் எல்லா கடைகளும் திறக்கப்பட்டுள்தால் அர்விந்த் ஃபேஷன்ஸ் கடைகளும் 75 சதவிகிதம் திறந்தே உள்ளன. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த புதிய முதலீடு எந்த வகையில் பயன் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு